Thursday, April 3, 2014

பாவினச் செய்யுட்கோவை

பாவினச் செய்யுட்கோவை

குறள்வெண் செந்துறை

கண்கள் காணும் காட்சி எல்லாம் கண்கள் தேடிக் காண்ப தில்லை
கண்கள் மட்டும் ஊமை என்றால் காணும் இன்பம் ஏது மில்லை                        பா.செ.கோ. பா. 1

கனவுகள் விழித்தெழ கடுமையாய் உழைத்திடு
தினந்தினம் மனதினைத் திடமுடன் நடத்திடு                                    பா.செ.கோ. பா. 2

கவிஞன் எழுதாக் கவிதை இயற்கை
புவியில் பிறந்து அழியும் குழந்தை                                             பா.செ.கோ. பா. 3

வள்ளுவரின் பாடலினை நாள்தோறும் கற்றுவந்தால்
நல்வழியில் சென்றிடலாம் நல்வாழ்வு பெற்றிடலாம்                            பா.செ.கோ. பா. 4

கலங்கமுள்ள நிலவுகூட பளபளன்னு ஒளிவீசும்
கலங்கமில்லா மலரினமே கலங்காதே விடிவுவரும்                             பா.செ.கோ. பா. 5

நிலம்விழும்மழை பலன்தந்திடும் கடல்விழும்துளி பலன்தருகுமோ
உலகுளவரை உனைப்புகழ்ந்திடும் இருக்கிறபொருள் கொடுத்துதவிடு.           பா.செ.கோ. பா. 6

நெல்லின்மணி மண்பார்திடும் நெஞ்சம்அதை எண்ணிபாத்திடு
கல்விகற்றவர் தாழ்ந்துவாழணும் என்றஉண்மையை கண்டுணர்ந்திடு            பா.செ.கோ. பா. 7

குறட்டாழிசை

வண்ண வண்ண ஆடை கட்டி
வாசல் வந்து போகும் பெண்ணே
வண்ண ஆடை காண்ப தில்லை
அங்கம் தேடிப் பார்க்கும்                                                        பா.செ.கோ. பா. 8

கருவிலே உருவரும் கடமைகள் உடன்வரும்
அவரவர் விதிப்பயன் அதனுடன் கலந்திடும்
பெருமைகள் வருவது பிறப்பினால் இலையடா
செயல்களே புகழினைப் பறையிடும்                                     பா.செ.கோ. பா. 9

பெண்ணியம் என்பது பெண்மையைப் போற்றுதல்
ஆண்களைத் தூற்றுதல் அல்லவே                                              பா.செ.கோ. பா. 10

வண்ணபூக்கள் ஒன்றுசேர்த்து ஆக்கிவைத்த மாலைபோல
        சின்னநூல்கள் ஒன்றுசேர்த்து நெய்தெடுத்த ஆடைபோல
மண்ணுலகில் வந்துதித்தோம் மானிடர்கள் ஆகிவிட்டோம்
        சாதிமத பேதமின்றி வாழ்ந்திடுவோம்                                   பா.செ.கோ. பா. 11

சுயநலத்தின் உருவாகி பொறாமைஅதன் உடன்சேர்த்து
        தனிமையாகப் பயனின்றி உயிர்வாழும் மனிதஇனம்
பயன்பாட்டுப் பொருட்களை மனிதனுக்குக் கொடுத்துதவி
        பலவிதமாய் அழியுதடா பசுமைஇனம்                                  பா.செ.கோ. பா. 12

ஒருகாலிலே அசைந்தாடிடும் மலரினங்கள் பலநிறத்தினில் பிறப்பெடுத்திடும்
திருவிழாக்களோ திருமணங்களோ பலமேடையை அலங்கரித்திடும்.            பா.செ.கோ. பா. 13

கற்பென்பது ஆண்பெண்என எல்லோர்க்குமே ஒன்றானது
கற்போடுநீ வாழ்ந்துகாட்டடா வாழ்நாள்வரை                                    பா.செ.கோ. பா. 14

வெண்டாழிசை

அச்சத் தோடு வாழ்ந்தி டாதே
அச்சம் நஞ்சாய் உன்னை மாய்க்கும்
அச்சம் நீங்கி வாழ்                                                             பா.செ.கோ. பா. 15

பிறரது பொருளினைக் கவர்ந்திட நினைப்பவர்
எரிகிற நெருப்பினைத் தலையிலே சுமப்பவர்
உருகிடும் மெழுகுதான் அவர்                                                   பா.செ.கோ. பா. 16

நிலவு மகளை நெருங்க நினைத்தேன் கனவில்
விலகும் இருளைப் பிடிக்க நினைத்தேன் ஒளியில்
நிலவாய் இருளாய் பணம்                                                      பா.செ.கோ. பா. 17

நெல்பசியைப் போக்கிவிடும் நம்தாகம் தீர்த்துவிடும் பூமியிலே
பல்லுயிர்கள் வாழ்ந்திடவே பெய்கின்ற மாமழைபோல் பூமியிலே
எல்லோரும் வாழ்ந்திடவே வாழ்                                                        பா.செ.கோ. பா. 18

கணுக்களிலே உயிர்வளர்த்திடும் கடித்துண்டால் சுவைகொடுக்கும்
எறும்புமுதல் பலஉயிர்கள் இதைக்கண்டால் விரும்பிஉண்ணும்
பயிர்களிலே பணப்பயிராம் கரும்பு                                              பா.செ.கோ. பா. 19

மரம்அழிந்திட மழைகுறைந்திடும் குளிர்விலகியே வெயில்படர்ந்திடும்
உயிர்வளத்திடும் குளிர்காற்றையும் புகைகக்கியே விஷமாக்கிடும்
மரம்வளர்த்துநீ உயிர்காத்திட விரும்பு                                          பா.செ.கோ. பா. 20

கொய்யாக்கனி பூவாமலர் கேளாச்செவி தீராப்பசி
செய்யாத்தொழில் காணர்க்கனா ஓயாஅலை பாடாஇசை
பேயாமழை உண்டோபயன் சொல்                                              பா.செ.கோ. பா. 21

வெள்ளொத்தாழிசை

மரங்கள் வளர்க்க மனிதா விரும்பு
மரங்கள் உனது உயிரை வளர்க்கும்
வரமாய் நினைத்து நடு

உரமாய் நிலத்தில் பயிரை வளர்க்கும்
சருகைக் கொடுத்து விளைச்சல் பெருகும்
வரமாய் நினைத்து நடு

எரியும் நெருப்பாம் வெயிலைக் தணிக்கும்
உறிஞ்சிப் பருகி புகையைத் தடுக்கும்
வரமாய் நினைத்து நடு                                                         பா.செ.கோ பா. 22

ஏரோட்டி சோறுபோடும் பாட்டாளி வர்க்கத்தை
ஏற்றமின்றி மாண்டுபோகும் ஏழைகளின் கூட்டத்தைப்
பார்க்காது நன்றிகெட்ட நாடு

வீட்டுபொருள் அத்தனையும் விற்றுபயிர் காப்பவரை
மாட்டைநம்பி வாழ்கின்ற மானமுள்ள கூட்டத்தை
விட்டுவிடும் நன்றிசெட்ட நாடு

பெற்றபொருள் கொண்டுவந்து நல்லவிலை கேட்டுநிற்கும்
விற்றபின்பு பெற்றபணம் பாதிகடன் தீர்த்துவீடும்
தீக்காது நன்றிகெட்ட நாடு                                                      பா.செ.கோ பா. 23

ஓரொலி வெண்டுறை

அக்கம் பக்கம் யாரும் இல்லை
பக்கம் வந்து ஆசை சொல்லு
வெக்கம் என்ன நெஞ்சிக் குள்ளே
பக்கம் வந்தால் போகும் மெல்ல
தாகம் தீர்க்க வா                                                               பா.செ.கோ பா. 24

கனவுகள் இலையெனில் உயர்வுகள் இலையடா கனவுகாண்
பணத்தினால் பெருமைகள் வருவது இலையடா பணிவுகொள்
அணைக்கிற கரங்களே உறவினை வளர்த்திடும்
அணைக்கிற நினைத்திடு உறவினை வளர்த்திடு                                 பா.செ.கோ பா. 25

ஒருவர் உணர்வில் விருப்பம் பிறக்கும்
இருவர் உணர்வில் அணையும் மனது
இருவர் விழிகள் இணைந்து நடந்தால்
இரும்பு இலவே மலையும் பொடியாம்
புரிந்து நடப்பார் சிலர்                                                           பா.செ.கோ பா. 26

மாணிடர்கள் வாழாத ஊருக்குள் நீவேண்டும் அந்திபகல் நேரமெல்லாம்
உனைத்தொட்டு ஆசைமொழி பேசவேண்டும் சொந்தமெல்லாம்
என்னைவிட்டுப் போகவேண்டும் சொந்தமென நீவேண்டும்                       பா.செ.கோ பா. 27

பிடிவாத குணமிருந்தால் குடும்பத்தில் அமைதிபோகும் மனதிலும்தான்
அடம்பிடிக்கும் குழந்தைபோல பெரியவர்கள் இருப்பதனால் வருவததிது
அடக்கிவைக்கும் குணமிருந்தால் உடல்நலமும் மனநலமும் தொலைந்துபோகும்
குடும்பத்தில் இருப்பவர்க்குக் குடும்பம்தான் பெரியசொத்து இழக்கலாமா?
விட்டுகொடு தொலைந்துபோன உறவுகளும் திரும்பவரும்                      பா.செ.கோ பா. 28

அழவைத்துபார்ப் பதெல்‘லாம்திமிர் பிடித்தபெண்குணம்
        அமைதிகாப்பதால் அடங்கிபோகிறார் எனபொருள்இலை
அழகாகதம் குடூம்பத்தினை நடத்திசெல்கிறார் எனஆகுமே
அழவைக்கவும் அணைத்துக்காக்கவும் தெரிந்தவர்விவே கஆணின்குணம்               பா.செ.கோ பா. 29

பூமிவிட்டுநாம் தாவிசெல்கையில் வானமேனியில்
        வர்ணமில்லையே பேதமில்லையே எல்லையில்லையே
நாம்இறக்கையில் கொண்டுசெல்வதும் வானைப்போலவே ஒன்றுமில்லையே
பூமிதன்னிலும் வனைபோலநாம் வாழ்த்துபார்க்கலாம் வாதோழனே             பா.செ.கோ பா. 30

வேற்றொலி வெண்டுறை

நெல்வி ளைந்த பூமி எல்லாம் கட்டி டங்கள் ஆச்சி
பால்சு ரந்த அன்னை மார்பும் சுண்டி வத்தி போச்சி
சில்லு என்று வீசும் காற்றில் ஈரம் காஞ்சி போச்சி
காலம் மாறி வானம் பெய்ய லாச்சி
நல்ம ரங்கள் வெட்டித் தீர்த்த தாலே                                            பா.செ.கோ பா. 31

மனதிலே இருக்கிற அமைதியும் தொலைந்துபோம் சுயநலம் எழுவதால்
குணமிலா மனிதரின் சுதந்திரம் தொலைந்துபோம் அகந்தைகள் பிறப்பதால்
உணர்விலா மனிதரின் உறவுகள் தொலைந்துபோம் பணம்உடன் இருப்பதால்
மனிதமும் தொலைந்துபோம் பொறாமைகள் இருப்பதால்
கனவுகள் தொலைந்துபோம் முயற்சிகள் இலையெனின்.                                பா.செ.கோ பா. 32

ஆயிரம் தாமரை பூக்களின் சங்கமம் போலவே ஓர்உரு
பொய்கையில் ஆடிய பொற்சிலை போலவே பெண்ணென வந்துது
மையிடும் கண்களோ மானினம் சீவிய பின்னலோ தோரணம்
மையலில் மின்னலாய் புன்னகை பூக்குது
ஆழியைப் போலவே என்மனம் ஆடுது.                                         பா.செ.கோ பா. 33

நாத்துநடும் பெண்களைப்போல் ஆசைகளை நட்டுவைத்தேன் என்மனதில்
பூத்தேடி தேன்சேர்க்கும் வண்டுபோல நான்சேர்த்தேன் என்கனவை
ஒத்ரையிலே பூத்திருந்து வாசமிடும் பூப்போல
சொத்துசுகம் இல்லாமல் வாடுகிறேன் உன்நினைவில்
சொத்தாக நீவந்தால் கூடுமடி என்ஆயுள்
பூத்திருக்கும் தாமரையே தேன்சொரியும் பூச்சரமே
முத்தமிட்டு எனைச்சேர மேகமென வாராயோ                                  பா.செ.கோ பா. 34

மதம்பிடித்த களிறுபோல மனிதஇனம் உருவாகும் அதனாலே அதுஅழியும்
விதையில்லா பயிர்வளர்த்துச் சுவைக்காக உணவுஉண்டு உடல்கெட்டு திரிந்திடுவர்
சிதைமூட்டும் கனலாக கதிரவனின் அனல்இருக்க
சதைவெடித்து மருந்துதேடும் சமுதாயம் உருவாகும்
கரைகளிலே வருவதுபோல் பலமாயம் நடந்தேறும்
மதியின்றி மரமழித்து மழையின்றி தினம்தவிப்பர்
மதியுடையீர் மரம்நடுவீர் பலதுன்பம் தவிர்த்திடுவீர்                             பா.செ.கோ பா. 35

மலச்சோலையில் பலமலரினம் மலர்ந்திருப்பதை
அழகுஎன்கிறோம் நிறபேதமும் மறந்துகாண்கிறோம்
பலமலர்களைக் கதம்பமாகவே தொடுத்தணிகிறோம்
மறுப்பதில்லையே அழகுசூரியன் தரும்வானவில்
பலவண்ணமே நிறம்வேறென வெறுப்பதில்லையே
விரும்பிகாண்கிறோம் இயற்கைதந்திடும் பகுப்புதானடா
பலபூக்களில் தொகுத்ததேனிலே மலரின்வகை தெரிவதில்லை
பலமானிடர் வசிக்குமூரிலே இனம்பார்க்கிறார் மதம்பார்க்கிறார்                 பா.செ.கோ பா. 36

துள்ளிஓடிடும் ஆற்றுநீரிலே பேதமில்லையே
ஓடிசேர்ந்திடும் ஆழிநீரிலும் பேதமில்லையே
அள்ளிவீசிடும் மேகதூரலில் வர்ணமில்லையே
வீசிவந்திடும் காற்றமேனியில் சாதியில்லையே
பிள்ளைசெல்லமும் பேதைநெஞ்சமும் காண்பதில்லையே
சாதிவேற்றுமை தொற்றுநோய்களும் பார்ப்பதில்லையே
எல்லைஎன்றுநாம் பூமிஅன்னையைக் கூறுவோடுறோம் சாகும்வரை
எல்லைகாக்கவே சாதிபேரிலே சண்டைபோடுறோம் மாறடாமனம்                       பா.செ.கோ பா. 37

நிலை வெளிவிருத்தம்

கண்கள் சாட்சி சொல்ல வேண்டி - வாழ
கண்ணில் சாசுக் கட்டைக் காட்டி - வாழ
உண்மை தூங்க சட்டம் தேடி - வாழ
கண்கள் கட்டி நீதி சொல்வார் - வாழ                                           பா.செ.கோ. பா. 38

அணிகலன் அணிவதால் உறுப்புகள் சிரித்திடா - மனசுதான்
அணிகலன் இலையெனில் உடல்களும் அழுதிடா - மனசுதான்
அணிவதால் இலையடா அழுவதும் சிரிப்பதும் - மனசுதான்                     பா.செ.கோ. பா. 39

தேனாய் இனிக்கும் தெகுட்டாக் க‘னியே - நெருங்கிவா
மேனி குளிர்ந்திடும் தென்றல் சுவையே - நெருங்கிவா
ஊனே உயிரே உணர்வே கனியே - நெருங்கிவா
உன்னை நினைத்தேன் உருகித் தவித்தேன் - நெருங்கிவா                       பா.செ.கோ. பா. 40

சாதிமத வேதமெல்லாம் சாத்திரத்தில் உள்ளதென்று - ஏமாற்றி
பேதமுள்ள மக்களையே அங்கங்கே தள்ளிவைத்தான் - ஏமாற்றி
பாதகமாய் நீதிகளைச் சாமிபேரில் சொல்லிவைத்து - ஏமாற்றி
சாதகமாய் வாழ்வமைய செய்சடங்கு ஆக்கிவைத்தான் - ஏமாற்றி                       பா.செ.கோ. பா. 41

பனைமரத்தின் இலைஎடுத்து பலவிதமாய் குடிசைபோட்டு - புதுமையினால்
தனைகாக்கும் பயிர்வளர்த்து உணவுஉண்டு உயிர்வாழ்ந்தார் - புதுமையினால்
அனல்கக்கும் மனையமைத்து மருந்துபோட்டு பயிர்ச்செய்து - புதுமையினால்
மணமணக்க உணவுதேடி பலநேயால் உயிர்விடுவார் - புதுமையினால்          பா.செ.கோ. பா. 42

கரிமேனியை நிறம்மாற்றியே உருவாகுதே புதுதலைமுறை - புதுஉலகினில்
மரியாதையும் விலைகொடுத்துதான் பெறவேண்டிய நிலையானது - புதுஉலகினில்
பொருள்தேடியே உயிர்துறக்கிறார் பொருளின்றியே தினம்தவிக்கிறார் – புதுஉலகினில்
பா.செ.கோ. பா. 43

வேப்பந்தழை நோய்தீர்த்திடும் பூந்தேன்துளி நோய்ப்போக்கிடும் - எப்போதுமே
அப்பன்உரை மேல்உயர்த்திடும் கற்றகல்வி உனைக்காத்திடும் - எப்போதுமே
தப்பேதுமே செய்யாமலே ஊர்போற்றிட நீவாழ்ந்திடு - எப்போதுமே              பா.செ.கோ. பா. 44

மண்டில வெளிவிருத்தம்

கண்ணில் பூக்கும் காதல் அல்ல - நட்பு
மண்ணில் வேராய் சேர்ந்து வாழும் - நட்பு
கண்ணில் காட்டும் காட்சி யல்ல - நட்பு
உன்னுற் தோன்றும் எண்ணம் தானே - நட்பு                                    பா.செ.கோ. பா. 45

கருவறை உறவுபோல் தொடர்ந்துடன் வருபவன் - சினேகிதன்
துயருறும் பொழுதிலே உயிரையும் தருபவன் - சினேகிதன்
அளவிலா பொருள்வர உறவினைத் தொடர்பவன் - சினேகிதன்
பழிவரும் செயலினைப் பழித்ததை தடுப்பவன் - சினேகிதன்                     பா.செ.கோ. பா. 46

பறித்து எடுக்கும் விழிகள் ரசித்தேன் - ஒருநாள்
பறித்து எடுத்து புசிக்க நினைத்தேன் - ஒருநாள்
உருகும் மெழுகாய் உருகித் தவித்தேன் - ஒருநாள்
கரிபோல் நினைவில் கனிந்து உதிர்ந்தேன் - ஒருநாள்                           பா.செ.கோ. பா. 47

மான்என்பார் ஆள்விட்டு ஆள்தாவி போவதனால் - உன்கண்ணை
மீன்என்பால் கண்குளத்தில் இங்குமங்கும் ஓடுவதால் - உன்கண்ணை
வீண்என்பேன் ஆணினங்கள் வீழ்ந்துவாடி மாய்வதனால் - உன்கண்ணை         பா.செ.கோ. பா. 48

உடன்வந்து உறவாடி துயரத்தில் ஒதுங்கிடுவான் - பகைநண்பன்
உடனிருந்து ரகசியங்கள் தெரிந்துகொண்டு அழித்திடுவான் - பகைநண்பன்
உடையவன்போல் உரிமைகொண்டு உடமைகளைப் பறித்திடுவான் - பகைநண்பன்       பா.செ.கோ. பா. 49

தமிழ்மொழியினைத் தலைசுமந்திடு தமிழ்படித்தவர் உடன்உழைத்திடு - இருக்கிறவரை
அமிழ்தினும்தமிழ் நனிஇனியது செவிகுளிர்ந்திட உரையாடிடு - இருக்கிறவரை
தமிழர்களே தினம்உழைத்திடு புமிமுழுதிலும் தமிழ்பேசிட - இருக்கிறவரை     பா.செ.கோ. பா. 50

மண்மூடியே நெல்காத்திடும் நெல்லின்நுனி வான்பார்த்திடும் - பாட்டாளியால்
மண்சத்தினை நெல்உண்டிட சோம்பேரியும் சோறுண்ணுவான் - பாட்டாளியால்
வான்வெளியினைத் கண்டுணரலாம் காற்றேறியே ஊர்சுற்றலாம் - பாட்டாளியால்
வான்தொடும்மலை தூசாகிடும் கண்படும்சிலை வாய்ப்பேசிடும் - பாட்டாளியால் பா.செ.கோ. பா. 51

ஆசிரியத்தாழிசை

தண்ணீர்த் தேடி தண்ணீர்த் தேடி
தண்ணீர் இன்றித் தாகம் தீர்ப்பான்
மண்ணைப் பூசி நோய்கள் தீர்ப்பான்                                             பா.செ.கோ. பா. 52

விரிசடை கடவுளைத் தினம்தினம் வழிபட
எரிசுடர் கிதிர்களும் நெருங்கிட பயப்படும்
சரவணன் பெயர்சொல நெருங்குமோ பிறவினை                                        பா.செ.கோ. பா. 53

சங்கொடு சக்கரம் கைகளில் ஏந்தியே
பாண்டவர் புத்திரர் தன்குறைத் தீர்த்திட
மண்ணிலே கீதையைத் தந்தவன் கண்ணணே                                   பா.செ.கோ. பா. 54

கண்களினால் தூதுவிட்டு காதலென வந்தவளே
கண்ணீரைச் சிந்துகிறேன் காரணத்தை நீயறிவாய்
என்னைப்போல் எத்தனைபேர் வேதனையில் வீழ்ந்தனரோ?                      பா.செ.கோ. பா. 55

சதைபருத்து அழகானால் பலகண்கள் உரசிசெல்லும்
மதுகுடித்த மயக்கம்போல் தனைமறந்து தினம்ரசிக்கும்
அதற்கான கடமைகளை மறந்துவிட்டு பொழுதுபோக்கும்                                பா.செ.கோ. பா. 56

குடிநீரைனைத் திணம்தேடிடும் மனிதர்களே புரிகின்றதா?
செடிகொடிகளும் வறண்டுபோய்விடும் மழையில்லையேல் வரும்மழையினை
கடும்முயற்சியால் நகர்முழுதிலும் குளம்தோண்டியே குறைதீர்த்திடு             பா.செ.கோ. பா. 57

தண்ணீர்பொறி யாலேபுவி யுள்ளேஉள நீரைவெளியெ டுத்தோம்அதை
கொண்டேபல நன்செய்நிலம் மீதேபயிர் செய்தேபல நெல்லின்வகை
கொண்டேபசி நீங்கிவாழ்கிறோம் தண்ணீர்குறை வாலேநிலம் பாலையானதே    பா.செ.கோ. பா. 58

தென்றல் காற்றாய் மெல்ல வீசி
என்னைத் தூக்கிப் போகும் கண்கள்
தண்ணீர்த் தூக்கும் மேகம் போல

கண்கள் பேசி மௌனம் சொல்லி
என்னைத் தூக்கிப் போகும் நெஞ்சம்
வானில் செல்லும் கப்பல் போல


மூங்கில் காற்றாய் என்னைத் தீண்டி
நெஞ்சக் கூட்டில் என்னைச் சேர்ப்பாய்
பூந்தேன் சேர்க்கும் தேனீப் போல                                                       பா.செ.கோ. பா. 59

பலநிற தலைமுடி அலையெனக் குதித்திட
பலவித உடுப்புகள் உடலினை இறுக்கிட
கலையென எகிறியே நடக்கிறாள் தமிழ்மகள்

புதுவகை உடைகளோ உடலினை வெளியிடும்
ததும்பிடும் அழகினை ஒளியென விளக்கிடும்
புதுமையாய் நினைத்ததை அளிகிறாள் தமிழ்மகள்

பலவித பொருள்களை அழகென அணிபவள்
விலையிலா அழகினை கடையென விரிப்பவள்
அலையென உலவிடும் அழகிய தமிழ்மகள்                                     பா.செ.கோ. பா. 60


மரங்கள் பழுத்தால் கிளிகள் வருமே
பிறக்கும் புதுசாய் அதனுள் உறவே
இறக்கும் வரையில் இருந்தால் நலமே

குளங்கள் நிறைந்தால் அதனின் அருகில்
பலவும் வருமே பலனும் பெறுமே
விலகும் அவைகள் இலைநீர் எனினே

