தமிழ்நாட்டில் மேலும் 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்து உள்ளது.
இதன் காரணமாக கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும். டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஈரோட்டில் உள்ள நந்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை 150 இடங்களுடன் முதலாம் ஆண்டு சேர்க்கை தொடங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 150 இடங்களுக்கு நீட்-2023 மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம்-தமிழ்நாடு தனியார் பல்கலைக் கழகச் சட்டம் 2019ன் கீழ் நிறுவப்பட்டு 2021-ம் ஆண்டில் சேர்க்கையை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ.சி. மருத்துவ கல்லூரிக்கும் உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ். 'சீட்'கள் கிடைக்கும். இதன் மூலம் மொத்தம் எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை 11,575-ஆக உயர்ந்து உள்ளது. தமிழ்நாட்டில் மொத்த மருத்துவ கல்லூரி எண்ணிக்கை 74-ஆக அதிகரித்து உள்ளது.
No comments:
Post a Comment