Wednesday, February 26, 2014

பாவின செய்யுட் கோவை

பாவினச் செய்யுட்கோவை

குறள்வெண் செந்துறை

கண்கள் காணும் காட்சி எல்லாம் கண்கள் தேடிக் காண்ப தில்லை
கண்கள் மட்டும் ஊமை என்றால் காணும் இன்பம் ஏது மில்லை                பா.செ.கோ. பா. 1

கனவுகள் விழித்தெழ கடுமையாய் உழைத்திடு
தினந்தினம் மனதினைத் திடமுடன் நடத்திடு                            பா.செ.கோ. பா. 2

கவிஞன் எழுதாக் கவிதை இயற்கை
புவியில் பிறந்து அழியும் குழந்தை                                             பா.செ.கோ. பா. 3

வள்ளுவரின் பாடலினை நாள்தோறும் கற்றுவந்தால்
நல்வழியில் சென்றிடலாம் நல்வாழ்வு பெற்றிடலாம்                    பா.செ.கோ. பா. 4

கலங்கமுள்ள நிலவுகூட பளபளன்னு ஒளிவீசும்
கலங்கமில்லா மலரினமே கலங்காதே விடிவுவரும்                     பா.செ.கோ. பா. 5

நிலம்விழும்மழை பலன்தந்திடும் கடல்விழும்துளி பலன்தருகுமோ
உலகுளவரை உனைப்புகழ்ந்திடும் இருக்கிறபொருள் கொடுத்துதவிடு.   பா.செ.கோ. பா. 6

நெல்லின்மணி மண்பார்திடும் நெஞ்சம்அதை எண்ணிபாத்திடு
கல்விகற்றவர் தாழ்ந்துவாழணும் என்றஉண்மையை கண்டுணர்ந்திடு    பா.செ.கோ. பா. 7

குறட்டாழிசை

வண்ண வண்ண ஆடை கட்டி
வாசல் வந்து போகும் பெண்ணே
வண்ண ஆடை காண்ப தில்லை
அங்கம் தேடிப் பார்க்கும்                                                பா.செ.கோ. பா. 8

கருவிலே உருவரும் கடமைகள் உடன்வரும்
அவரவர் விதிப்பயன் அதனுடன் கலந்திடும்
பெருமைகள் வருவது பிறப்பினால் இலையடா
செயல்களே புகழினைப் பறையிடும்                                     பா.செ.கோ. பா. 9

பெண்ணியம் என்பது பெண்மையைப் போற்றுதல்
ஆண்களைத் தூற்றுதல் அல்லவே                                              பா.செ.கோ. பா. 10

வண்ணபூக்கள் ஒன்றுசேர்த்து ஆக்கிவைத்த மாலைபோல
        சின்னநூல்கள் ஒன்றுசேர்த்து நெய்தெடுத்த ஆடைபோல
மண்ணுலகில் வந்துதித்தோம் மானிடர்கள் ஆகிவிட்டோம்
        சாதிமத பேதமின்றி வாழ்ந்திடுவோம்                           பா.செ.கோ. பா. 11

சுயநலத்தின் உருவாகி பொறாமைஅதன் உடன்சேர்த்து
        தனிமையாகப் பயனின்றி உயிர்வாழும் மனிதஇனம்
பயன்பாட்டுப் பொருட்களை மனிதனுக்குக் கொடுத்துதவி
        பலவிதமாய் அழியுதடா பசுமைஇனம்                          பா.செ.கோ. பா. 12

ஒருகாலிலே அசைந்தாடிடும் மலரினங்கள் பலநிறத்தினில் பிறப்பெடுத்திடும்
திருவிழாக்களோ திருமணங்களோ பலமேடையை அலங்கரித்திடும்.    பா.செ.கோ. பா. 13

கற்பென்பது ஆண்பெண்என எல்லோர்க்குமே ஒன்றானது
கற்போடுநீ வாழ்ந்துகாட்டடா வாழ்நாள்வரை                            பா.செ.கோ. பா. 14

வெண்டாழிசை

அச்சத் தோடு வாழ்ந்தி டாதே
அச்சம் நஞ்சாய் உன்னை மாய்க்கும்
அச்சம் நீங்கி வாழ்                                                             பா.செ.கோ. பா. 15

