Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 18, 2024

Saturday, May 18, 2024

அரசு கலை கல்லூரி சேர்க்கை விண்ணப்பம் 2 லட்சத்தை தாண்டியது

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலைபடிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவுமே 5-ம் தேதி தொடங்கி தொடர்ந்துநடைபெற்று வருகிறது.

நேற்று மாலை 6 மணிநிலவரப்படி, இதுவரை 2 லட்சத்து 5 ஆயிரத்து 448 மாணவ, மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 815 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியுள்ளதாக கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், பொறியியல் படிப்புகளில் சேர நேற்று மாலை6 மணி வரை, ஒரு லட்சத்தை 62 ஆயிரத்து 486 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் புருஷோத்தமன் தெரிவித்தார்.
Saturday, May 18, 2024

உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 19-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, என்று தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக என்டிஏ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இரு முறை கணினி வழியில் நடத்தப்படும். அதன்படி இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தேர்வு வரும் ஜூன் 16-ம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.

இதற்கிடையே கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தொடங்கிய நெட் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 15-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 19-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விருப்பமுள்ள பட்டதாரிகள் /ugcnet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல், விண்ணப்பங்களில் மே 21 முதல் 23-ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம். தொடர்ந்து தேர்வுக்கான ஹால்டிக்கெட் ஜூன் முதல்வாரத்தில் வெளியிடப்படும்.

இதற்கான விண்ணப்பக் கட்டணம், பாடத்திட்டம் உட்பட கூடுதல் தகவல்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-69227700 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, May 18, 2024

TRB - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 610 பணியிடங்கள் சேர்ப்பு

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 610 பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பட்டதாரி ஆசிரியர்/வட்டார வளமைய பயிற்றுநர் 2023-2024ஆம் ஆண்டில் 2222 காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 25-10-2023 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 360 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சேர்க்கை அறிவிக்கை கடந்த 15-11-2023 அன்று வெளியிடப்பட்டது. மேலும் 610 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சேர்க்கை அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் https://www.trb.tn.gov.in/ வாயிலாக இன்று(17-05-2024) வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டிற்கு பிறகு பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Saturday, May 18, 2024

‘ஒடிபி’யை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க பெற்றோர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வேண்டுகோள்

அரசின் நலத்திட்டங்களைத் தெரிவிக்கவே தொலைபேசி எண் சரிபார்க்கப்படுகிறது. எனவே, ஆசிரியர்களுக்கு ஒடிபி எண்ணை பெற்றோர்கள் தெரிவிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) வலைத்தளத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் முழு விவரங்கள் பராமரிக்கப்படுகின்றன. மேலும், கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகளும் எமிஸ் தளம் வழியாக கண்காணிக்கப்படுகிறது. இதற்கிடையே அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை பெற்றோர்களுக்கு பகிர்வதற்காக வாட்ஸ்-அப் வழியாக புதிய தளத்தை உருவாக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இதற்காக எமிஸ் தளத்தில் உள்ள 1.12 கோடி மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்கள் ஆசிரியர்கள் மூலம் தற்போது சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை பள்ளி திறப்பதற்கு முன்னர் முடித்துவிடவேண்டுமென கல்வித் துறை தீவிரமாக முயற்சித்து வருகிறது. அதேநேரம் தொடர்பு எண் சரிபார்க்கும் போது ‘ஒடிபி’ எனும் ஒரு முறை கடவுச்சொல் எண் பெற்றோர்களின் செல்போன் எண்ணுக்கு வரும். ஆனால், பாதுகாப்பு கருதி செல்போனுக்கு வரும் ‘ஒடிபி’எண்ணை கொடுக்க பெற்றோர்கள் பலர் தயங்குவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அரசின் நலத் திட்டங்களை தெரிவிப்பதற்காகவே தொலைபேசி எண்கள் சரிபார்க்கப்படுகிறது. எனவே, ஆசிரியர்களுக்கு ‘ஒடிபி’எண்ணை பெற்றோர்கள் தெரிவிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் குமரகுருபரன், துறை இயக்குநர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘எமிஸ் தளத்தில் உள்ள பெற்றோர்களின் செல்போன் எண்கள் சரிபார்ப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் தொடர்பு எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் மாணவர்களுக்கு சீருடைகள், பாடப்புத்தகங்கள் உட்பட பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.
Saturday, May 18, 2024

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம்?


வெயிலின் தாக்கத்தால் ஜூன் 2-வது வாரத்தில் பள்ளி திறக்க முடிவு செய்த நிலையில் தற்போது மழை காரணமாக முன்கூட்டியே திறக்க திட்டம்.

- மே மாத இறுதியில் வானிலை சூழ்நிலையை பொறுத்து பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு என அதிகாரிகள் தகவல்.

- தமிழ்நாட்டில் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக ஆலோசனை.
Saturday, May 18, 2024

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க மே 25 ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு... ஒராண்டு விதியும் தளர்வு!!


ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க மே 25 ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு... ஒராண்டு விதியும் தளர்வு!! மேலும் விவரங்களுக்கு...

மாறுதல் விண்ணப்பம் 25.05.24 வரை அளிக்கலாம் என அறிவிப்பு

Teachers Transfer Counselling_ Emis Registration_ Instructions & Extention - Download here
Saturday, May 18, 2024

பள்ளிக் கல்வித் துறை வழங்கும் நலத்திட்டங்கள் குறித்து பெற்றோர்கள் அறிய Mobile OTP Verification - பள்ளிக் கல்வித் துறை செயலாளர் கடிதம்!


பள்ளிக் கல்வித் துறை வழங்கும் நலத்திட்டங்கள் குறித்து பெற்றோர்கள் அறிய Mobile OTP Verification - பள்ளிக் கல்வித் துறை செயலாளர் கடிதம்!

OTP Verification - Secretary Letter

Saturday, May 18, 2024

TRB பட்டதாரி ஆசிரியர்கள் இடம் அதிகரிப்பு.


2222 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய நியமன தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது அந்த காலி பணியிடங்களின் எண்ணிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகப்படுத்தி உள்ளது.அதன்படி மொத்தமாக 3192 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள்.

2222+360+610=3192
Saturday, May 18, 2024

G.O.Ms.No.90 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் - ஒரு நாள் ஊதியம் ₹319 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் - ஒரு நாள் ஊதியம் ₹319 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.90 - Download here
Saturday, May 18, 2024

BRTE to BT Conversion - 2024-2025ஆம் கல்வியாண்டில் நடைபெற உள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க உத்தரவு.


2021-2022ஆம் கல்வியாண்டில் பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல் பெற்ற ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு (BRTE to BT Conversion) 2024-2025ஆம் கல்வியாண்டில் நடைபெற உள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க (As per G.O.Ms.No 176, Edn Dept, Dated:17.12.2021, Para 2, Sl.No.ix) பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் உத்தரவு!

BT (BRTE) Transfer Counseling Order👇

Friday, May 17, 2024

Friday, May 17, 2024

PG TRB, TN SET & ASSISTANT PROFESSORS All Subjects Online Test - 04

TAMIL: CLICK DOWNLOAD

ENGLISH: CLICK DOWNLOAD

MATHS:  CLICK DOWNLOAD

PHYSICS: CLICK DOWNLOAD

CHEMISTRY: CLICK DOWNLOAD

BOTANY: CLICK DOWNLOAD

ZOOLOGY: CLICK DOWNLOAD

HISTORY: CLICK DOWNLOAD


More Tamil Test: CLICK HERE

More English Test: CLICK HERE

More Maths Test: CLICK HERE

More Physics Test: CLICK HERE

More Chemistry Test: CLICK HERE

More Botany Test: CLICK HERE

More Zoology Test: CLICK HERE

More Biology Test: CLICK HERE

More History Test: CLICK HERE

More Commerce Test: CLICK HERE

More Economics Test: CLICK HERE

More Psychology Test: CLICK HERE

Friday, May 17, 2024

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க மேலும் 7 நாள் அவகாசம் வழங்கி பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.


⛱️ *ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு:7 நாள் அவகாசம் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

⛱️சென்னை: ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க மேலும் 7 நாள் அவகாசம் வழங்கி பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

⛱️இன்று கடைசி நாள் என அறிவித்த நிலையில் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கை ஏற்று மேலும் 7 நாட்கள் அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

⛱️கலந்தாய்வில் பங்கேற்க பணியாற்றும் பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்து இருக்கவேண்டும் என்ற நிபந்தனை விலக்கப்படுகிறது.

