கிரெடிட் கார்டு ரூல்ஸ் மாற்றம்; புதிய கட்டணங்களை அறிவித்த வங்கி! - தமிழ்க்கடல்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, June 28, 2024

கிரெடிட் கார்டு ரூல்ஸ் மாற்றம்; புதிய கட்டணங்களை அறிவித்த வங்கி!

ஹெச்.டி.எஃப்.சி பேங்க் தனது கிரெடிட் கார்டுகளுக்கான விதிமுறைகளை மாற்றியுள்ளது.

இதன்படி, புதிய விதிமுறைகள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருக்கின்றன. வாடகை, கல்வி, பில் கட்டணம் போன்றவற்றுக்கான விதிமுறைகள் மாற்றப்படுவதாக ஹெச்.டி.எஃப்.சி பேங்க் அறிவித்துள்ளது.

வாடகைக் கட்டணம்...

CRED, PayTM, MobiKwik, Freecharge, Cheq போன்ற மூன்றாம் நபர் செயலிகளில் ஹெச்.டி.எஃப்.சி பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாடகை செலுத்தினால், 1% பரிவர்த்தனைக் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஒரு பரிவர்த்தனைக்கு 3,000 ரூபாய் வரை பரிவர்த்தனைக் கட்டண உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான வாடகை பரிவர்த்தனைகளுக்கும் இது பொருந்தும்.

மூன்றால் நபர் செயலிகளில் ஹெச்.டி.எஃப்.சி கிரெடிட் கார்டு பயன்படுத்தி கல்விக் கட்டணம் செலுத்தினால் அதற்கு 1% பரிவர்த்தனைக் கட்டணம் வசூலிக்கப்படும். அதிகபட்சமாக ஒரு பரிவர்த்தனைக்கு 3,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

பள்ளி, கல்லூரியில் நேரடியாக கிரெடிட் கார்டு பயன்படுத்தி கட்டணம் செலுத்தினால் அதற்கு பரிவர்த்தனைக் கட்டணம் வசூலிக்கப்படாது. அதே போல, சர்வதேச கல்விக் கட்டணங் களுக்கும் பரிவர்த்தனைக் கட்டணம் கிடையாது.

பில் கட்டணம்...

50,000 ரூபாய்க்கும் மேலான பெரிய பெரிய பில் கட்டணங்களை (Utility Bills) ஹெச்.டி.எஃப்.சி கிரெடிட் கார்டு பயன்படுத்தி செலுத்தினால், அதற்கு 1% பரிவர்த்தனைக் கட்டணம் வசூலிக்கப்படும். அதிகபட்சமாக ஒரு பரிவர்த்தனைக்கு 3,000 ரூபாய் வரை வசூலிக்கப்படும்.

ரிடெம்ப்ஷன் கட்டணம்...

கிரெடிட் கார்டுக்கு கிடைக்கும் ரிவார்டுகளை ரெடீம் (Reward Redemption) செய்வதற்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

கிரெடிட் கார்டு கட்டணம் உயர்வு...

6E Rewards XL-Indigo HDFC Bank Credit Card கார்டுக்கான ஆண்டுக் கட்டணம் 1,500 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 6E Rewards-IndiGo HDFC Bank Credit Card கார்டுக்கான ஆண்டுக் கட்டணம் 500 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

புராசஸிங் கட்டணம்...

ஹெச்.டி.எஃப்.சி கிரெடிட் கார்டில் ஈஸி இ.எம்.ஐ (Easy EMI) வசதியை பயன்படுத்துவதற்கு 299 ரூபாய் புராசஸிங் கட்டணமாக வசூலிக்கப்படும்.

தாமதக் கட்டணம்...

கிரெடிட் கார்டு கட்டணத்தை தாமதமாகச் செலுத்தினால், அவுட்ஸ்டாண்டிங் தொகைக்கு (outstanding amount) ஏற்ப 100 ரூபாய் முதல் 1,300 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad