Breaking

Sunday, January 25, 2026

Sunday, January 25, 2026

ஊதா நிற உருளைக்கிழங்கு

ஊதா நிற உருளைக்கிழங்கு பெருங்குடல் புற்றுநோயை முற்றிலும் அழிக்கிறது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

தென் அமெரிக்காவை பிறப்பிடமாக கொண்ட ஊதா நிற உருளைக்கிழங்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகும்.

இந்நிலையில் இந்த உருளைக்கிழங்கை மதியம் மற்றும் இரவு வேளைகளில் எடுத்துக்கொள்வதன் மூலம் புற்றுநோய் செல்களை அழிக்கிறது.

உருளையில் உள்ள ஆந்தோசியானின்ஸ், குளோரோஜெனிக் அமிலம் மற்றும் ஸ்டார்ச் ஆகியவை இந்தப் புற்றுநோய் செல்களை வேருடன் அழிக்கும் காரணியாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், பியூட்ரிக் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் கூட்டுவதன் மூலம், நாள்பட்ட அழற்சியைக் சுருக்கி, புற்றுநோய் செல்களை அழிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை புற்றுநோயைத் தடுக்க இந்த உருளைக் கிழங்கை உட்கொண்டாலே போதும் என தெரிவித்துள்ளனர்.
Sunday, January 25, 2026

சத்துணவு , அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! முதல்வரின் அறிவிப்புகள் என்னென்ன?

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு அளித்த பதிலுரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

பேரவையில் அவர் பேசியதாவது:

"கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 2 லட்சம் வீடுகள் உருவாகியுள்ள நிலையில் ரூ. 3,500 கோடியில் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும்.

கிராமப்புற ஊரக சாலைகளை மேம்படுத்தும் பொருட்டு ரூ.1,088 கோடியில் 2,200 கி.மீ. கிராம சாலைகள் மேம்படுத்தப்படும்.

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கைம்பெண்கள், விவசாயிகள், ஆதரவற்ற பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் மேலும் 1.80 லட்சம் பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.

சத்துணவு அமைப்பாளர்கள் , அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ. 2,000-ல் இருந்து ரூ. 3,400 ஆகவும் பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

சத்துணவு அமைப்பாளர்கள் , அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் இறந்தால் குடும்பத்திற்கு ரூ. 1,200 ஓய்வூதியம் வழங்கப்படும்.

தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ. 2,000-ல் இருந்து ரூ. 3,000 ஆகவும் பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ. 50,000 -லிருந்து ரூ. 1 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும். இவர்களில் இறப்பு ஏற்பட்டால் குடும்ப ஓய்வூதியம் ரூ. 1,100 வழங்கப்படும்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, அவர்கள் கோரிய விடுமுறை கால மே மாத ஊதியம் ஆகியவை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் அடுத்த கோரிக்கையான நிரந்தர பணி நியமனத்தை பொருத்தவரை ஓர் அறிவிப்பை நான் வெளியிடுகிறேன்.

அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்பும்போது பகுதிநேர ஆசிரியர்கள் நிரந்தர ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட ஏதுவாக, இதற்கான தேர்வுகளில் அவர்களின் பணிக் காலத்தை அடிப்டையாகக் கொண்டு அவர்களுக்குசிறப்பு மதிப்பெண் வழங்கப்படும். அதனடிப்படையில் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும்.
Sunday, January 25, 2026

2026 நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க தேவையான முக்கிய சான்றிதழ்கள் - சிறு வழிகாட்டி கைடு..!

NEET 2026: விண்ணப்பிக்கத் தேவையான முக்கிய ஆவணங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள்

புகைப்படங்கள் (Photos):

பாஸ்போர்ட் அளவு: சமீபத்தில் எடுத்த வெள்ளை பின்னணி (White background) கொண்ட புகைப்படம். முகம் 80% தெரிய வேண்டும் (தொப்பி, மாஸ்க், கூலிங்கிளாஸ் தவிர்க்கவும்).

போஸ்ட் கார்டு அளவு (4" x 6"): பாஸ்போர்ட் அளவை போன்றே அதே தெளிவுடன் இருக்க வேண்டும்.

கையொப்பம் (Signature): வெள்ளை காகிதத்தில் கருப்பு நிறப் பேனாவால் இடப்பட்ட கையெழுத்து (முழுப் பெயரையும் எழுத வேண்டும், சுருக்கெழுத்து தவிர்க்கவும்).

கைரேகைப் பதிவு (Thumb Impression): வெள்ளை காகிதத்தில் இடது கை பெருவிரல் ரேகை (Left Hand Thumb Impression).

கல்விச் சான்றிதழ்கள்:

10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (பிறந்த தேதி மற்றும் பெயர் சரிபார்ப்பிற்கு).

12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (தேர்ச்சி பெற்றவர்களுக்கு).

சாதிச் சான்றிதழ் (Category Certificate): SC / ST / OBC-NCL / EWS பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PwBD) உரிய சான்றிதழ்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.

அடையாள அட்டை (Identity Proof): ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அல்லது PAN கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று.

NEET பதிவு செய்யும் முன் உங்கள் கைகளில் தயாராக வைத்துக்கொள்ள வேண்டியவை

செயல்படும் Mobile Number , Email ID

தகுதிகள் மற்றும் முக்கியக் குறிப்புகள்

வயது வரம்பு: 31 டிசம்பர் 2026-க்குள் குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு ஏதுமில்லை.

