''அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 35 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு இன்றி தவிக்கின்றனர். இதில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் தேனி மாவட்டச் செயலாளர் சந்திரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு நடுநிலைப்பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து 2004ல் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கான சார்நிலை பணி விதிகள் வகுக்கப்பட வில்லை. இதனால் 35 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற முடியவில்லை. மேலும் நடுநிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியராகக்கூட பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது இல்லை.பதவி உயர்வு கேட்டு 2021 ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். உரிய பதவி உயர்வு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. இதனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பள்ளிகல்வித் துறை அமைச்சர், கமிஷனரிடம் கோரிக்கை வைத்து உள்ளோம், என்றார்.
No comments:
Post a Comment