Govt letter
👇👇👇👇👇👇
Friday, May 17, 2024

100 சதவீத தேர்ச்சி : ஆசிரியர்கள் , மாணவர்களுக்கு பாராட்டு விழா

பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழில் 100க்கு 100 மதிப்பெண் பெற்ற 43 மாணவர்களுக்கும், 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.

இது குறித்து, தமிழக பள்ளிக்கல்வி துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளி மாணவர்கள் 91.02 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 397 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழ் பாடத்தில், 35 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், அரசு பள்ளிகளில் 87.90 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. 1,364 அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி கிடைத்துள்ளது. தமிழில் மட்டும், எட்டு பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு, 1,761 பள்ளி கள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

எனவே, 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், தமிழில் 100 மதிப்பெண் பெற்ற அரசு பள்ளிகளின் 43 மாணவர்களுக்கு, சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து, குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற ஐந்து தலைமை ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய அறிவுரை வழங்குவதுடன், 100 சதவீதம் எட்டிய தலைமை ஆசிரியர்களுடன், கருத்து பரிமாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Friday, May 17, 2024

வரும் கல்வியாண்டு முதல் ‘எமிஸ்’ வலைதளப் பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க திட்டம்

வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எமிஸ் வலைத்தள பணிகளில் இருந்து விடுவிக்க தமிழக பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு விதமான நடவடிக்கைகள் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே பள்ளிக் கல்வித் துறையின் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) எனும் இணையதளத்தில் அரசு, அரசு உதவி, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் முழு விவரங்கள் பராமரிக்கப்பட்டு, அதற்கேற்ப நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், கல்வித் துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் தினசரி செயல்பாடுகளும் எமிஸ் தளம் வழியாக கண்காணிக்கப்படுகிறது.

அதேநேரம் இந்த எமிஸ் தளத்தில் தகவல்கள் பதிவேற்றம், நீக்கம் உட்பட பராமரிப்பு பணிகள் ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது கூடுதல் பணிச்சுமையாக இருப்பதால் இதிலிருந்து விடுவிக்க வேண்டுமென ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அரசின் அறிவிப்புகள், திட்டங்களை பெற்றோருக்கு பகிர்வதற்காக வாட்ஸ்-அப் வழியாக ஒரு தளத்தை உருவாக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக எமிஸ் தளத்தில் உள்ள மாணவர்களின் பெற்றோர் தொடர்பு எண்கள் தற்போது ஆசிரியர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு சரிபார்க்கும் போது ஓடிபி எனப்படும் ஒரு முறை கடவுச்சொல் எண் பெற்றோர்களின் செல்போன் எண்ணுக்கு வரும். ஆனால், பாதுகாப்பு கருதி செல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணை கொடுக்க பெற்றோர்கள் பலர் தயங்குவதாக தெரிகிறது. இதனால் ஆசிரியர்கள் இந்த பணிகளை முடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சில பெற்றோர், ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
Friday, May 17, 2024

EMIS: பள்ளிக் கல்வித் துறை - பெற்றோர் உடனான தகவல் தொடர்பு முயற்சியில் சிக்கல்

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை எமிஸ் (Education Management Information System) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் ஆன்லைனில் பள்ளிக் கல்வித்துறை பராமரித்து வருகிறது. இதில் ஒவ்வொரு மாணவரின் பிறந்த தேதி, வகுப்பு, மதிப்பெண்கள், சான்றிதழ்கள், பெற்றோரின் தொலைபேசி எண், கற்றல் மதிப்பீடு, கற்பித்தல் நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

குறிப்பிட்ட இடைவெளியில் புதிய கற்றல் செயல்பாடுகள் மூலம் எமிஸ் தகவல்கள் ‘அப்டேட்’ செய்யப்படும். தற்போது எமிஸ் இணையதளத்தில் மாணவ, மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சுமார் 1.16 கோடி தொலைபேசி எண்கள் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல எண்கள் பயன்பாட்டில் இல்லை என்பது தெரியவந்தது. எனவே பயனற்ற எண்களை நீக்கி, புதிய எண்களை இணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், இதற்காக ஆசிரியர்கள் பெற்றோரைத் தொடர்பு கொள்ளும் போது, இதற்கான ஓடிபி எண்ணை பெற்றோர் தெரிவிக்க மறுக்கின்றனர். இதனால் இந்தப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இப்பணியில் உள்ள சிரமங்கள் மற்றும் இம்முயற்சி குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டபோது, “வங்கிகளின் பெயரை சொல்லி நடைபெறும் மோசடிகளைத் தவிர்க்க சைபர் க்ரைம் போலீஸார் கொடுத்த விழிப்புணர்வால் ஓடிபி எண்ணை பெற்றோர் தெரிவிக்க மறுக்கின்றனர்.

இதற்காக ஒவ்வொரு மாணவரின் வீட்டுக்குச் சென்று அவர்கள் முன்னிலையில்தான் பதிவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இப்பணிகள் முடிவடைந்ததும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பெற்றோர் உடன் இணைப்பு ஏற்படும். இதற்காக ‘Department of School Education’ என்ற பெயரில் புதிய தளம் ஒன்று தொடங்கப்பட உள்ளது. இதில் வாட்ஸ்-அப் மூலம் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும்.

ஒருமுறை ஒரு தகவலை அனுப்பினால் பதிவு செய்யப்பட்ட ஒரு கோடி தொலைபேசி எண்களின் வாட்ஸ்-அப்புக்கும் அந்தத் தகவல் சென்றடைந்து விடும். இதன் மூலம் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பெற்றோர் உடனான தகவல் தொடர்பு மிகவும் எளிமையாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தனர்.
Friday, May 17, 2024

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!

100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சீர்மிகு பாராட்டு விழா சென்னையில் நடத்த திட்டம்

ஒவ்வொரு பள்ளியிலும் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த மாணவர்களும் பாராட்டப்படுகிறார்கள்

மேலும் அவ்விழாவில் தமிழ்ப்பாடத்தில் 100 சதவீதம் மதிப்பெண் வாங்கிய 43 மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளார்கள்

-பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
Friday, May 17, 2024

HSS HM PROMOTION 2024 / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு.


மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு நடத்திய பிறகே, முதுகலை ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்ற, நமது பேரியக்கத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டது...

ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று (16.05.2024) மாலை தரவரிசைப் பட்டியலை பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பி உள்ளது.

அதனடிப்படையில், இன்று மாலைக்குள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி முன்னுரிமைப் பட்டியலைத் தயார் செய்யும் பொருட்டு, தகுதி வாய்ந்த முதுகலை ஆசிரியர் பட்டியல் கேட்கப்படும். மூத்த முதுகலை ஆசிரியர்கள் தங்கள் தகவல்களைத் தயாராக வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தோழமையுடன்...

சே.பிரபாகரன்
மாநிலத் தலைவர்,
TNPGTA.
Friday, May 17, 2024

GK - Famous surnames of prominent people

• Father of the nation

Mahatma Gandhi



• Marginal Gandhi

Khan Abdul Khabar Khan



• Babu

Mahatma Gandhi



• old man

Dadabhai Naoroji



• Iron Man

Sardar Vallabhbhai Patel



• Punjab Kesari

Lala Lajpati Roy



• Andhra Kesari

T brightness



• Share Kashmir

Sheikh Abdullah



• Bangabandhu

Sheikh Mujibur Rahman



• Countryman

Chittaranjan Das



• Football

cf. Andrews



• Lokamanya

Balakandahara Tilak



• Folk hero

Jai Prakash Narayan



• Gurudev

Rabindranath Tagore



• Rajaji

Emperor Rajagopalachari



• Be an uncle

Hi C. min



• Man of destiny

Napoleon Bonaparte



• Deshratna

Rajendra Prasad



• Netaji

Subhash Chandra Bose



• Uncle

Jawaharlal Nehru



• The Young Turks

Shri Chandrasekhar



• Shaheed-e-Azam

Bhagat Singh



• India Nightingale

Sarojini Naidu



• Vocal Nightingale

Lata Mangeshkar



• Flying angel

P D Usha



• World poet

Rabindranath Tagore



• Poet

Rabindranath Tagore



• Sardar

Ballabhai Patel



• Hockey Guide

Diyanchand



• fuhrer

Adolf Hitler



• Shakespeare of India

Great poet Kalidas



• Little Corporal

Napoleon Bonaparte



• Black Gandhi

Martin Luther King
Friday, May 17, 2024

GK - 2023-24 செய்திகளில் இலக்கு ஆண்டு (TARGET YEAR IN NEWS 2023-24)

➢ 2030க்குள் குப்பைகள் இல்லாத விண்வெளிப் பயணங்களை அடைவதற்கான பிரகடனத்தை இந்தியா செய்துள்ளது.

➢ இந்தியா தனது முதல் தனியாரால் நிர்வகிக்கப்படும் மூலோபாய பெட்ரோலிய இருப்புக்களை (SPR) 2029-30க்குள் உருவாக்க திட்டமிட்டுள்ளது.

➢ 2035-க்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை நிறுவும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

➢ தொழுநோய்க்கான தேசிய மூலோபாயத் திட்டம் மற்றும் பாதை வரைபடம் (2023-27) 2027க்குள் தொழுநோய் பரவுவதை அடையாது.

➢ 2027 டிசம்பரில் பருப்பு வகைகளில் இந்தியா தன்னிறைவு பெறும்

➢ இந்திய நுகர்வோர் தொழில்நுட்பம் 2027க்குள் $300 பில்லியனைத் தொடும்.

➢ இந்தியா ஜப்பான் மற்றும் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி 2027-ல் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

➢ ஆசிய பசிபிக் ஏர்லைன்ஸ் சங்கத்தின் (AAPA) உறுப்பினர்கள் கூட்டாக 2030 ஆம் ஆண்டளவில் 5% நிலையான விமான எரிபொருள் (SAF) பயன்பாட்டை "அபிலாஷை இலக்கு" நிர்ணயித்துள்ளனர்.

➢ 2050க்கு முன் வளர்ந்த நாடுகளை கார்பன்-நெகட்டிவ் ஆக இந்தியா தள்ளும்.

➢ இந்த ‘பாரத் ட்ரோன் சக்தி 2023’ நிகழ்வு, 2030 ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய ட்ரோன் மையமாக மாறுவதற்கான உறுதிப்பாட்டை அடைய உதவும்.

➢ தடுப்பூசி தயாரிப்பாளரான இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் (IIL) 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பூசியை வணிக ரீதியாக அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறது.

➢ பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) குழுமத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் சௌமியா காந்தி கோஷோன், 2027ஆம் ஆண்டுக்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

➢ நிலக்கரி அமைச்சகம் 2030 நிதியாண்டுக்குள் 100 மில்லியன் டன் நிலக்கரியை வாயுவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

➢ கோல்ட்மேன் சாக்ஸ் ஆய்வு அறிக்கையின்படி, 2075-ம் ஆண்டுக்குள், ஜப்பான் மற்றும் ஜெர்மனியை மட்டுமின்றி அமெரிக்காவையும் பின்னுக்குத் தள்ளி சீனாவுக்குப் பிறகு இந்தியா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

➢ 2040 ஆம் ஆண்டளவில் உலகின் 80% பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கைகளை UNEP பரிந்துரைக்கிறது.

➢ இந்தியா 2047-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் சுற்றுலாப் பொருளாதாரமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

➢ அரசாங்கம் 2030 ஆம் ஆண்டிற்குள் 500 GW சுத்தமான ஆற்றல் என்ற இலக்கை அடைய, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 250 GW புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனைச் சேர்க்கும் திட்டத்தை அறிவித்தது.

➢ இந்தியா 2030 ஆம் ஆண்டுக்குள் அதன் நிறுவப்பட்ட மின்சாரத் திறனில் பாதியை புதைபடிவமற்ற எரிபொருள் மூலங்களிலிருந்தும், 2070 ஆம் ஆண்டிற்குள் நிகர-பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கும் இலக்கு நிர்ணயித்துள்ளது.