கல்வித் தகுதி: 12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல்/உயிரித் தொழில்நுட்பம் (Physics, Chemistry, Biology/Biotechnology) மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும். 2026-இல் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தொடர்பு விபரங்கள்: ஒரு நிரந்தரமான மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி (Email ID) அவசியம். Gmail பயன்படுத்துவது OTP சிக்கல்களை குறைக்க உதவும்.

தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் (Common Mistakes)

பெயர் குழப்பம்: 10-ஆம் வகுப்பு சான்றிதழில் உள்ளபடியே விண்ணப்பத்தில் பெயர் மற்றும் தந்தை பெயர் இருக்க வேண்டும்.

புகைப்படத் தவறு: பழைய அல்லது தெளிவற்ற புகைப்படங்களை பதிவேற்றுவதைத் தவிர்க்கவும்.

நிதியுறுதிப் பக்கம் (Confirmation Page): விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு 'Confirmation Page'-ஐப் பதிவிறக்கம் செய்ய மறக்காதீர்கள்; இதுவே உங்கள் விண்ணப்பத்திற்கான ஆதாரம்.

தவறான பிரிவு: சாதிப் பிரிவைத் (Category) தேர்வு செய்யும்போது மிகுந்த கவனம் தேவை, ஏனெனில் பின்னர் மாற்ற இயலாது.

உதவிக்காக சில முக்கிய டிப்ஸ் :

Gmail பயன்படுத்தினால் OTP issue குறையும். எல்லா ஆவணங்களும் scanned copy ஆக இருக்க வேண்டும்

NTA குறிப்பிடும் file size & format (JPG/JPEG/PDF) பின்பற்ற வேண்டும்.

பெயர், பிறந்த தேதி அனைத்தும் 10ஆம் சான்றிதழுடன் ஒத்திருக்க வேண்டும்.
Sunday, January 25, 2026

ஆளுநர் திருப்பி அனுப்பிய கூட்டுறவு சங்க மசோதா மீண்டும் நிறைவேற்றம்

ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட, கூட்டுறவுச் சங்கங்களுக்கு இடைக்கால செயலாட்சியர் நியமித்தல் உட்பட மொத்தம் 10 சட்ட மசோதாக்கள் சட்டபேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் திருத்தச் சட்டமுன் வடிவை 2024 டிச.10-ல் அமைச்சர் பெரிய கருப்பன் கொண்டு வந்தார். இந்த மசோதா பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதை ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்தாண்டு ஜூன் 16-ம் தேதி திருப்பி அனுப்பினார்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் நேற்று அந்த மசோதாவை அமைச்சர் பெரியகருப்பன் மீண்டும் தாக்கல் செய்தார். இறுதியில் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட கூட்டுறவுத் திருத்தச் சட்டம் உட்பட மொத்தம் 10 சட்ட மசோதாக்கள் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அவை ஆளுநரின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sunday, January 25, 2026

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒற்றை பென்குயின்

பென்​கு​யின் என்​றதும் அன்​டார்​டிக்​கா​வின் பனிப்​பிரதேசம்​தான் நினை​வுக்கு வரும். அந்த அன்​டார்​டிக்கா பிரதேசத்​தில் தன்​னுடைய கூட்​டத்தை விட்டு தனியே சென்ற ஒற்றை பென்​கு​யின்​தான் இப்​போது இணை​யத்தில் நிரம்​பிக் கிடக்​கிறது.

ஜெர்​மனியைச் சேர்ந்த திரைப்பட இயக்​குநர் வெர்​னர் ஹெர்​சாக் 2007-ம் ஆண்டு இயக்​கிய 'Encounters at the End of the World' ஆவணப்​படத்​தின் காட்​சி​தான் 2026-ம் ஆண்​டான தற்​போது இணை​யதளத்​தில் வைரலாகி வரு​கிறது.

அந்தக் காட்​சி​யில், ஒரு பென்​கு​யின் திடீரென தனது கூட்​டத்தை விட்டு வில​கி, சுமார் 70 கி.மீ. தொலை​வில் உள்ள மலைத்​தொடரை நோக்கிச் செல்​கிறது. அதனுடன் வந்த மற்ற பென்கு​யின்​கள் உணவு மற்​றும் உயிர்​வாழ்​வதற்​காக கடலை நோக்கிச் செல்​லும் நிலை​யில், இந்த பென்​கு​யின் மட்​டும் தனி​யாக மலையை நோக்கிச் செல்​வது அந்தக் காணொலி​யில் தெரி​கிறது. அங்​கு, கடல் இல்​லை, உணவு இல்​லை. மலைகள், பனி, உறைபனி மட்​டுமே உள்​ளது.

தனியே செல்​லும் பென்​கு​யின் காணொலி, ஒவ்​வொரு​வருட​னும் தொடர்​புடைய​தாக உணர வைக்​கிறது. இதனால்​தான், இந்த காணொலி இணை​யதளத்​தில் டிரெண்​டிங்​கில் உள்​ளது. இந்த பென்​கு​யின் ஏன் தனியே செல்ல வேண்​டும், மற்றவர்களைப் போல தானும் சாதாரண வாழ்க்கை வாழாமல், புதிதாக ஏதோ ஒன்றை தேடிச் செல்​கிற​தா, மனச்​சோர்​வா, தனிமையை தேடிசெல்​கிறா, இறந்​து​விடு​வோம் எனத் தெரிந்​தும் அங்கு செல்​கிறதா என பலரும் கருத்துகளையும் கேள்வி​களை​யும் எழுப்புகின்​றனர்.