மரங்கள் துளிர்த்தால் நிழலில் ஒதுங்கும்
பறவை மனிதன் விலங்கு எலாமும்
மரங்கள் உதிர்ந்தால் அதுவே அனாதை                                         பா.செ.கோ. பா. 61

ஆடிமாசம் காத்தடிக்க ஆசைநெஞ்சம் சேர்ந்தணைக்க
கட்டிவைத்த ஆசையெல்லாம் காட்டாறாய் பாய்ந்தோட
பாட்டோடு ராகமென சேர்ந்துநாம வாழலாமே

மார்கழியில் சாத்தடிக்க மார்போடு சேர்ந்தணைக்க
போர்வைக்குள் பூப்பறிக்க மெனியெங்கும் நீர்த்துளிர்க்க
பார்த்துவைத்த சொந்தம்போல் சேர்ந்துநாம வாழலாமே

சித்திரையில் காத்தடிக்க சின்னஇடை சேர்ந்தணைக்க
முத்தமிட்டு முத்தமிட்டு பூவிதழ்கள் சோர்ந்துவிட
சொத்துசுகம் நாமென்று சேர்ந்துநாம வாழலாமே                                       பா.செ.கோ. பா. 62

ஆசிரிய நேர்த்துறை

வானம் பார்த்த பூமி போல
காணம் பார்த்து ஏங்கி நின்றேன்
காணம் பார்த்து ஏங்கி நிற்க
ஏணம் நீட்டி வந்தான்                                                           பா.செ.கோ. பா. 66

பணம்உள மனிதரைக் கடவுளாய் மதிக்கிறார்
பணம்இலை எனசொலின் செருப்பென மிதிக்கிறார்
பணத்தினை மதித்திடு அதுவர உழைத்திடு
பணம்என உயருமே மதிப்புகள்                                                 பா.செ.கோ. பா. 67

நண்பராய் வாழ்ந்தவர் காதலில் வீழ்வரோ?
கண்டதும் காதலில் வீழ்கிறார்
பின்பவர் நட்பெனும் போர்வையில் வாழ்ந்துதன்
உன்னதக் காதலை நட்புடன் சொல்கிறார்                                               பா.செ.கோ. பா. 68

தன்னுயிரைக் காப்பதற்கு மண்ணுயிரை மாய்கின்ற மூடர்காள்
ஈன்றெடுத்த தாய்தந்தை உன்னைக்காக்க பாடுபட்டார்
உண்ணுபொருள் அத்தனையும் நீவாழ இன்னுயிரை அற்பணிக்கும்
என்றுதான்நீ கற்பூரம் சந்தனமாய் மற்றவர்க்காய் வாழ்வாயோ?                 பா.செ.கோ. பா. 69

உரித்தெடுக்கும் உணர்வுகளை விரித்துவைக்கும் அழகிகளே
இருட்டறையில் பசிதீர்க்கும் நடைபிணங்காள்
வெறிபிடித்த நரிக்கூட்டம் விளையாடும் தொழுவத்தில்
சரியென்று தவறுகளை அரக்கேற்றும் தரகர்நீர்                                  பா.செ.கோ. பா. 70

மலைசெல்வமும் சிறுகதேயுமே உழைப்பிலாமலே அமர்ந்துண்கையில்
சிலைபோலவே செயல்மறந்திடின் உடைமைபோகுமே
உலகவாழ்க்கையில் வித்துகொண்டவர் உயர்ந்துவாழ்கிறார் உயர்வுஎன்பது
அலைபோலவே முயன்றுவெல்வது உயர்ந்துவாழ்ந்திடு கொடுத்துதவிடு         பா.செ.கோ. பா. 71

வீசும்அலை காற்றில்வரும் பூவின்இதழ் வாசம்தரும்
வீசும்புயல் தூரல்தரும் கண்ணின்ஒளி பார்வைதரும்
பேசும்மொழி அர்த்தம்தரும் எந்தன்மனம் அன்பைத்தரும்
பேசும்விழி காதல்சொலி ஆவிதருமோ?                                         பா.செ.கோ. பா. 72

ஆசிரிய இணைகுறட்டுறை

சிட்டுப் போல துள்ளி ஓடி ஆடி வாழ்ந்தேன்
கட்டுப் பட்டுக் கூண்டுக் குள்ளே வீழ்ந்தேன்
கட்டுப் பட்டுக் கூண்டுக் குள்ளே வீழ்ந்து
விட்டுச் செல்ல நெஞ்சம் இன்றி அங்கே மாய்ந்தேன்                            பா.செ.கோ. பா. 73

கணக்கிற மனச்சுமை இறக்கிட நினைக்கிறேன் முடியலை
எனக்கென உனக்கென பறிக்கிறார் உரிமையை
எனக்கென உனக்கென பறித்திடும் உரிமைகள்
எனக்கென ஒருமுறை வரும்வரை பொருத்திட நலம்வரும்                     பா.செ.கோ. பா. 74

வேலையில் சோம்பலைக் கண்டவர் எந்திரம் செய்கிறார்
வேலையை எந்திரம் செய்வதால்
வேலையில் லாமலே போகுது
வேலையில் சோம்பலை ஓட்டினால் வெல்வது நிச்சயம்                         பா.செ.கோ. பா. 75

கற்பூர புன்னகையில் நீர்த்துபோகும் மௌனங்கள் எத்தனையோ
அர்த்தமில்லா வாழ்க்கையில் ஆயிரமாம் சோகங்கள்
ஆர்ப்பறித்து நெஞ்சிக்குள் மாண்டுபோகும் சொப்பனங்கள்
ஏற்றாத தீபங்கள் ஏற்றஒரு ஆள்இன்றி கூண்டுக்குள்                            பா.செ.கோ. பா. 76

ஒருபொருளைக் கொடுப்பதற்கு பலதடவை பரிசிலிப்பார் பலன்மட்டுமே எதிர்பார்த்து
உறவுகளை ஒதுக்கிவைத்து உயிர்மூச்சாய் பொருள்சேர்ப்பார்
இறந்தபின்பு பணம்காசு நிலபுலங்கள் உடன்வருமோ? பலருக்கும் கொடுத்துதவு
சருகாகி வீழ்ந்தாலும் மரம்கூட பலன்தருதே.                                   பா.செ.கோ. பா. 77

கடைவீதியில் தினம்உண்ணுவார் கடன்வாங்கியே சுவைதேடுவார்
உடன்வளர்கிற குணம்தானடா அதைமாற்றிடு
உடன்வள்ர்கிற குணம்தானடா அதைமாற்றினால்
கடைமனிதனும் முயன்றுவாழ்விலே உயர்வானடா அதைஉணர்ந்திடு           பா.செ.கோ. பா. 78

சின்னத்திரை வண்ணத்திரை எந்தத்திரை யாகினும்அதில்
கன்னியமுடன் கோவனம்அணி கின்றஆண்களோ
மேனிதெரியா ஆடைஅணிவர் மேனிகாத்திடும்
பெண்களின்உடை சிற்றாடையாய் மாறிபோனதே யாதைசாற்றுவேன்?           பா.செ.கோ. பா. 79

ஆசிரிய நிலைவிருத்தம்

மண்ணில் பூக்கும் ரோசாப் பூவோ?
        மெல்லப் போகும் தென்றல் காற்றோ?
கண்ணில் காணும் தெய்வம் தானோ?
        கால்கள் கொண்ட கன்னிப் பெண்ணோ?
கண்கள் தீண்ட நெஞ்சில் வந்தாள்
        காற்றில் வந்த வாசம் போல
கண்கள் நான்கும் மோதிக் கொள்ள
        காதல் என்று சொல்லிப் போனால்                                      பா.செ.கோ. பா. 80

சிறகுகள் விரித்துஎன் நினைவுகள் பறக்குது
        சரளமாய் கவிதையை உதடுகள் முனுக்குது
இரவிலும் பகலிலும் உணர்வுகள் துடிக்குது
        இனியிலைக் கவலைகள் எனஅது சிரிக்குது
இறைவனோ? மனிதனோ? விலங்கினம் பறவையோ?
        எதுவென இருப்பினும் மனதினில் கமம்மிகின்
உறக்கமும் உணவையும் துறந்துதான் எதிர்ப்படும்
        ஒருதரம் விழிபடின் வளருமே நிலவுபோல்                             பா.செ.கோ. பா. 81

பூக்களின் தேன்துளி பூவெலாம் பாய்ந்திடும்
        பார்க்கிற உன்முகம் சிந்தையில் சேர்ந்திடும்
சக்கரைக் கட்டியைத் தேடுமெ றுப்புபோல்
        சல்லடை போட்டது மின்னலாய் தேடிடும்
அக்கரை தாண்டியும் ஆசைகள் ஊறிடும்
        அண்ணமாய் நீவர கண்பசி ஆறிடும்
முக்கனிச் சாறென உன்அருள் நான்பெற
        பக்கமாய் நீவர வேண்டுமே என்னுடன்  பா.செ.கோ. பா. 82

ஆடைகட்டும் பூந்தோப்பு துள்ளிவரும் வீராப்பு
        ஆடுதடி கண்களிலே வாடையிலே பூமழைபோல்
கூடுவிட்டு கூடுபாயும் வித்தையினை நீகொடுத்தாய்
        கூட்டுக்குள் நீயிருந்தால் கூடுமடி என்ஆயுள்
சாடையிலே ஆசைசொல்லி கேட்குதடி உன்கண்கள்
        சந்திரனில் சேர்ந்துவிட ஏங்குதடி என்ஆவல்
ஆடியிலே சாத்தடித்தாய் காய்ந்துவிடும் அத்தனையும்
        காயாது நிற்குமடி என்காதல் உன்னோடு        பா.செ.கோ. பா. 83

நிலவொளியில் அடியெடுத்து குளிர்வாடை உடல்போர்த்தி
        பனித்தூஉம் பொழுதினிலே உனைக்காண மனம்ஏங்கும்
விளக்கொளிகள் அனைந்துவிட விடியாத கனவுக்குள்
        வளமான அழகோடு எனைத்தேடி வருவாய்நீ
சிலைவடிக்கும் கலைஞன்போல் உனைவடித்து ரசித்திடுவேன்
        சிலிர்த்தெழுந்த உணர்வுகளில் மறுபிறவு எடுத்திடுவேன்
கலைபலவும் உனக்குள்ளே இருக்குதடி அதைக்கற்று
        கரைசேர பதவிதமாய் எனக்குதவ வருவாயோ? பா.செ.கோ. பா. 84

அழகோவியம் உயிரானதாய் அசைந்தாடிடும் மலர்ப்போலவே
        இதழ்ஆடைகள் உடல்மூடிட இமையாமலே சிலையாகிறாய்
மழைமேகமாய் உனைத்தீண்டிட விழிஇமைகளும் படம்பிடிக்குதே
        முழுநிலவுபோல் முகம்கண்டவர் முழுங்காமலே அசைபோடுவார்
பழம்தேடியே வரும்பறவைபோல் பலர்வருகிறார் உடன்பழகிட
        பழகிடவரும் பலமனிதருள் எனைமட்டுமே உனில்சேர்க்கிறாய்
வழிந்தோடிடும் குளநீரென நினைவலைகளே எனைவாட்டுதே
        உழைப்பாளியின் பசிதீர்வதாய் உனைக்கண்டதும் மனம்குளிருதே               பா.செ.கோ. பா. 85

ஆடைபோலவே என்னைபோர்த்தியே என்றுநீஎனைத் தீண்டுவாய்தினம்
        அன்னமில்லையே தூக்கமில்லையே என்றுஉன்னுடன் பேசுவேன்உனைத்
தொட்டுபேசிட வேண்டுமென்றுஎன் உள்ளமேங்குது கூடுமோமனம்
        தொட்டுசேர்ந்திட நல்லநாளினை எண்ணிஎண்ணியே வாழுதுதினம்
வீட்டுசெல்லமாய் உன்மடியிலே கொஞ்சிபேசிட வேண்டுமேஇதழ்
        பட்டுபட்டுஎன் தேகமெங்கிலும் பூப்பூத்திட செய்திடுஎனைத்
தொட்டிலாடிடும் பிள்ளைபோலவே நெஞ்சஊஞ்சலில் ஆட்டுவேன்மழை
        செந்நீரென ஒன்றுசேர்ந்துநாம் இன்பமாகவே கூடிவாழலாம்.             பா.செ.கோ. பா. 86