பிறரது பொருளினைக் கவர்ந்திட நினைப்பவர்
எரிகிற நெருப்பினைத் தலையிலே சுமப்பவர்
உருகிடும் மெழுகுதான் அவர்                                                   பா.செ.கோ. பா. 16

நிலவு மகளை நெருங்க நினைத்தேன் கனவில்
விலகும் இருளைப் பிடிக்க நினைத்தேன் ஒளியில்
நிலவாய் இருளாய் பணம்                                                      பா.செ.கோ. பா. 17

நெல்பசியைப் போக்கிவிடும் நம்தாகம் தீர்த்துவிடும் பூமியிலே
பல்லுயிர்கள் வாழ்ந்திடவே பெய்கின்ற மாமழைபோல் பூமியிலே
எல்லோரும் வாழ்ந்திடவே வாழ்                                                பா.செ.கோ. பா. 18

கணுக்களிலே உயிர்வளர்த்திடும் கடித்துண்டால் சுவைகொடுக்கும்
எறும்புமுதல் பலஉயிர்கள் இதைக்கண்டால் விரும்பிஉண்ணும்
பயிர்களிலே பணப்பயிராம் கரும்பு                                              பா.செ.கோ. பா. 19

மரம்அழிந்திட மழைகுறைந்திடும் குளிர்விலகியே வெயில்படர்ந்திடும்
உயிர்வளத்திடும் குளிர்காற்றையும் புகைகக்கியே விஷமாக்கிடும்
மரம்வளர்த்துநீ உயிர்காத்திட விரும்பு                                  பா.செ.கோ. பா. 20

கொய்யாக்கனி பூவாமலர் கேளாச்செவி தீராப்பசி
செய்யாத்தொழில் காணர்க்கனா ஓயாஅலை பாடாஇசை
பேயாமழை உண்டோபயன் சொல்                                              பா.செ.கோ. பா. 21
வெள்ளொத்தாழிசை
மரங்கள் வளர்க்க மனிதா விரும்பு
மரங்கள் உனது உயிரை வளர்க்கும்
வரமாய் நினைத்து நடு

உரமாய் நிலத்தில் பயிரை வளர்க்கும்
சருகைக் கொடுத்து விளைச்சல் பெருகும்
வரமாய் நினைத்து நடு

எரியும் நெருப்பாம் வெயிலைக் தணிக்கும்
உறிஞ்சிப் பருகி புகையைத் தடுக்கும்
வரமாய் நினைத்து நடு                                         பா.செ.கோ பா. 22
ஏரோட்டி சோறுபோடும் பாட்டாளி வர்க்கத்தை
ஏற்றமின்றி மாண்டுபோகும் ஏழைகளின் கூட்டத்தைப்
பார்க்காது நன்றிகெட்ட நாடு

வீட்டுபொருள் அத்தனையும் விற்றுபயிர் காப்பவரை
மாட்டைநம்பி வாழ்கின்ற மானமுள்ள கூட்டத்தை
விட்டுவிடும் நன்றிசெட்ட நாடு

பெற்றபொருள் கொண்டுவந்து நல்லவிலை கேட்டுநிற்கும்
விற்றபின்பு பெற்றபணம் பாதிகடன் தீர்த்துவீடும்
தீக்காது நன்றிகெட்ட நாடு                                      பா.செ.கோ பா. 23

ஓரொலி வெண்டுறை

அக்கம் பக்கம் யாரும் இல்லை
பக்கம் வந்து ஆசை சொல்லு
வெக்கம் என்ன நெஞ்சிக் குள்ளே
பக்கம் வந்தால் போகும் மெல்ல
தாகம் தீர்க்க வா                                               பா.செ.கோ பா. 24

கனவுகள் இலையெனில் உயர்வுகள் இலையடா கனவுகாண்
பணத்தினால் பெருமைகள் வருவது இலையடா பணிவுகொள்
அணைக்கிற கரங்களே உறவினை வளர்த்திடும்
அணைக்கிற நினைத்திடு உறவினை வளர்த்திடு                 பா.செ.கோ பா. 25

ஒருவர் உணர்வில் விருப்பம் பிறக்கும்
இருவர் உணர்வில் அணையும் மனது
இருவர் விழிகள் இணைந்து நடந்தால்
இரும்பு இலவே மலையும் பொடியாம்
புரிந்து நடப்பார் சிலர்                                           பா.செ.கோ பா. 26