➢ 2023 வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையானது 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை $2 டிரில்லியன் டாலராகக் கொண்டு செல்லும் பார்வையைக் கொண்டுள்ளது.

➢ இந்தியா 2047 ஆம் ஆண்டுக்குள் அணுசக்தி மூலங்களிலிருந்து 9% மின்சாரத்தைப் பெறும்.

➢ 2030-க்குள் ‘பசுமைக் கப்பலுக்கான உலகளாவிய மையம்’ கட்டிடமாக மாற இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

➢ இந்திய இரயில்வே 2030 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்ப்பாளராக மாறும்.

➢ இந்தியா 2030-க்குள் 5 மில்லியன் டன் பச்சை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும்.

➢ 2024 ஆம் ஆண்டிற்குள் விவசாயத் துறையில் டீசல் பயன்பாட்டை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மாற்ற இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

➢ 2025-க்குள் இந்தியாவில் காசநோயை ஒழிக்க இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

➢ 2024-க்குள் ₹25,000 கோடி மதிப்புள்ள பாதுகாப்பு ஏற்றுமதியை இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது.

➢ இந்திய ரிசர்வ் வங்கியின் 2023 நாணயக் கொள்கையின் நோக்கம் பணவீக்கத்தை கட்டாய சகிப்புத்தன்மைக் குழுவிற்குள் நிறுத்தி, 2024 ஆம் ஆண்டளவில் நடுத்தர கால இலக்கான 4% ஐ நோக்கி வழிநடத்துவதாகும்.


➢ India has made a declaration to achieve debris-free space missions by 2030.

➢ India plans to build its first privately managed strategic petroleum reserve (SPR) by 2029-30.

➢ Prime Minister Narendra Modi has declared India’s plan to establish its own space station by 2035.

➢ National Strategic Plan & Roadmap for Leprosy (2023-27) to achieve zero transmission of leprosy by 2027.

➢ India self-reliant in pulses by December 2027

➢ Indian Consumer Tech To Touch $300 Bn By 2027.

➢ India is expected to overtake Japan and Germany to emerge as the third largest economy in the world by 2027.

➢ Members of the Association of Asia Pacific Airlines (AAPA) collectively have set an “aspirational target” of 5% sustainable aviation fuel (SAF) usage by 2030.

➢ India to push developed nations to become carbon-negative before 2050.

➢ This ‘Bharat Drone Shakti 2023’ event will help the country to achieve its commitment of becoming a global drone hub by 2030.

➢ Vaccine manufacturer Indian Immunologicals Limited (IIL) expects to commercially launch its dengue fever vaccine by early 2026.

➢ Group Chief Economic Advisor at the State Bank of India (SBI), Soumya Kanti Ghoshon has reiterated that India is likely to become the third-largest economy by 2027.

➢ The Ministry of Coal has set a target to gasify 100 million tonnes of coal by FY 2030.

➢ According to the report of Goldman Sachs Research, by the year 2075, India will become the second largest economy in the world after China leaving behind not only Japan and Germany but also America.

➢ UNEP suggests measures to reduce 80% of world's plastic pollution by 2040.

➢ India aims to become one trillion dollar tourism economy by 2047.

➢ The government announced a plan to add 250 GW of renewable energy capacity in the next five years to achieve its target of 500 GW of clean energy by 2030.

➢ India has set targets for half of its installed electricity capacity to be from non-fossil fuel sources by 2030 and for the country to attain net-zero carbon emissions by 2070.

➢ 2023 foreign trade policy has the vision to take India’s goods and services exports to $2 trillion by 2030.

➢ India to get 9% of Electricity from Nuclear Sources by 2047.

➢ India sets target to become ‘Global Hub for Green Ship’ building by 2030.

➢ Indian Railways to become Net Zero Carbon Emitter by 2030.

➢ India to produce 5 million tonnes of green hydrogen by 2030.

➢ India has set a target to replace the use of diesel by renewable energy in the agriculture sector by 2024.

➢ Indian Government has set a target to eliminate TB in India by 2025.

➢ India targets ₹25,000-cr worth defence exports by 2024.

➢ Reserve Bank of India’s 2023 monetary policy objective is to hold inflation within the mandated tolerance band and guide it towards the medium-term target of 4% by 2024.