மண்டில ஆசிரியவிருத்தம்

கண்ணுக் குள்ளே நீதான் காதல் சொல்லிப் போனாய்;
நெஞ்சிக் குள்ளே நீதான் மெல்ல மெல்ல ஆனாய்;
என்ன மாயம் செய்தாய்? என்னைத் தேட வைத்தாய்;
கண்கள் போல காந்தம் வேறு உண்டோ சொல்வாய்?                           பா.செ.கோ. பா. 87

பதவித மனிதரில் பலவித நினைவுகள் பலவித குணமதில்
சிலநொடி ஒருகுணம் சிலநொடி மறுகுணம் சரளமாய் நடிக்கிறோம்
தலைவனைப் புகழ்வதும் தரமிலர் இகழ்வதும் பெருமையாய் நினைக்கிறோம்
மலையென பெருஞ்சுமை அடுத்தவர் பழிச்சுமை முதுகினில் சுமக்கிறோம்              பா.செ.கோ. பா. 88

மலரைத் தொடாமங் கையும்இங் கிலவே மனமும் இலைவே
நிலவை ரசிக்கா கவிஞன் இலவே குழந்தை இலவே
உலகை உலவா வளியும் இலவே முகிலும் இலவே
கலையை கவரா விழியும் உளமும் இலவே இலவே                            பா.செ.கோ. பா. 89

வெள்ளிநிலா வீதியிலே ஊர்வளமாய் போகையிலே கண்களுடன் போகுதடா
பிள்ளையினை விட்டுவிட்டு தேடுகிற அன்னையைப்போல் கண்ணலைந்து தேடுதடா
கிள்ளைமொழி போல்அவளின் செல்லமொழிக் கேட்பதற்கு உள்ளமது நாடுதடா
துள்ளிவரும் ஆசையிலே தேன்குடிக்கும் வண்டினைப்போல் நெஞ்சமது ஆகுதடா       பா.செ.கோ. பா. 90

வளர்ந்துவதும் ஒருமரத்தின் இருகிளையில் ஒருகிளைக்கு
        உரம்போட்டு மறுகிளையை ஒடித்துவைத்தால் பலன்தருமோ?
வளம்செழிக்கும் ஓர்ஆற்றின் இருகரையில் ஒருகரையை
        உயர்த்திகட்டி மறுகரையை உடைத்துவிட்டால் பயன்உண்டா?
நலம்மிகுந்த இருகண்ணில் ஒருக்கண்ணைப் பறித்தெடுத்து
        மறுக்கண்ணில் மருந்துவிட்டால் பொருட்காட்சி தெரிவதுண்டோ?
பலன்கொடுக்கும் ஒருதெய்வம் ஒருவருக்கு அருள்கொடுத்து
        எளியவரை ஒதுக்கிவைத்தால் இறைவனென்று மொழிவதுண்டா?               பா.செ.கோ. பா. 91

பொருள்தேடியே உறவாடுவார் பொருள்இன்றியே
        வழிமாறுவார் புரியாமலே சிலர்வாடுவார்
பொருள்வாங்கிட தினம்பேசுவார் பொருள்ஒன்றையே
        பொருள்செய்குவார் மனிதர்களை மதியாதவர்
பொருள்இருக்கையில் இறைகாட்சியும் எளிதாகுமே
        பொருள்இல்லையேல் சொரிநாய்களும் மிதித்தோடுமே
பொருள்தேடிட முன்றோடடா பொருளாகவே
        அதுசெய்திடும் அரசர்களும் உனைத்தேடுவார்                           பா.செ.கோ. பா. 92

மாறாதது மாற்றம்என மண்மீதிலே
        சொல்வார்சிலர் மாற்றங்களோ ஏராளமாய்
நேற்றிருந்தது இன்றில்லையே வான்நீர்வளி
        மண்மரம்என எல்லாமுமே மாரிபோனதே
ஏரிகுளமாய் பாசம்எலாம் காய்ந்துபோனது
        நேசஉறவு விக்கிவிக்கியே மான்டுபோனது
நேர்மைஎன்பது வாழ்ந்தகனவாய் தேய்ந்துபோனது
        காசுகொண்டவர் ஆட்டிவைத்திட பூமிஆடுதே                            பா.செ.கோ. பா. 93

சிறப்புடைக் கலித்தாழிசை

உண்மை அன்பு பாசம்
மூன்றும் நட்பில் வீசும்
அண்ணன் தம்பி போல
அண்டி வாழ வைக்கும்
வண்ணம் நூறு ஆயின்
வான வில்லாய் சேர்க்கும்
கண்ணில் பார்வைப் போல
ஒன்றே காட்சி ஆவோம்
இன்னும் என்ன சொல்ல நட்பை.                                                        பா.செ.கோ. பா. 94

படித்திட படித்திட அறிவொளிப் பெருகுமே
படித்தவர் செயல்பட புதுமைகள் பிறக்குமே
படித்திட நினைத்திடு உலகினை உயர்த்திடு அறிவினால்                         பா.செ.கோ. பா. 95

குறுக்கு வழியில் இலக்கை அடைய
விரும்பி முயன்று அனைந்து திரிவார்
கருத்தாய் உழைத்து கடமை யைசெய்தால்
குறித்த செயலும் பலனைத் தருமே முயல்வாய்                                 பா.செ.கோ. பா. 96

என்பார்வை யில்உதிரும் புன்னகையும்
நான்பார்த்த தும்கவிழும் கண்ணிமையும்
உன்அசைவி னில்அசையும் காதணியும்
உன்நடையி னில்குளுக்கும் பேரழகும்
தான்பெண்ணே உள்ளமுனைப் பாரென்று சொன்னதெனை                               பா.செ.கோ. பா. 97

சரவெடிபோல் இடிஇடிக்க சரம்சரமாய் மழைபொழியும்
உறவுகளின் இடைவெளிபோல் தொடர்பின்றி மழைபொழியும்
செரிமானம் கொளும்முன்னே உணவுஉண்ணக் கொடுப்பதுபோல்
வறண்டநிலம் எதிர்பார்க்க மழைபெய்த நிலத்தில்தான் வெறுப்புகொள்ள மழைபொழியும்        பா.செ.கோ. பா. 98