மாணிடர்கள் வாழாத ஊருக்குள் நீவேண்டும் அந்திபகல் நேரமெல்லாம்
உனைத்தொட்டு ஆசைமொழி பேசவேண்டும் சொந்தமெல்லாம்
என்னைவிட்டுப் போகவேண்டும் சொந்தமென நீவேண்டும்       பா.செ.கோ பா. 27

பிடிவாத குணமிருந்தால் குடும்பத்தில் அமைதிபோகும் மனதிலும்தான்
அடம்பிடிக்கும் குழந்தைபோல பெரியவர்கள் இருப்பதனால் வருவததிது
அடக்கிவைக்கும் குணமிருந்தால் உடல்நலமும் மனநலமும் தொலைந்துபோகும்
குடும்பத்தில் இருப்பவர்க்குக் குடும்பம்தான் பெரியசொத்து இழக்கலாமா?
விட்டுகொடு தொலைந்துபோன உறவுகளும் திரும்பவரும்      பா.செ.கோ பா. 28

அழவைத்துபார்ப் பதெல்‘லாம்திமிர் பிடித்தபெண்குணம்
        அமைதிகாப்பதால் அடங்கிபோகிறார் எனபொருள்இலை
அழகாகதம் குடூம்பத்தினை நடத்திசெல்கிறார் எனஆகுமே
அழவைக்கவும் அணைத்துக்காக்கவும் தெரிந்தவர்விவே கஆணின்குணம்       பா.செ.கோ பா. 29

பூமிவிட்டுநாம் தாவிசெல்கையில் வானமேனியில்
        வர்ணமில்லையே பேதமில்லையே எல்லையில்லையே
நாம்இறக்கையில் கொண்டுசெல்வதும் வானைப்போலவே ஒன்றுமில்லையே
பூமிதன்னிலும் வனைபோலநாம் வாழ்த்துபார்க்கலாம் வாதோழனே     பா.செ.கோ பா. 30

வேற்றொலி வெண்டுறை

நெல்வி ளைந்த பூமி எல்லாம் கட்டி டங்கள் ஆச்சி
பால்சு ரந்த அன்னை மார்பும் சுண்டி வத்தி போச்சி
சில்லு என்று வீசும் காற்றில் ஈரம் காஞ்சி போச்சி
காலம் மாறி வானம் பெய்ய லாச்சி
நல்ம ரங்கள் வெட்டித் தீர்த்த தாலே                            பா.செ.கோ பா. 31

மனதிலே இருக்கிற அமைதியும் தொலைந்துபோம் சுயநலம் எழுவதால்
குணமிலா மனிதரின் சுதந்திரம் தொலைந்துபோம் அகந்தைகள் பிறப்பதால்
உணர்விலா மனிதரின் உறவுகள் தொலைந்துபோம் பணம்உடன் இருப்பதால்
மனிதமும் தொலைந்துபோம் பொறாமைகள் இருப்பதால்
கனவுகள் தொலைந்துபோம் முயற்சிகள் இலையெனின்.                பா.செ.கோ பா. 32

ஆயிரம் தாமரை பூக்களின் சங்கமம் போலவே ஓர்உரு
பொய்கையில் ஆடிய பொற்சிலை போலவே பெண்ணென வந்துது
மையிடும் கண்களோ மானினம் சீவிய பின்னலோ தோரணம்
மையலில் மின்னலாய் புன்னகை பூக்குது
ஆழியைப் போலவே என்மனம் ஆடுது.                         பா.செ.கோ பா. 33

நாத்துநடும் பெண்களைப்போல் ஆசைகளை நட்டுவைத்தேன் என்மனதில்
பூத்தேடி தேன்சேர்க்கும் வண்டுபோல நான்சேர்த்தேன் என்கனவை
ஒத்ரையிலே பூத்திருந்து வாசமிடும் பூப்போல
சொத்துசுகம் இல்லாமல் வாடுகிறேன் உன்நினைவில்
சொத்தாக நீவந்தால் கூடுமடி என்ஆயுள்
பூத்திருக்கும் தாமரையே தேன்சொரியும் பூச்சரமே
முத்தமிட்டு எனைச்சேர மேகமென வாராயோ                  பா.செ.கோ பா. 34

மதம்பிடித்த களிறுபோல மனிதஇனம் உருவாகும் அதனாலே அதுஅழியும்
விதையில்லா பயிர்வளர்த்துச் சுவைக்காக உணவுஉண்டு உடல்கெட்டு திரிந்திடுவர்
சிதைமூட்டும் கனலாக கதிரவனின் அனல்இருக்க
சதைவெடித்து மருந்துதேடும் சமுதாயம் உருவாகும்
கரைகளிலே வருவதுபோல் பலமாயம் நடந்தேறும்
மதியின்றி மரமழித்து மழையின்றி தினம்தவிப்பர்
மதியுடையீர் மரம்நடுவீர் பலதுன்பம் தவிர்த்திடுவீர்             பா.செ.கோ பா. 35

மலச்சோலையில் பலமலரினம் மலர்ந்திருப்பதை அழகுஎன்கிறோம் நிறபேதமும் மறந்துகாண்கிறோம்
பலமலர்களைக் கதம்பமாகவே தொடுத்தணிகிறோம் மறுப்பதில்லையே அழகுசூரியன் தரும்வானவில்
பலவண்ணமே நிறம்வேறென வெறுப்பதில்லையே விரும்பிகாண்கிறோம் இயற்கைதந்திடும் பகுப்புதானடா
பலபூக்களில் தொகுத்ததேனிலே மலரின்வகை தெரிவதில்லை
பலமானிடர் வசிக்குமூரிலே இனம்பார்க்கிறார் மதம்பார்க்கிறார்         பா.செ.கோ பா. 36

துள்ளிஓடிடும் ஆற்றுநீரிலே பேதமில்லையே ஓடிசேர்ந்திடும் ஆழிநீரிலும் பேதமில்லையே
அள்ளிவீசிடும் மேகதூரலில் வர்ணமில்லையே வீசிவந்திடும் காற்றமேனியில் சாதியில்லையே
பிள்ளைசெல்லமும் பேதைநெஞ்சமும் காண்பதில்லையே சாதிவேற்றுமை தொற்றுநோய்களும் பார்ப்பதில்லையே
எல்லைஎன்றுநாம் பூமிஅன்னையைக் கூறுவோடுறோம் சாகும்வரை
எல்லைகாக்கவே சாதிபேரிலே சண்டைபோடுறோம் மாறடாமனம்               பா.செ.கோ பா. 37

நிலை வெளிவிருத்தம்
கண்கள் சாட்சி சொல்ல வேண்டி வாழ
கண்ணில் சாசுக் கட்டைக் காட்டி வாழ
உண்மை தூங்க சட்டம் தேடி வாழ
கண்கள் கட்டி நீதி சொல்வார் வாழ     பா.செ.கோ. பா. 38
அணிகலன் அணிவதால் உறுப்புகள் சிரித்திடா மனசுதான்
அணிகலன் இலையெனில் உடல்களும் அழுதிடா மனசுதான்
அணிவதால் இலையடா அழுவதும் சிரிப்பதும் மனசுதான்               பா.செ.கோ. பா. 39
தேனாய் இனிக்கும் தெகுட்டாக் க‘னியே நெருங்கிவா
மேனி குளிர்ந்திடும் தென்றல் சுவையே நெருங்கிவா
ஊனே உயிரே உணர்வே கனியே நெருங்கிவா
உன்னை நினைத்தேன் உருகித் தவித்தேன் நெருங்கிவா பா.செ.கோ. பா. 40
சாதிமத வேதமெல்லாம் சாத்திரத்தில் உள்ளதென்று ஏமாற்றி
பேதமுள்ள மக்களையே அங்கங்கே தள்ளிவைத்தான் ஏமாற்றி
பாதகமாய் நீதிகளைச் சாமிபேரில் சொல்லிவைத்து ஏமாற்றி
சாதகமாய் வாழ்வமைய செய்சடங்கு ஆக்கிவைத்தான் ஏமாற்றி பா.செ.கோ. பா. 41
பனைமரத்தின் இலைஎடுத்து பலவிதமாய் குடிசைபோட்டு புதுமையினால்
தனைகாக்கும் பயிர்வளர்த்து உணவுஉண்டு உயிர்வாழ்ந்தார் புதுமையினால்
அனல்கக்கும் மனையமைத்து மருந்துபோட்டு பயிர்ச்செய்து புதுமையினால்
மணமணக்க உணவுதேடி பலநேயால் உயிர்விடுவார் புதுமையினால்    பா.செ.கோ. பா. 42
கரிமேனியை நிறம்மாற்றியே உருவாகுதே புதுதலைமுறை புதுஉலகினில்
மரியாதையும் விலைகொடுத்துதான் பெறவேண்டிய நிலையானது புதுஉலகினில்
பொருள்தேடியே உயிர்துறக்கிறார் பொருளின்றியே தினம்தவிக்கிறார் புதுஉலகினில்    பா.செ.கோ. பா. 43
வேப்பந்தழை நோய்தீர்த்திடும் பூந்தேன்துளி நோய்ப்போக்கிடும் எப்போதுமே
அப்பன்உரை மேல்உயர்த்திடும் கற்றகல்வி உனைக்காத்திடும் எப்போதுமே
தப்பேதுமே செய்யாமலே ஊர்போற்றிட நீவாழ்ந்திடு எப்போதுமே        பா.செ.கோ. பா. 44
கண்ணில் பூக்கும் காதல் அல்ல நட்பு
மண்ணில் வேராய் சேர்ந்து வாழும் நட்பு
கண்ணில் காட்டும் காட்சி யல்ல நட்பு
உன்னுற் தோன்றும் எண்ணம் தானே நட்பு      பா.செ.கோ. பா. 45
கருவறை உறவுபோல் தொடர்ந்துடன் வருபவன் சினேகிதன்
துயருறும் பொழுதிலே உயிரையும் தருபவன் சினேகிதன்
அளவிலா பொருள்வர உறவினைத் தொடர்பவன் சினேகிதன்
பழிவரும் செயலினைப் பழித்ததை தடுப்பவன் சினேகிதன்       பா.செ.கோ. பா. 46
பறித்து எடுக்கும் விழிகள் ரசித்தேன் ஒருநாள்
பறித்து எடுத்து புசிக்க நினைத்தேன் ஒருநாள்
உருகும் மெழுகாய் உருகித் தவித்தேன் ஒருநாள்
கரிபோல் நினைவில் கனிந்து உதிர்ந்தேன் ஒருநாள்     பா.செ.கோ. பா. 47
மான்என்பார் ஆள்விட்டு ஆள்தாவி போவதனால் உன்கண்ணை
மீன்என்பால் கண்குளத்தில் இங்குமங்கும் ஓடுவதால் உன்கண்ணை
வீண்என்பேன் ஆணினங்கள் வீழ்ந்துவாடி மாய்வதனால் உன்கண்ணை  பா.செ.கோ. பா. 48
உடன்வந்து உறவாடி துயரத்தில் ஒதுங்கிடுவான் பகைநண்பன்
உடனிருந்து ரகசியங்கள் தெரிந்துகொண்டு அழித்திடுவான் பகைநண்பன்
உடையவன்போல் உரிமைகொண்டு உடமைகளைப் பறித்திடுவான் பகைநண்பன் பா.செ.கோ. பா. 49
தமிழ்மொழியினைத் தலைசுமந்திடு தமிழ்படித்தவர் உடன்உழைத்திடு இருக்கிறவரை
அமிழ்தினும்தமிழ் நனிஇனியது செவிகுளிர்ந்திட உரையாடிடு இருக்கிறவரை
தமிழர்களே தினம்உழைத்திடு புமிமுழுதிலும் தமிழ்பேசிட இருக்கிறவரை       பா.செ.கோ. பா. 50
மண்மூடியே நெல்காத்திடும் நெல்லின்நுனி வான்பார்த்திடும் பாட்டாளியால்
மண்சத்தினை நெல்உண்டிட சோம்பேரியும் சோறுண்ணுவான் பாட்டாளியால்
வான்வெளியினைத் கண்டுணரலாம் காற்றேறியே ஊர்சுற்றலாம் பாட்டாளியால்
வான்தொடும்மலை தூசாகிடும் கண்படும்சிலை வாய்ப்பேசிடும் பாட்டாளியால்  பா.செ.கோ. பா. 51
ஆசிரியத்தாழிசை

Popular Feed

Recent Story

Featured News