இந்த டிரெண்​டிங்​கில் அமெரிக்க அதிபர் ட்ரம்​பும் இணைந்​துள்​ளார். ஆர்​டிக் பிராந்​தி​யத்​தில் அமைந்​துள்ள கிரீன்​லாந்து பகு​தியை அமெரிக்கா வசம் ஒப்​படைக்க வேண்​டும் என ட்ரம்ப் தொடர்ந்து பேசி வரும் நிலை​யில், அந்​தப் பகு​தி​யில் பென்​கு​யினுடன் ட்ரம்ப் நடந்து செல்​வது போன்ற ஏஐ-யில் உரு​வான படத்தை வெள்​ளை​மாளிகை வெளி​யிட்​டுள்​ளது. அது​மட்​டும் இல்​லாமல், அந்த தனியே செல்​லும் பென்​கு​யினே விஜய்​தான் என தவெக விர்ச்​சுவல் வாரியர்​ஸும் தங்​கள் பங்​குக்கு பதி​விட்டு வரு​கின்​றனர்.

இதுகுறித்து விஞ்​ஞானிகள், வனவிலங்கு ஆர்​வலர்​கள் கூறுகை​யில், “இந்த பென்​கு​யின் நடத்தை அரிது என்​றாலும், நரம்​பியல் பிரச்​சினை, இனப்​பெருக்ககால மனஅழுத்​தம், குழப்​பத்​தால் இவ்​வாறு செய்​வதற்​கான சாத்​தி​யக்​கூறுகள் இருக்​கின்​றன” எனத் தெரிவிக்​கின்​றனர்​.
Sunday, January 25, 2026

இனி வங்கி கணக்கை வீட்டிலிருந்தே மூடலாம்.! ஒரே ஒரு கிளிக் போதும்..!

தொழில்நுட்பம் அதிவேக வளர்ச்சியைக் கண்டுள்ள நிலையில், வங்கி சேவைகள் முதல் ஷாப்பிங் வரை அனைத்து சேவைகளும் ஆன்லைனில் கிடைக்கின்றன.

பொதுமக்கள் யாரும் வெளியில் சென்று அலைய வேண்டிய அவசியம் இல்லாத வகையில், வீட்டிலிருந்தே அனைத்து சேவைகளையும் பெற முடியும்.

சமீபத்தில் வீட்டிலிருந்தே ஆன்லைன் வழியாக பத்திரப் பதிவு செய்யும் சேவையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அவ்வகையில் வீட்டிலிருந்தே வங்கி கணக்குகளை மூடவும் பல வங்கிகள் அனுமதிக்கின்றன. இருப்பினும் இது குறித்த விழிப்புணர்வும், வழிகாட்டுதலும் இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் வங்கிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வீட்டில் இருந்தே ஆன்லைன் வழியாக வங்கி கணக்குகளை எப்படி மூட வேண்டும்? அதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இன்றைய காலகட்டத்தில் பொதுவாக பலரும் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்துள்ளனர். ஆனால் அனைத்து கணக்குகளையும் பயன்படுத்துவதில்லை. வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கத் தவறினால், அபராதம் விதிக்கப்படும். அதோடு ஏடிஎம், காசோலை உள்ளிட்ட பல சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனை எல்லாம் தவிர்க்க தேவையற்ற மற்றும் பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகளை மூடுவது தான் சிறந்தது. முன்பெல்லாம் வங்கி கணக்குகளை மூட வேண்டும் என்றால், நேரடியாக வங்கி கிளைக்கு சென்று படிவத்தை நிரப்பி, ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டும். ஆனால் இனி வங்கிக் கணக்கை வீட்டிலிருந்தே மூட பல வங்கிகள் அனுமதிக்கின்றன.

வங்கி கணக்கை மூடுவதற்கு முன் கவனிக்க வேண்டியவை:

1. முதலில் உங்கள் வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகை இருப்பு உள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். அந்தத் தொகையை வேறு கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம் அல்லது முழுவதுமாக எடுத்துக் கொள்ளலாம்.

2. உங்கள் வங்கி கணக்கின் கடந்த 2 முதல் 3 வருட ஸ்டேட்மென்ட்டை சரி பார்த்து, பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் எதிர்காலத்தில் வருமான வரித் தாக்கல் செய்யும்போது இந்த ஸ்டேட்மெண்ட் உதவியாக இருக்கும்.

3. ஏதேனும் செலுத்த வேண்டிய மீதித்தொகை, சேவை கட்டணங்கள் மற்றும் மாதத் தவணைகளை செலுத்தி விடுங்கள். செலுத்த வேண்டிய தொகை ஏதேனும் மீதம் இருந்தால் உங்கள் வங்கிக் கணக்கை மூட முடியாது.

4. சில ஆன்லைன் சேவைகளுக்கு தானியங்கி முறையில் கட்டணம் செலுத்தும் முறையை பின்பற்றி வந்தால், இந்த தானியங்கி முறையை ரத்து செய்து விட வேண்டியது அவசியம்.

5. வங்கிக் கணக்கை மூடும் போது, கட்டணம் வசூலிக்கப்படலாம். குறிப்பாக கணக்கு தொடங்கிய ஓராண்டுக்குள் அதனை மூடினால், நிச்சயமாக வங்கிகள் கட்டணத்தை வசூலிக்கும்

ஆன்லைனில் வங்கி கணக்கை மூடும் வழிமுறைகள்:

1. முதலில் வங்கியின் அதிகாரபூர்வ இணையதளம் அல்லது மொபைல் செயலியில் உள்நுழைய வேண்டும்.

2. கணக்கு சேவைகள் (Account Services) அல்லது சேவை கோரிக்கைகள் (Service Requests) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

3. Close Bank Account என்பதை கிளிக் செய்து, வங்கி கணக்கை மூடுவதற்கான காரணத்தை தெளிவாக குறிப்பிட்டு, டிஜிட்டல் கணக்கு மூடல் படிவத்தை நிரப்ப வேண்டும்.

