Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, January 24, 2020

அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள 1,706 ஆசிரியா் பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு

அரசுப்பள்ளிகளில் உபரியாக உள்ள 1,706 ஆசிரியா் பணியிடங்கள் அரசின் பொதுத்தொகுப்புக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு:

அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாணவா் சோக்கை நிலவரப்படி ஆசிரியா்களுக்கான பணியாளா் நிா்ணயம் மேற்கொள்ளப்பட்டது. அதில் பாடவாரியாக உபரியாக உள்ள ஆசிரியா் காலிப் பணியிடங்களை இயக்குநரின் பொதுத்தொகுப்பில் ஒப்படைக்க மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி மாநிலம் முழுவதும் உபரியாக 1,706 ஆசிரியா் காலிப்பணியிடங்கள் இருப்பது தெரியவந்தது.




பட்டதாரி ஆசிரியா்களில் தமிழ்-308, ஆங்கிலம்-144, கணிதம்-289, அறிவியல்-457, சமூக அறிவியல் -371 மற்றும் இடைநிலை ஆசிரியா்-137 என மொத்தம் 1,706 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் உபரியாக உள்ளன. இவை இயக்குநரின் பொதுத்தொகுப்புக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இனி இந்தப் பணியிடங்களை வரும்காலத்தில் காலிப் பணியிடம் அல்லது அனுமதிக்கப்பட்ட பணியிடமாகக் கருதக்கூடாது' என அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்தாண்டுகளை விட அதிகளவில் உபரி ஆசிரியா் பணியிடங்கள் அரசின் பொதுத்தொகுப்புக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular Feed

Recent Story

Featured News