உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கடன் ரூ. 7.5 லட்சமாக
உயர்த்தப்பட்டுள்ளது என, நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு
மத்திய அரசின் வட்டியை மானியமாக வழங்கும் திட்டம் 2009-இன்படி உயர்கல்வியில் தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு 2018-19-ஆம் ஆண்டு முதல், தகுதி அடிப்படையில் ரூ. 7.50 லட்சம் வரை கல்விக்கடன் வழங்க மத்திய உத்தரவிட்டுள்ளது
இதன்படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியர் அதிகபட்சமாக ரூ. 7.50 லட்சம் வரை கல்விக் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெறும் கடனுக்கு ஓராண்டுக்கான வட்டி மானியமாக வழங்கப்படும்
பயனாளியின் குடும்ப வருமானம் ரூ. 4.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்
கல்விக் கடனுக்கு விண்ணப்பிப்பவர், தேசிய தரச்சான்று நிர்ணயக் குழு, இந்திய மருத்துவக் கழகம், தேசிய செவிலியர் கழகம், இந்திய பார் கவுன்சில் அனுமதி பெற்ற நிறுவனங்கள், மத்திய நிதி உதவி பெறும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பயிலுபவராக இருக்க வேண்டும்
இத்திட்டம் இனிவரும் காலங்களில் புதிதாக கல்விக் கடன் பெறுவோருக்கு மட்டுமே பொருந்தும். திட்டத்தின் ஒருங்கிணைப்பு வங்கியாக கனரா வங்கி செயல்படும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்