4. இப்போது கோரிக்கை விண்ணப்பம் மற்றும் அடையாள சான்று உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

5. பிறகு மொபைல் ஓடிபி அல்லது மின்னஞ்சல் ஓடிபி சரிபார்ப்பு மூலம், வங்கி கணக்கு மூடலை உறுதி செய்ய வேண்டும்.

6. அதன் பிறகு உங்கள் மொபைல் எண்ணிற்கு வங்கி கணக்கு மூடலுக்கான உறுதிப்படுத்தல் குறுந்தகவல் வரும். அதன் பிறகு வங்கிகள் உங்கள் கோரிக்கையை ஏற்று, செயல்படுத்த ஒருசில நாட்கள் ஆகலாம் அதுவரை நீங்கள் காத்திருப்பது அவசியம்.

வங்கி கணக்கு மூடலுக்கான கோரிக்கையை சமர்ப்பித்த பிறகு வங்கிகள் உங்களின் பயன்படுத்தப்படாத ஏடிஎம் கார்டு மற்றும் காசோலை புத்தகத்தை நேரில் வந்து கொடுக்கும்படி சொல்லலாம். மேலும் சரிபார்ப்புக்காகவும் நேரில் அழைக்கலாம். இதுபோன்ற சமயங்களில் மட்டும் நேரில் செல்ல வேண்டியிருக்கும்.

மேலும் வங்கிக் கணக்கை மூடிய பிறகு உங்களின் டெபிட் கார்டு மற்றும் காசோலை புத்தகத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது மிகவும் நல்லது. வங்கிக் கணக்கை மூடிய பிறகு, சில நாட்களுக்கு ஏதேனும் பரிவர்த்தனைகள் நிகழ்கிறதா என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

ஏனெனில் பண மோசடிகள் அதிகம் நடக்கும் இன்றைய சூழலில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
Sunday, January 25, 2026

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிக் கட்டணத்தை நிர்ணயிக்க பெற்றோர்களுக்கு உரிமை; சட்டமுன்வடிவு நிறைவேற்றம்

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயிக்கும் சட்டம் 2009-ம் ஆண்டு ஏற்றப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இச்சட்டத்தின் முக்கிய திருத்தத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது. அதற்கான சட்டமுன்வடிவு இன்று (ஜனவரி 24) சட்டமன்ற பேரவையில் நிறைவேறியது.

தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிப்பதில் இனி பெற்றோர்களும் முடிவு எடுக்கலாம். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை தாக்கல் செய்த ”தமிழ்நாடு பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தல் திருத்தச் சட்டமுன்வடிவு - 2026 நிறைவேற்றப்பட்டது.

விண்ணை தொடும் தனியார் பள்ளிகளின் கட்டணம்

தேசிய அளவில் தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் என்பது விண்ணை தொடும் அளவில் உள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் எல்.கே.ஜி முதல் தொடக்கப்பள்ளிகளிலேயே லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை முறைப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தல் சட்டம் 2009 அமல்படுத்தப்பட்டது.


தனியார் பள்ளிகள் கட்டணத்தை நிர்ணயிக்க குழு

இச்சட்டத்தின் அடிப்படையில் தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ண குழு உருவாக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதியின் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளின் கட்டணத்தை 3 ஆண்டுகளுக்கு நிர்ணத்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இக்குழு கட்டணம் நிர்ணயிக்க அதிகாரம் உள்ள நிலையில், வழக்குகளின் காரணத்தினால் சிபிஎஸ்இ மற்றும் இசிஎஸ்இ பள்ளிகளுக்கான கட்டணம் நிர்ணயம் இக்குழுவின் கீழ் வருவதில்லை.
Sunday, January 25, 2026

தனியார் பள்ளி கல்வி கட்டணங்களுக்கு கட்டுப்பாடு!! பெற்றோர்களே தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு!!

குழந்தைகளுக்கான கல்வி செலவுகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றன. பெற்றோர் ஒரு கணிசமான தொகையை குழந்தைகளின் கல்விக்காகவே ஒதுக்கிவிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

அதுவும் தனியார் பள்ளிகள் என்றால் சொல்லவே வேண்டாம்.எல்கேஜி போன்ற தொடக்க வகுப்புகளுக்கே ஒரு லட்சம் ரூபாய் வரை கல்வி கட்டணமாக கேட்கிறார்கள். படிப்படியாக குழந்தைகள் வகுப்புகள் ஏற ஏற கல்வி கட்டணமும் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. சில தனியார் பள்ளி நிர்வாகங்கள் திடீரென கல்வி கட்டணங்களை உயர்த்தி விடுகின்றன. இது பெற்றோருக்கு பெரிய மிதிச்சுமையை ஏற்படுத்துகிறது.

பெரும்பாலான சமயங்களில் பெற்றோர் அவர்கள் கேட்கும் தொகையை செலுத்தியே ஆக வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.இந்த நிலையில் தான் தமிழ்நாடு அரசு மிக முக்கியமான ஒரு நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தும் நோக்கில் 2009 ஆம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் அடிப்படையில் தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய குழு உருவாக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டது.ஆனால் இந்த குழுவில் பெற்றோர் தரப்பு பிரதிநிதிகள் இல்லாமல் இருந்தனர்.

