Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, September 19, 2024

நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால்...

நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. அதனால் தான் ஆயுர்வேதத்தில் நெல்லிக்காயை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
மேலும் நெல்லிக்காயால் செய்யப்படும் ஜூஸானது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காகஅதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும். இப்போது அந்த நெல்லிக்காய் ஜூஸை எப்படியெல்லாம் குடிக்க வேண்டும். அவ்வாறு குடிப்பதால், உடலுக்கு என்ன நன்மையெல்லாம் கிடைக்கும் என்பதனைப் பார்ப்போமா!!!

நீரிழிவு:

நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால், நல்லது.

உடல் எடை:

நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது குறையும்.

ஆஸ்துமா:

நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும்.

மலச்சிக்கல்:

நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.

இரத்த சுத்திகரிப்பு:

நல்ல ஃப்ரஷ்ஷான நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

சிறுநீர் எரிச்சல்:

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகையஎரிச்சலைப் போக்குவதற்கு, தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்.

உடல் குளிர்ச்சி:

கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் சிறந்ததாக இருக்கும்.

அதிகமான இரத்தப்போக்கு:

மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும் போது, தினமும் மூன்று முறை சிறிது நெல்லிக்காய் ஜூஸையும், கனிந்த வாழைப்பழத்தையும் சாப்பிட்டால்,சரிசெய்துவிடலாம்.

அழகான முகம்:

முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.

இரத்தசோகை:

உடலில் இரத்தம் குறைவினால் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுக்க, தினமும் நெல்லிக்காய் சாற்றை குடித்தால், இரத்த சிவப்பணுக்களின்எண்ணிக்கை அதிகமாகி, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

இதய நோய்:

இதயம் பலவீனமாக இருப்பவர்கள், தினமும் நெல்லிக்காய் சாற்றை அளவாக குடித்து வந்தால், இதயத்தில் ஏற்படும் பிரச்சனையை சரிசெய்யலாம்.

சரும பிரச்சனைகள்:

நெல்லிக்காய் ஜூஸ் சரும பிரச்சனைகளை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்தது. குறிப்பாக முகப்பரு, பிம்பிள் உள்ளவர்கள், அதனை குடித்தால் போக்கிவிடலாம்.

கண் பார்வை:

நெல்லிக்காய் சாற்றைக் குடித்தால், கண் பார்வை அதிகரிக்கும்.

முதுமைத் தோற்றம்:

நெல்லிக்காய் சாறு உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, முதுமைத் தோற்றமானது விரைவில் வெளிப்படுவதை தடுக்கும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News