உறவுகொள்ளடா உறவுகொள்ளடா உரிமையோடுநீ உறவுகொள்ளடா
உறவுஎன்பது இரத்தசொந்தமே உயர்ந்துபார்க்கையில் உலகுசொந்தமே
ஒருஉறவிலே பலர்உறவினர் பலர்உறவிலே உலகமனிதனும்
உறவுஆகிறான் முரட்டுமானிடா உணர்ந்துபார்க்கையில் மனிதசாதியே உறவுதானடா   பா.செ.கோ. பா. 99

வீசும்புயல் ஊர்சேர்ந்திடும் நீர்த்துளியினை
வீசிவந்திடும் காய்ந்தஆற்றிலே நீர்ஓடிடும்
ஆசைநெஞ்சிலே பால்வார்த்திடும் வீசும்புயல் வாழ்கவாழ்கவே                  பா.செ.கோ. பா. 100

சிறப்பில் கலித்தாழிசை

பெண்ணின் கற்பு போன தென்றால்
ஆணின் கற்பும் போகும்
ஆணும் பெண்ணும் கற்பைப் போற்றி வாழ்க                                   பா.செ.கோ. பா. 101

அழகிய மலரினை சுறும்புகள் வலம்வரும்
அழகுடன் அமர்ந்துஅ துதேனினைப் பருகிடும்
அழகுபெண் மலர்அதில்
அழகெனும் மதுவினை விழியெனும் சுறும்புகள் பருகுதே                               பா.செ.கோ. பா. 102

மறைக்கும் பொருளை மனசு விரும்பும்
தெரிந்து கொளவே அலைந்து துடிக்கும்
விரித்த பொருளை வெறுத்து ஒதுக்கும்
இருக்கும் பொருளை வெறுத்து ஒதுக்கும்
வருந்தும் தனிடம் இலாத பொருளை நினைத்து                                 பா.செ.கோ. பா. 103

என்பிள்ளை பண்ணுகின்ற சேட்டைகளோ ஏராளம்
சொன்னாலும் கேட்காத ராசாக்கள்
பெண்ணுடம்பில் ஊறிவந்த காரணத்தால்
என்னவோஅ டம்பிடிக்க கற்றுக்கொண்டார்
என்துன்பம் போல்தானே என்பெற்றோர் பெற்றிருப்பர் பாவமவர்                 பா.செ.கோ. பா. 104
தமிழ்நாட்டில் தமிழ்தானே உயிர்மூச்சு
தமிழ்ப்படித்தால் தரம்பிரித்து விடலாச்சு
தமிழுக்கு அமிழ்தென்று பெயர்சொன்னார்
தமிழாலே பசிபோக்க வழியுண்டோ?
தமிழ்க்கடலை முழுவதுமாய் குடித்துவிட்டேன்
தமிழ்த்தந்த பதக்கங்களும் குவித்துவைத்தேன்
தமிழ்ப்படித்து முடித்துவிட்டு பணிகேட்டால் நிறுவனங்கள்
தமிழ்த்தானே எனசொல்லும் அலட்சியமாய்
தமிழ்துளியும் கலவாமல் படித்திருந்தால்
நமைத்தேடி மதிப்புவரும் கடல்கடந்தும் பிழைப்புவரும் உணரடாநீ.              பா.செ.கோ. பா. 105

விளைநிலங்களை விலைநிலங்களாய் தரம்மாற்றுவார்
விளைநிலங்களோ அடுக்குமாடியை விளைவிக்குதே
விளைபொருட்களை அடுக்குமாடிகள
விளைவிக்குமே விதிமுடிவினில் உணர்ந்துபாரடா
விளைநிலங்களே இலாப்போய்விடின் அருங்காட்சியம் அதைக்காட்டிடும்        பா.செ.கோ. பா. 106

நோய்கள்பல தாங்கவேண்டுமே மானிடஉயிர்
ஓயாமலே உள்எலும்புகள் நோய்கொள்ளுமே
நோய்க்கிருமிகள் காற்றில்வரும் நீரில்வரும்
நோய்எதிர்த்திட சோப்பலோட்டுவோம்
நோய்கள்இலை என்றுசொல்லிட கீரைகாய்கனி உண்டுவாழுவோம்              பா.செ.கோ. பா. 107

சிறப்புடை கலியொத்தாழிசை

பெண்மை போற்றிக் காக்கும் நாட்டில்
கண்கள் பட்டால் கைகள் தொட்டால்
அன்று கற்பு போன தென்று சொன்னார்

கற்பைப் போற்றிக் காக்கும் நாட்டில்
கற்பப் பையைத் தொட்ட பின்னே
கற்பு போன தென்று சொல்வார் இன்று
கற்புப் பெண்டீர் வாழ்ந்த நாட்டில்
சிறிய பிள்ளை கையில் தாங்கி
கற்பு போன தென்று சொல்வார் நாளை                                         பா.செ.கோ. பா. 108

கருவிலே குணம்வரும் பிறக்கையில் இனம்வரும்
தெருவிலே வருகையில் மதிப்புகள் உடன்வரும்
பிறவியின் முடிவிலே மதிப்பிடப் படுகிறோம் புரிந்துவாழ்

பிறப்பினால் பெருமைகள் வருவது இலையடா
பிற்ந்ததன் பயனினை அடைந்திட முயலடா
பிறவியின் முடிவிலே மதிப்பிடப் படுகிறோம் புரிந்துவாழ்

கரும்புபோல் இநித்துநீ மருந்துபோல் உதவிடு
வெறுப்புகள் வருகையில் புரிந்துநீ விலகிடு
பிறவியின் முடிவிலே மதிப்பிடப் படுகிறோம் புரிந்துவாழ்                               பா.செ.கோ. பா. 109

உணவுப் பொருளைப் பெருக்க விரும்பு
உணவுப் பொருளும் குறைந்து வருது
உணவும் மருந்தாய் உயிரை வளர்க்க உதவும்

உணவுப் பொருளைப் பெருக்க நினைப்பாய்
உணவுப் பொருளும் குறைந்து வருது
உணவு இலாமல் ஒருநாள் மனிதன் தவிப்பான்

உணவுப் பொருளைப் பெருக்கப் பழகு
உணவுப் பொருளும் குறைந்து வருது
உணவை மறந்து மருந்தை உணவாய் உணுவோம்                              பா.செ.கோ. பா. 110



Popular Feed

Recent Story

Featured News