இந்நிலையில் தான் தமிழ்நாடு அரசு முக்கியமான ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய சட்டத்தில் புதிய திருத்ததை கொண்டு வந்து சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது.தங்க நகையை அடகு வச்சு கடன் வாங்க போறீங்களா? பிப்ரவரி 1 மத்திய பட்ஜெட் வரை வெயிட் பண்ணுங்க!!பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டத்திருத்தத்தை தாக்கல் செய்து நிறைவேற்றி இருக்கிறார். இதன்படி தனியார் பள்ளிகளின் அதிக கட்டணத்தால் பாதிக்கப்படுவது பெற்றோர்.

எனவே அவர்களின் கருத்துக்களை கேட்டு கட்டணம் நிர்ணயிப்பது முறையாகும் என்பதை ஏற்று தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழுவில் மாநில பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர் இடம்பெறும் அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே இந்த கட்டண நிர்ணயக் குழுவில் உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி, பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர், பள்ளி கல்வித்துறை இயக்குனர், தனியார் பள்ளி உறுப்பினர்கள் ,பொதுப்பணித்துறையில் இருந்து இணை தலைமை பொறியாளர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஆகியோர் கொண்ட குழுவாக இது செயல்படும்.வீட்டில் இருந்தபடியே பத்திர பதிவு!! சார் பதிவாளர் அலுவலகத்துக்கே போக வேண்டாம்!! வாட்ஸ் அப் சேவையும் உண்டு!!கல்லி கட்டணம் நிர்ணயம் செய்வதில் பெற்றோருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த சட்டம் உன் முடிவு கொண்டுவரப்பட்டுள்ளது.

பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினரின் மூலம் பெற்றோரின் கருத்துக்கள் எடுத்துக் கொள்ளப்படும். விரைவில் இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட இருக்கிறது.இது தவிர தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளின் கட்டணத்தை மூன்று ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கவும் இந்த சட்ட முன்வடிவு வழிவகை செய்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த குழு கட்டணம் நிர்ணயிக்கு அதிகாரம் உள்ளது, ஆனால் சிபிஎஸ்சி மற்றும் ஐசிஎஸ்சி பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் இந்த குழுவின் கீழ் வருவதில்லை.
Sunday, January 25, 2026

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்

மங்கலகரமான வாழையின் ஒவ்வொரு பாகமும் பயன்படுகின்றது (வாழையிலை, வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பழம்). வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் தெரிந்தால் அதைச் செய்வது கடினமாகினும் அடிக்கடி செய்வோம்.

1. இரத்தத்தைச் சுத்தப்படுத்த

வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை உட் இரப்பதுடன், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

2. சர்க்கரை நோயாளிகளுக்கு

இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

3. வயிற்றுப்புண் நீங்க

இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும்.

4. மூலநோயாளிகளுக்கு

மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

மலச்சிக்கலைப் போக்கும் . சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.

5. பெண்களுக்கு

பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும் .வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும்.

6. உடல் அசதி, வயிற்று வலி குறையும். வாழைப்பூவைப் பருப்புடன் சேர்த்து உண்டால் கை,கால் எரிச்சல் குணமாகும்.வயிற்றில் இருக்கும் புழுக்களைக் கொல்லும் சக்தி வாழைப்பூவிற்கு உண்டு. ஆண்களுக்கு தாதுவை விருத்தி செய்து விந்துவை கெட்டிப்படுத்தும்.

ஒவ்வொரு காய்க்கும் ஒவ்வொரு சக்தி, வாழைப்பூ பலவிதப் பிரச்சினைகளைப் போக்கும் வல்லமை கொண்டது. அப்படிப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்த வாழைப்பூவை உசிலியாக, அடையாக, வடையாக, கூட்டாகப் பல வழிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Sunday, January 25, 2026

நோய் எதிர்ப்பு சக்தி தரும் ஊதா நிற உருளைக்கிழங்கு

ஊதா நிற உருளைக்கிழங்கு பெருங்குடல் புற்றுநோயை முற்றிலும் அழிக்கிறது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

தென் அமெரிக்காவை பிறப்பிடமாக கொண்ட ஊதா நிற உருளைக்கிழங்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகும்.

இந்நிலையில் இந்த உருளைக்கிழங்கை மதியம் மற்றும் இரவு வேளைகளில் எடுத்துக்கொள்வதன் மூலம் புற்றுநோய் செல்களை அழிக்கிறது.

இது பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலியின் மீது நடத்தப்பட்ட சோதனையில் நிரூபணமாகியுள்ளது.

உருளையில் உள்ள ஆந்தோசியானின்ஸ், குளோரோஜெனிக் அமிலம் மற்றும் ஸ்டார்ச் ஆகியவை இந்தப் புற்றுநோய் செல்களை வேருடன் அழிக்கும் காரணியாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், பியூட்ரிக் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் கூட்டுவதன்மூலம், நாள்பட்ட அழற்சியைக் சுருக்கி, புற்றுநோய் செல்களை அழிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை புற்றுநோயைத் தடுக்க இந்த உருளைக்கிழங்கை உட்கொண்டாலே போதும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்...

Sunday, January 25, 2026

வெங்காயம் குணப்படுத்தும் நோய்ககள்

* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறுது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.

* வெங்காய நெடி சில தலைவலிகளை குறைக்கும். வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

* வெங்காய சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவினால் பல்வலி, ஈறுவலி குறையும்.

* வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் பலமாகும்.

* வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

* படை, தேமல் மேல் வெங்காயம் சாற்றை தடவினால் மறைந்துவிடும்.

* வெங்காய ரசத்தை நீர் கலந்து குடித்தால் நன்கு தூக்கம் வரும்.

* வெங்காயம் குறைவான கொழுப்பு சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தை பயன்படுத்தலாம்.

* மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

* வெங்காயத்தை தினமும் சாப்பிட்டால் டி.பி நோய் குணமாகும்...
Sunday, January 25, 2026

வெத்தலவள்ளி கிழங்கு மருத்துவ பயன்கள் மற்றும் தீர்க்கும் நோய்கள்

வெத்தலவள்ளி கிழங்கு (Air Potato / Dioscorea bulbifera) என்பது மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அபூர்வமான கிழங்கு வகையாகும். இது கொடி வகையைச் சார்ந்தது. இந்தக் கிழங்கு மற்ற கிழங்குகளைப் போல மண்ணுக்கு அடியில் காய்க்காமல், வெற்றிலை கொடியின் கணுக்களில் (இலை இடுக்கில்) காய்ப்பதால் இதற்கு 'வெத்தலவள்ளி' என்று பெயர் வந்தது.

இதன் மருத்துவ பயன்கள் மற்றும் தீர்க்கும் நோய்கள் பற்றி கீழே விரிவாகக் காணலாம்:

1. *சர்க்கரை நோய்* (Diabetes Control)

இந்தக் கிழங்கில் உள்ள நார்ச்சத்தும், வேதிப்பொருட்களும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றன. இது இன்சுலின் சுரப்பைச் சீராக்க உதவும் என்று பாரம்பரிய மருத்துவத்தில் நம்பப்படுகிறது.
2 *. மூல நோய் மற்றும் செரிமானக் கோளாறுகள்*

* *மூல நோய்:*

* மூல நோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்தக் கிழங்கு ஒரு சிறந்த மருந்தாகும். இது உடல் சூட்டைத் தணித்து, மலம் இலகுவாக வெளியேற உதவுகிறது.
* *பசியின்மை:* 

செரிமான மண்டலத்தைச் சீராக்கி பசியைத் தூண்டும் குணம் இதற்கு உண்டு.

3. *தோல் வியாதிகள்*

4. (Skin Diseases)
தீராத சொறி, சிரங்கு மற்றும் கரப்பான் போன்ற தோல் நோய்களுக்கு இந்தக் கிழங்கை அரைத்துத் தடவலாம் அல்லது உணவாக எடுத்துக் கொள்ளலாம். இது இரத்தத்தைச் சுத்திகரித்து தோலுக்குப் பொலிவைத் தரும்.

4. *சுவாசப் பிரச்சனைகள்*

ஆஸ்துமா, தீராத இருமல் மற்றும் சளித் தொந்தரவு உள்ளவர்கள் இந்தக் கிழங்கைச் சமைத்து உண்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். இது நுரையீரலில் உள்ள சளியை அகற்ற உதவுகிறது.

5. *உடல் வலிமை மற்றும் நரம்புத் தளர்ச்சி*

* உடல் மெலிந்து காணப்படுபவர்கள் இந்தக் கிழங்கைச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும் மற்றும் தசை வலிமை பெறும்.
* நரம்புத் தளர்ச்சியைப் போக்கி உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது.

*எச்சரிக்கை மற்றும் பயன்படுத்தும் முறை:*

*முக்கிய குறிப்பு:* வெத்தலவள்ளி கிழங்கில் சில வகைகள் கசப்புத் தன்மை கொண்டதாக இருக்கும். கசப்புத் தன்மை கொண்ட கிழங்குகளை நேரடியாகச் சாப்பிடக்கூடாது, ஏனெனில் அதில் நச்சுத்தன்மை இருக்கலாம்.
பொதுவாக இந்தக் கிழங்கைத் துண்டுகளாக வெட்டி, மஞ்சள் கலந்த நீரில் நன்றாக வேகவைத்து, அந்த நீரை வடித்துவிட்டுப் பிறகு சமைப்பது பாதுகாப்பானது.

* சித்த மருத்துவர் அல்லது நாட்டு மருத்துவ நிபுணரின் ஆலோசனையின் பேரில் இதைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.

Saturday, January 24, 2026

Saturday, January 24, 2026

அரசு பள்ளி பணியிடங்களுக்கான நிரந்த பணியிட தேர்வுகளில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிக்காலத்திற்கு ஏற்ப சிறப்பு மதிப்பெண் - முதல்வர் அறிவிப்பு.

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம் - முதல்வர்

அரசு பள்ளி பணியிடங்களுக்கான நிரந்த பணியிட தேர்வுகளில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிக்காலத்திற்கு ஏற்ப சிறப்பு மதிப்பெண் - முதல்வர் அறிவிப்பு.
Saturday, January 24, 2026

பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்!



பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்!

17 நாட்களாக சென்னை DPIல் நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம், முதலமைச்சர், பள்ளிகல்வி அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகள் கொடுத்த உறுதியின் படி, எங்களுக்கு பாதகம் இல்லாத அரசாணை வரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தற்காலிகமாக ஒத்திவைக்கின்றோம்.

-பகுதிநேர ஆசிரியர்களின் கூட்டியக்க அறிக்கை
Saturday, January 24, 2026

3ஆவது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு

3ஆவது பிரசவத்திற்கும் விடுப்பு

பெண் ஊழியர்களின் 3ஆவது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு.

உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் பி.மங்கையர்கரசி என்பவர் தொடர்ந்த வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு.


அனைத்து துறை செயலாளர்களுக்கும் இந்த உத்தரவு நகலை அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Saturday, January 24, 2026

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்

கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி?
சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

கண் இமைகளில் வலி.. என்ன வியாதி?

அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி?

அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.

டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..

கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி?

நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி?

இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி?

உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.

தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி?

கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.

டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.
பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி?

சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.

டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.
பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி?

நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.

டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி?

தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.

டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

சிவந்த உள்ளங்கை என்ன வியாதி?

கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.

டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.

வெளுத்த நகங்கள் என்ன வியாதி?

இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!

ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.

டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.
விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி?
ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.
டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.
நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி?
சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.
டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.
வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி?
பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.
டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.
சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி?
வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.
டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.
வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி?
உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.
டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்...
Saturday, January 24, 2026

சுவாசத்தை அடக்கி ஆளும் சூட்சுமம்

*சூரிய கலை&சந்திர கலை*

நாம் நமது இரண்டு நாசித் துவாரங்களின் வழியாகவும் ஒரே நேரத்தில் சுவாசிப்பதாக ஒரு தவறான கருத்து நம்மிடையே உள்ளது.
உங்களது சுவாசத்தை உற்றுக் கவனித்துப் பாருங்கள்.
ஒரு நேரத்தில் ஒரு நாசியின் வழியாகவே அதிகப்படியான காற்று உள்ளே செல்லும். (அடுத்த நாசியில் மிகச் சிறய அளவிலான காற்று உட்புகும்.)
சற்று நேரத்திற்குப்பின் (இரண்டு மணி நேரத்திற்குப் பின்) அடுத்த நாசி வழியாக காற்று செல்லத் துவங்கும்.
இவ்வாறு ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என மொத்தம் 12 முறை இந்த இடம் மாறுதல் நடைபெறும்.
எந்த நேரத்தில் எந்த நாசியில் காற்று செல்லும் என்பதையும் நம் முன்னோர்கள் கணித்து வைத்துள்ளனர்.
*நாசியின் வழியாக சுவாசிக்கும் நேரம்:*
காலை 6-8 மணி வரை வலது நாசி
காலை 8-10 மணி வரை இடது நாசி
காலை 10-12 மணி வரை வலது நாசி
மதியம் 12-2 மணி வரை இடது நாசி
மதியம் 2-4 மணி வரை வலது நாசி
மாலை 4-6 மணி வரை இடது நாசி
மாலை 6-8 மணி வரை வலது நாசி
இரவு 8-10 மணி வரை இடது நாசி
இரவு 10-12 மணி வரை வலது நாசி
இரவு 12-2 மணி வரை இடது நாசி
இரவு 2-4 மணி வரை வலது நாசி
அதிகாலை 4-6 மணி வரை இடது நாசி
வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும்; இடது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர கலை என்றும் நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த இரண்டு சுவாசங்களுக்கும் தனித்தனிப் பண்புகளும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளும் உள்ளன.
*வலது நாசிக் காற்று*
*சூரிய கலை*
உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்ற பிராணன் இதுவே.
வலது நாசியின் வழியாக சுவாசம் நடைபெறும் காலகட்டத்தில் உடலின் வெப்ப நிலை சற்றே உயரும்.
உடல் சுறுசுறுப்படையும்; சோர்வு அகலும். உடலின் வலிமை அதிகரிக்கும். மூளையும் உடலும் பரபரப்பாக இயங்கும்.
இந்த இரண்டு மணி நேரத்தில் நிதானம் குறைவாகவும், வேகம் அதிகமாகவும் இருக்கும்.
*இடது நாசிக் காற்று*
*சந்திர கலை*
உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது. சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக் காற்றும் குளுமையானதாகும்.
இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்ப நிலை சற்றே குறைந்து, உடல் குளிர்ச்சியடையும்.
பரபரப்புத் தன்மை குறைந்து, மனதிலும் உடலிலும் ஒரு சாந்தத் தன்மை உருவாகும். மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும். அவசரத் தன்மை மறைந்து, நிதானமான மனநிலை நிலவும்.
இந்த இரண்டு வகையான மூச்சுகளையும் (குதிரைகளையும்) அடக்கி ஆளக் கற்றுக் கொண்டால், மனம், ஐம்பொறிகள், பருவுடல் ஆகிய அனைத்துமே நம் கட்டுப்பாட்டிற்குள் வரும்.
மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும். அவசரத் தன்மை மறைந்து, நிதானமான மனநிலை நிலவும்.
மனம் நம் கட்டுப்பாட்டிற்குள் வரும்.
சிதம்பரம் & மதுரை நடராஜர் உணர்த்தும் தத்துவங்கள்
சிதம்பரம்: சூரிய. கலையை உணர்த்துகிறது.
வலது பக்கம் மூச்சு
வலது கால் ஊன்றி நடனம்
மதுரை:சந்திர கலையை உணர்த்துகிறது
இடது பக்கம் மூச்சு
இடது கால் ஊன்றி நடனம்
மேலே குறிப்பிடபட்டுள்ள சூரிய கலைக்குரிய நேரங்களில் சிதம்பரம் நடராஜரை தரிசனம் செய்வதாலும்,
சந்திர கலைக்குரிய நேரங்களில் மதுரை நடராஜரை தரிசனம் செய்வதாலும்,
நடராஜப் பெருமானின் இந்த இரு விக்ரஹங்களும் நமது சுவாசம் சம்பந்தப்பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் ஆற்றலை நமக்கு எளிதாக கிடைக்க உதவுவதுடன் நமது
சுவாசத்தை அடக்கி
ஆளக் கற்றுக் கொள்ளவும்
எளிதில் உதவுகிறது என்பதே
சிதம்பரம் & மதுரை நடராஜர் தாண்டவங்கள் நமக்கு உணர்த்தும் சூட்சும ரகசியமாகும்
எனவே இந்த இரு நடராஜ தரிசனங்கள் மூலம் நமது
மனம், ஐம்பொறிகள், பருவுடல்
ஆகிய அனைத்துமே நம் கட்டுப்பாட்டிற்குள் வரும் என்பதையும் நன்கு புரிந்து கொள்ளுங்கள்.



