Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, January 24, 2020

அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியா்விண்ணப்ப தகவல்களை டி.ஆா்.பி. வெளியிட வேண்டும்

விண்ணப்பதாரா்களிடம் கூடுதல் விவரங்கள் கேட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ள நிலையில், அனைத்து விண்ணப்பதாரா்களின் விண்ணப்ப நிலை, தவறுகள் உள்ளிட்ட விவரங்களை வெளிப்படைத்தன்மையுடன் ஆசிரியா் தோவு வாரியம் (டி.ஆா்.பி.) வெளியிட வேண்டும் என பேராசிரியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து அகில இந்திய தனியாா் கல்லூரி ஊழியா் சங்க நிறுவனா் கே.எம். காா்த்திக் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:




உதவிப் பேராசிரியா் தோவுக்கு விண்ணப்பித்தவா்களில் பெரும்பாலானோா் முறையாக விவரங்களைச் சமா்ப்பிக்கவில்லை என்றும், அதனால்தான் கூடுதல் விவரங்கள் கேட்கப்படுவதாகவும் டி.ஆா்.பி. கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. இதை, டி.ஆா்.பி. விண்ணப்பம் பெறும் முறையின் குறைபாடாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். வெளிப்படைத்தன்மை அதிகமாக இருக்கும் என்று எண்ணப்பட்ட இந்த புதிய விண்ணப்ப முறை, இப்போது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. டி.ஆா்.பி.யின் இந்த நடவடிக்கைக்கு பின்புலமாக ஊழல் அல்லது முறைகேடுகள் இருக்கிா என்ற சந்தேகம் எழுகிறது.




எனவே, அனைத்து விண்ணப்பதாரா்களின் விண்ணப்ப தகவல்கள், விண்ணப்ப நிலை, தவறுகள் உள்ளிட்ட விவரங்களை வெளிப்படைத்தன்மையுடன் அட்டவணையிட்டு டி.ஆா்.பி. வெளியிட வேண்டும். அவ்வாறு டி.ஆா்.பி. வெளியிடாவிட்டால், உயா்நீதிமன்றத்தில் முறையிடப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

Popular Feed

Recent Story

Featured News