Saturday, March 1, 2014

விறகுகளாகும் சிறகுகள்

விறகுகளாகும் சிறகுகள்


நாம் அனைவரும் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் பல கனவுகளைச் சுமந்துகொண்டு அந்தக் கனவுகள் நடைபெற பல முயற்சிகளையும் செய்துவருகிறோம்,
வானம் கூட தொட்டுவிடும் தூரம்தான் எனற நம்பிக்கையோடு, வில்லில் இருந்து புறப்பட்ட அம்பைப்போல நாம் அடைய விரும்பும் இலக்கை நோக்கி நடைபோடுகிறோம்,



பெற்றோரின் அறிவுரைப்படி பள்ளிப்படிப்பைத் தொடங்கும் நமக்கு பல போராட்டங்கள் இடையிடையே வந்து நம்து போக்கை தடைசெய்துகொண்டுதான் இருக்கின்றன, அதையும் தாண்டி சாதிப்போர் சிலராகத்தான் இருக்கின்றனர்,

கனவில்லாமல் வாழ்பவர்க்கு அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத நிலையை அடைகின்றனர், கனவுகளோடு வாழ்பவர்க்குத்தான் பல சோதனைகளும் இன்னல்களும் அடுக்கடுக்காய் வந்து அவர்கள் மூச்சுவிட முடியாத அளவிற்கு நெருக்கடியைக் கொடுக்கின்றன,

படிக்கும் காலம் வரை பெற்றோர்களோடும் சமுதாயத்தோடும் போராடி வெற்றி பெருகிறோம், படித்த பிறகு சமுதாயத்தோடும் அரசோடும் போராடி வருகின்றோம்,

தங்கத்திற்குக் கூட நாளுக்கு நாள் விலை ஏற்றம்தான், ஆனால் படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் இருந்துவிட்டால் அவர்களின் மதிப்பு நாளுக்குநாள் குறைந்து கொண்டு வருவதும், அவர்களைச் செல்லாக் காசுகளாக மதிப்பதும் இந்த சமுதாயத்தில் நடைமுறைப் போக்காக அமைந்துவிட்டது,

கனவுகளைச் சுமந்துகொண்டு வந்த இளைஞர்களுக்கு பாறையில் முட்டி சோர்ந்து போகும் பறவையைப் போல மனம் உடைந்து போகின்ற சூழல்கள் ஏற்படுகின்றன,

கல்வியில் கரைகண்டவன் கூட தெண்டிச்சோறாகும் நிலை இந்த அரசாங்கத்தால் ஏற்படுகிறது என்றால் அது பொய்யல்ல. படித்து முடித்த ஒருவர் தமக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்துக் கொண்டிருக்கிறான், ஆனால் அவனுக்கு கிடைப்பதோ ஏமாற்றம் மட்டுமே,

போட்டித் தேர்வு என்ற மாய வலையில் நம்மையேல்லாம் விழவைக்கும் இந்த அரசாங்கம், கண்விழித்து கற்ற நூல்களையும் கல்லாத புது நூல்களையும் கற்று, எப்படி வினாக்கள் வந்தாலும் பதில் அளித்து வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற மனப்பான்மையில் சோறு உண்ணாமல், கண் துஞ்சாமல், குடும்பச் சூழலையும் வறுமையையும், சுற்றியுள்ள மற்றவரின் ஏசல்களையும் பொருட்படுத்தாமல் நமது ஒரே குறிக்கோள் அரசு வேலை என்ற சிந்தனையில் வாழ்கின்ற தருனத்தில், தந்திரமாய் பணம் இருப்பவர்கக்கும் அரசாங்கச் செல்வாக்கு இருப்பவர்க்கு மட்டுமே வேலை சூழ்நிலை ஏற்படும்போது மனம் நொந்து வாழ்வை வெறுக்கும் இளைஞர்கள் ஏராளம்,

இதுமட்டுமல்ல நாம் கற்ற கல்வி ஒரு புறம் இருக்க, நாம் கல்லாத கல்வியையும் கற்றால்தான் போட்டித் தேர்வுகளில் வெல்ல முடியும் என்ற நிலையும் உருவாகியுள்ளது,

சிலர் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக படித்த இளைஞர்களைத் தான் பலிகடா ஆக்குகின்றனர்,
தூக்கம் விற்றுத்தானே ஒரு கட்டில் வாங்க ஆசை
தூண்டில் விற்றுத்தானே ஒரு மீன்கள் வாங்க ஆசை
என்பதற்கேற்ப, நாம் கற்ற கல்வியால் எல்லாம் பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையில் வாழ்கின்ற இளைஞர்கள் தம் இளைமையைத் துளைத்துவிட்ட பிறகே புத்தி வருகிறது, நாம் எதிர்பார்க்கும் வேலையை விட ஏதேனும் வேலை கிடைத்தால் நம் வயிற்றுப் பசி போகுமென பின்னர்தான் யோசிக்க வேண்டியுள்ளது,
ஒவ்வொருத் துறையிலும் வேலை தேடிப்போனால் அனுபவம் உள்ளதா? டெபாசிட் கட்ட பணம் இருக்கிறதா? என்று கேள்விமேல் கேள்வி கேட்டு இருக்கின்ற கொஞ்ச நெஞ்ச உயிரையும் எடுத்து விடுகின்றனர்,

இத்தகைய சூழ்நிலையில் ஒரு நல்ல இளைஞர், படித்த இளைஞன், சாதிக்கவேண்டும் என்று புறப்பட்ட இளைஞன், தவறான ஒழுக்கம், தவறான நடத்தை, தவறான வழியில் செல்லத்தான் நேரிடுகின்றன,

இதற்குக் காரணம் யார்? சிந்தித்துப் பார்க்க வேண்டும், ஒருவரை ஒருவர் குறைசொல்லி பயனில்லை, சிந்தித்து செயல்பட வேண்டும்,

பெற்றோர்களே இளைஞர்களே சிந்தித்து செயல்படுங்கள் நமது இலக்கு நல்ல படிப்பு அல்ல, உயர்ந்த படிப்பு அல்ல, நமது வயிறு பசிக்காமல் அரைவயிறு சோறாவது உண்ண வேண்டும் என்பதே, இதற்காக பல சாதனைகளைப் புரியவேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு செயல்படாதீர்கள்,

உம்மை மித்துவிட்டு நம்மீது சவ்வாரி செய்ய நிறையபேர் காத்துக்கொண்டிருக்கின்றனர், கனவுகளையும் ஆசைகளையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, நமக்குக் கிடைக்கும் சிறுசிறு வேலைகளை செய்துகொண்டு முடிந்தால் அந்த வேலையில் சாதித்து வாழுங்கள்.

இன்று படித்து உயர்ந்தவர்களைவிட அனுபவத்தால் உயர்ந்தவர்களும் உழைப்பால் உயர்ந்தவர்களுமே அதிகம், அது எந்தத் துறையில் வேண்டுமானாலும் இருக்கலாம்,

சிந்தித்துச் செயல்படுவீர்,

Popular Feed

Recent Story

Featured News