Saturday, January 24, 2026

தேசிய கீதம் தமிழாக்கம்

வரலாற்றில் இன்று ஜனவரி 24

ஜன கண மன இப்பாடல் இந்தியாவின் தேசிய கீதமாகவும், வந்தேமாதரம் தேசியப் பாடலாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் ஜனவரி 24.1950 ஆம் ஆண்டு இதே நாளில் தான் ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய ஜன கண மன இப்பாடல் இந்தியாவின் தேசிய கீதமாகவும், பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் இயற்றிய வந்தேமாதரம் தேசியப் பாடலாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தேசிய கீதம்
*************************************************

ரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் இயற்றிய 'ஜன கண மன’ என்ற பாடலின் இந்தி வடிவம் நம் தேசிய கீதமாக 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24-ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தேசிய கீதம் தாகூர் நடத்திய 'தத்வபோதினி பத்ரிகா’ என்ற பத்திரிகையில் 'பாரத் விதாதா’ என்ற தலைப்பில் 1912-ல் வெளியானது.

'ஜன கண மன’ பாடல் முதன் முதலாக 1911, டிசம்பர் 27-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது.

ஐந்து பத்திகள் (13 வரிகள்) கொண்ட நம் தேசிய கீதத்தை 52 நொடிக்குள் பாடவேண்டும்.

முதல், கடைசி பத்திகளை மட்டும் கொண்ட தேசிய கீதத்தின் குறுகிய வடிவத்தை பாடுவதற்கான நேரம் 20 நொடிகள்.

நம் தேசிய கீதத்தில் இரு நதிகள், இரு மலைகள், ஏழு மாநிலங்களின் பெயர்கள் இடம்பெற் றுள்ளன.

தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் 'திராவிட’ என்ற ஒரே சொல்லால் குறிக்கப்படுகின்றன.

'உத்கல்’ என்ற சொல் ஒடிசாவைக் குறிக்கிறது.

தேசிய கீதத்தில் குறிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் பஞ்சாபின் ஒரு பகுதியும் சிந்து மாநிலம் முழுமையும் தற்போது பாகிஸ்தானில் அமைந்துள்ளது.

தேசிய கீதத்துக்கு இசை அமைத் தவர் ஹஃபீஸ் ஜலந்தாரி. 

1919 ல் ரவீந்தரநாத் தாகூர் Morning Song of India என்ற தலைப்பில் தேசிய கீதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

நாட்டுப்பண்

ஜன கண மன அதிநாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா
திராவிட உத்கல பங்கா
விந்திய இமாச்சல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா
தவ சுப நாமே ஜாகே
தவ சுப ஆசிஸ மாகே
காஹே தவ ஜய காதா
ஜன கண மங்கள தாயக ஜயஹே
பாரத பாக்ய விதாதா
ஜய ஹே ஜய ஹே ஜய ஹே
ஜய ஜய ஜய ஜய ஹே!
-ரவீந்திரநாத் தாகூர்

நாட்டுப்பண்னின் தமிழாக்கம்

மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீதான். வெற்றி உனக்கே!

இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..

பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப் பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,

திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒடிஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..

மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக்கொண்டிருக்கின்றன..

உனது மங்களகரமான திரு நாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.,

உனது மங்களகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.,

உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக் கிறோம்..

இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ... வெற்றி உனக்கே!

இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ...

வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!

வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!
Saturday, January 24, 2026

விழிப்புணர்வும் சிரத்தையும் :

1) கரந்த பசும்பாலை அருந்துங்கள் பாக்கெட் பால் ஒழியும்.
2) உள்நாட்டுப் பொருட்களை பயன்படுத்துங்கள் நம் நாட்டில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்
3) நம் நாட்டில் தயாராகும் தரமான பொருட்களை ஊக்கப்படுத்துங்கள். அந்நிய நாட்டு கொள்ளையர்கள் கானாமல் போவார்கள்.
4)வீட்டு தண்ணீரை எடுத்து செல்லுங்கள். இளநீர் குடியுங்கள் காணாது போகும் வெளிநாட்டு பாணங்கள் மற்றும் நீர் பாட்டில்கள்
5) ஞாயிற்றுக்கிழமை என்றால் புலால் என்பதை விடுத்து முன்னோர்களை போல விசேசங்களுக்கு மட்டும் சாப்பிடுங்கள் பிராய்லர் காணாது போகும் முடிந்தவரை இடம் உள்ளவர்கள் நாட்டு கோழி வளருங்கள்.
6) கையோடு பை வைத்துக் கொள்ளுங்கள் பிளாஸ்டிக் ஒழியும்.
7)ஒரு சீமை கருவேலத்தை வேரொடு சாயுங்கள் வரட்சி குறையும்.
8)நீர் நிலைகளில் குப்பைகளையும் வீட்டு கழிவுகளையும் கலக்காதீர்கள். நல்ல சுத்தமான குடிநீர் கிடைக்கும்.
9) இயற்கை உரங்களை பயன்படுத்துங்கள். வரும் தலைமுறைகள் நோயின்றி வாழட்டும்.
10) போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிருங்கள். உடல் வலிமையும்,மன உறுதியும் உண்டாகும்.
11) அன்னிய நாகரீகம் வேண்டாம். நமது பண்பாடே உயர்வானது.
Saturday, January 24, 2026

பாட்டி வைத்தியம் - 1

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.
7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.
9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.
10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.
11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.
12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது...