Join THAMIZHKADAL WhatsApp Groups
சங்க இலக்கியம்
க. அரிகிருஷ்ணன் M.A., B.Ed., M.Phil.,Phd.,
கிழக்குத் தெரு,
இரட்டணை அஞ்சல்,
திண்டிவனம் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு, இந்தியா – 604 306.
gharikrishnanrettanai@gmail.com
gharikrishnanrettanai.blogspot.in
- பாண்டியர்கள் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த காலம் சங்க காலம் எனப்படும்.
- கி.மு. 2 நூற்றாண்டு முதல் கி.பி. 2 நூற்றாண்டுவரை உள்ள இடைப்பட்டக் காலத்தை சங்க காலம் என்பர்.
- சங்க காலத்தில் எழுந்த நூல்கள் சங்க இலக்கியம் எனப்பட்டது.
- சங்க இலக்கிய செய்யுட்களைச் சான்றோர் செய்யுட்கள் என்று கூறுவார் பேராசிரியர்.
- சங்க இலக்கிய நூல்களைத் தொகை, பாட்டு என இரண்டாகப் பிரிப்பர்.
- பல புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பைத் தொகை என்றும் தனி ஒரு புலவர் பாடிய பாடலைப் பாட்டு என்றும் கூறுவர்
- தொகை என்பது எட்டுத்தொகையையும், பாட்டு என்பது பத்துப்பாட்டையும் குறிக்கும்.
- எட்டுத்தொகை என்பது எட்டுத் தொகை நூல்களின் தொகுப்பாகும்.
- சங்க இலக்கியங்களைத் திணை இலக்கியங்கள் என்றும் கூறுவர்.
- சங்க இலக்கியத்தில் வரும் அகப்பாடல்கள் பாத்திரங்களின் கூற்றிலும் புறப்பாடல்கள் புலவர்கள் கூற்றிலும் அமைந்துள்ளன.
- இவற்றை பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்றும் கூறுவர்.
- எட்டுத் தொகையில் எட்டுத் தொகை நூல்கள் உள்ளன. அவை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநாநூறு என்பனவாகும்.
றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோ டகம்புறமென்
றித்திறத்த எட்டுத் தொகை.
- எட்டுத் தொகை நூல்களை அகம், புறம் (அகத்திணை நூல்கள், புறத்திணை நூல்கள்) என இரண்டாகப் பிரிப்பர்.
- எட்டுத்தொகை நூல்களில் அகத்திணை நூல்கள் ஐந்து. அவை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்பனவாகும்.
- எட்டுத்தொகை நூல்களுள் புறத்திணை நூல்கள் இரண்டு. அவை, பதிற்றுப்பத்து, புறநானூறு என்பனவாகும்.
- எட்டுத்தொகை நூல்களுள் அகமா? புறமா? என்ற ஐயம்கொண்ட நூல் பரிபாடல்.
- பரிபாடலை அகப்புற நூல்கள் என்றும் கூறுவர்.
- எட்டுத் தொகையுள் பாடப்பட்ட யாப்பினால் பெயர்பெற்ற நூல்கள் இரண்டு. அவை, கலித்தொகை (கலிப்பா), பரிபாடல் (பரிபாட்டு) என்பன.
- இந்த கலிப்பாவும் பரிபாடலும் அகத்திணைப் பாடுதற்குரிய பாக்களாகத் தொல்காப்பியர் கூறுவார்.
- எட்டுத் தொகை நூல்களுள் காலத்தால் முந்தைய நூல் புறநானூறு.
- எட்டுத் தொகை நூல்களுள் காலத்தால் பிந்தைய நூல்கள் இரண்டு. அவை, கலித்தொகை. பரிபாடல் என்பன
- எட்டுத்தொகை நூல்களுள் ‘நல்’ என்ற அடைமொழிக் கொண்ட நூல் நற்றிணை.
- எட்டுத்தொகை நூல்களுள் ‘நல்ல’ என்ற அடைமொழிக் கொண்ட நூல் குறுந்தொகை.
- எட்டுத்தொகை நூல்களுள் ‘ஒத்த’ என்ற அடைமொழிக் கொண்ட நூல் பதிற்றுப்பத்து.
- எட்டுத்தொகை நூல்களுள் ‘ஓங்கு’ என்ற அடைமொழிக் கொண்ட நூல் பரிபாடல்.
- எட்டுத்தொகை நூல்களுள் ‘கற்றறிந்தார் ஏத்தும்’ என்ற அடைமொழிக் கொண்ட நூல் கலித்தொகை.
- எட்டுத்தொகை நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, பரிபாடல் ஆகியன தனித்தனிப் பாடல்களாகப் பாடப்பட்டுத் தொகுக்கப்பெற்ற தனிநிலைச் செய்யுட்களாகும்.
- ஐங்குறுநூறு. கலித்தொகை ஆகியன சொல்லாலும், பொருளாலும் தொடர்ந்து பாடப்பட்ட தொடர்நிலைச் செய்யுட்களாகும்.
அகத்திணை நூல்கள்
- ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் கொண்ட இன்ப நுகர்ச்சிகளை இவ்வாறு இருந்தன எனப் புறத்தார்க்குக் கூறப்படாது தமக்குள்ளேயே கொண்டு இன்பம் அனுபவிக்கும் இல்லற இன்ப நுகர்ச்சியே அகத்திணை எனப்படும்.
- அகத்திணை நூல்களாக நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்ற ஐந்து நூல்கள் உள்ளன.
நற்றிணை
- நன்மை+திணை = நற்றிணை (சிறந்த ஒழுக்கம் என்னும் பொருள் கொண்ட நூல்)
- இது எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாகக் குறிப்பிடும் நூல்.
- இது அகப்பொருள் பற்றிய நூல்.
- ‘நல்’ என்னும் அடைமொழி கொண்டநூல்.
- ஒன்பது அடிமுதல் பன்னிரண்டு அடிவரையில் பாடப்பட்ட நூல்.
- இது 400 பாடல்களைக் கொண்டு அமைகிறது. ஆதலால் நற்றிணை நானூறு என்ற சிறப்புப் பெயரும் இதற்குண்டு.
- இதனை 275 புலவர்கள் பாடியுள்ளனர்.
- இந்நூலுக்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார்.
- இந்நூலைத் தொகுத்தவர் பாண்டிய மன்னன் பன்னாடு தந்த மாறன் வழதி. தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
- இதற்கு பழைய குறிப்பு கொண்டு பின்னாத்தூர் நாராயணசாமி அய்யர் எழுதிய விளக்க உரையே முதல் உரையாகும்.
குறுந்தொகை
- குறுமை+தொகை = குறுந்தொகை
- இது எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகக் குறிப்பிடும் நூல்.
- இது அகப்பொருள் பற்றிய நூலாகும்.
- ‘நல்ல’ என்னும் அடைமொழி கொண்டநூல்
- குறைந்த அடிகளை உடைய பாக்களால் ஆனது என்பதால் இதனைக் குறுந்தொகை என்று கூறப்படுகிறது.
- இதன் அடிளயவு நான்கடி முதல் எட்டடிவரை ஆகும்.
- எனினும் 307, 391 ஆகிய இரண்டு பாடல்கள் ஒன்பது அடிகளால் பாடப்பட்டுள்ளன.
- இருநூற்று ஐவர் (205) பாடிய இந்நூலைத் தொகுத்தவர் ‘பூரிக்கோ’ என்பவராவார்.
- தொகுப்பித்தவர் யாரெனத் தெரியவில்லை.
- யார் பாடியது என அறிய முடியாத வகையில் 10 பாக்கள் உள்ளன.
- இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடியவர் ‘பாதரம் பாடிய பெருந்தேவனார்’ ஆவர்.
- இக்கடவுள் வாழ்த்து முருகனைப் பற்றியது.
- கடவுள் வாழ்த்து உட்பட இதில் 402 (401+1) பாடல்கள் உள்ளன.
- முதல் 380 பாடல்களுக்குப் பேராசிரியரும், இறுதி 20 பாடல்களுக்கு நச்சினார்க்கினியரும் உரை எழுதியுள்ளனர். இவ்வுரை இன்று கிடைக்கவில்லை.
- இந்நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் சி.வை. தாமோதரம் பிள்ளை.
- ஆராய்ச்சிப் பதிப்பு உ.வே. சாமிநாதையர்.
- உரையாசிரியர்களால் மிகுதியாக மேற்கோள் காட்டி எடுத்தாளப்பெற்ற சங்க இலக்கியநூல் இதுவேயாகும்.
- சங்க நூல்களுள் குறுந்தொகையே முதன் முதலில் தொகுக்கப்பெற்ற நூலாகும்.
- குறுந்தொகைப் பாடல்களின் வாயிலாகப் பண்டைத் தமிழ் மக்களின் ஒழுக்கம், காதல் வாழ்க்கை, பழக்க வழக்கங்கள், நாகரிகம், மகளிர் மாண்புகள், அற உணர்வுகள் முதலியனவற்றை அறியலாம்.
ஐங்குறுநூறு
- ஐந்து+குறுமை+நூறு = ஐங்குறுநூறு.
- எட்டுத் தொகையுள் மூன்றாவதாக வைத்துக் கூறப்படும் நூல்.
- இது அகத்திணை நூல்.
- மூன்றடி முதல் ஆறடிவரை பாடப்பட்ட நூல்.
- இந்நூல் ஐநூறு பாடல்களைக் கொண்டுள்ளது.
- மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்ற வரிசை முறையில் அமைக்கப்பட்டு ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள் வீதம் ஐநூறு பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
- இவை முறையே ஓரம்போகி, அம்மூவன், கபிலர், ஓதலாந்தை, பேயன் ஆகிய ஐந்து ஆசிரியர்கள் பாடியுள்ளனர்.
திணை பாடலாசிரியர்
மருதம் ஓரம்போகி
நெய்தல் அம்மூவன்
குறிஞ்சி கபிலர்
பாலை ஓதலாந்தை
முல்லை பேயன்
மருதம் ஓரம்போகி
நெய்தல் அம்மூவன்
குறிஞ்சி கபிலர்
பாலை ஓதலாந்தை
முல்லை பேயன்
மருதமோ ரம்போகி நெய்த லம்மூவன்
கருதுஞ் குறிஞ்சி கபிலன் – கருதிய
பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே
நூலையோ தைங்குறு நுறு.
- இந்நூலைத் தொகுத்தவர் ‘புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்’.
- தொகுப்பித்தவர் கோச்சேரமான் ‘யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை’.
- இந்நூலில் ஒவ்வொரு தினையிலும் உள்ள 100 படல்கள் பத்துப்பத்துப் பாடல்களாகப் பிரிக்கப்பட்டுத் தனித்தனித் தலைப்புக்களின் கீழ்ப் பகுக்கப்பட்டுள்ளன.
- இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இக் கடவுள் வாழ்த்து சிவனைப் பற்றியது.
- இந்நூல், ஐந்து திணைகளிலும் தனித்தனியே நூறு நூறு பாடல்களால் பாடப்பட்ட, ஐந்து நூறுகளின் தொகுதி என்பதால் இதற்கு ஐங்குறுநூறு எனப்பட்டது.
- இந்நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் உ.வே. சாமிநாதையர்.
கலித்தொகை
- இது கலிப்பாவால் ஆனநூல்
- சங்க நூல்களில் ஓசை நயம் மிக்க பாட்டுகள் அமைந்த நூல்.
- இது அகப்பொருள் சார்ந்த நூல்.
- ‘கற்றறிந்தால் ஏத்தும் கலி’ என்ற சிறப்பைப் பெற்ற நூல்.
- இதனைத் தொகுத்தவர் நல்லந்துவனார்.
- தொகுப்பித்தவர் யார் எனத் தெரியவில்லை.
- கலித்தொகைப் பாடல்கள் ‘பாலைக்கலி, குறிஞ்சிக்கலி, மருதக்கலி, முல்லைக்கலி, நெய்தல்கலி’ என்ற வரிசை முறையில் ஐந்துப் பிரிவுகளைக் கொண்டு அமைகிறது.
- இதனைப் பாடியவர்கள் ஐவர் ஆவார்.
பாலை பெருங்கடுங்கோன் 35
குறிஞ்சி கபிலர் 29
மருதம் மருதன் இளநாகனார் 35
முல்லை சோழன் நல்லுருத்திரன் 17
நெய்தல் நல்லந்துனார் 33
- இந்நூல் கடவுள் வாழ்த்துப் பாடலோடு சேர்த்து 150 பாடல்களைக் கொண்டுள்ளது.
- கடவுள் வாழ்த்தைப் பாடியவர் நல்லந்துவனார். இக்கடவுள் வாழ்த்து சிவனைப் பற்றியது.
- இனிய ஓசையோடு நாடக முறையில் காதல் நிகழ்ச்சிகள் அமைந்திருப்பதும் இந்நூலின் சிறப்பியல்பாகும்.
- இதற்கு நச்சினார்க்கினியர் விரிவான உரை எழுதியுள்ளார்.
- இந்நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் சி.வை. தாமோதரம் பிள்ளை.
- இந்நூலை நல்லந்துவனால் என்ற புலவர் மட்டுமே பாடியிருக்கக் கூடும் எனக் கருதுபவர்கள் சி.வை. தாமோதரம் பிள்ளை, எஸ். வையாபுரிப்பிள்ளை, கே.என். சிவராஜப் பிள்ளை.
அகநானூறு
- அகம்+நான்கு+நூறு = அகநானூறு.
- இதனை ‘அகப்பாட்டு’ எனவும் ‘அகம்’ எனவும் கூறுவர்.
- இது ஒரு அகத்தினை நூல்.
- 400 பாடல்களைக் கொண்டநூல்.
- ஆசிரியப்பாவால் ஆனது.
- இந்நூல் களிற்றியானைநிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது.
- களிற்றியானை நிரையில் 120(1-200) பாடல்களும், மணிமிடைப் பவளத்தில் 180(121-300) பாடல்களும், நித்திலக்கோவையில் 100(301-400) பாடல்களும் உள்ளன.
- இது 13 அடி சிறுமையும் 31 அடி பெருமையும் கொண்டது.
- இதற்கு நெடுந்தொகை என்ற வேறுபெயரும் உண்டு.
- இந்நூலில் 1,3,5,7,9 என வரும் ஒற்றைப்படை எண்களாக வரும் பாடல்கள் அனைத்தும் பாலைத்திணைப் பாடல்களாகவும், 2,8 என வரும் எண்களைக் கொண்ட பாடல்கள் அனைத்தும் குறிஞ்சித்திணைப் பாடல்களாகவும், 4,14,24 என வரும் எண்களைக் கொண்ட பாடல்கள் அனைத்தும் முல்லைத்திணைப் பாடல்களாகவும், 6,16,26 என வரும் எண்களைக் கொண்ட பாடல்கள் அனைத்தும் மருதத்திணைப் பாடல்களாகவும், 10,20,30 என வரும் எண்களைக் கொண்ட பாடல்கள் அனைத்தும் நெய்தல்திணைப் பாடல்களாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. இவ்வமைப்பில் தொகுக்கப்பட்டு சங்க இலக்கிய நூல் இது மட்டுமே.
- இந்நூல், பாலைத்திணையில் 200 பாடல்களும், குறிஞ்சித் திணையுல் 80 பாடல்களும், முல்லைத் திணையில் 40 பாடல்களும், மருதத் திணையில் 40 பாடல்களும், நெய்தல் திணையில் 40 பாடல்களும் கொண்டுள்ளது.
- இந்நூலைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருத்திர சன்மர் ஆவார்.
- தொகுப்பித்தவன் பாண்டியன் உக்கிர பெருவழுதி.
- இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இக்கடவுள் வாழ்த்து சிவனைப் பற்றியது.
- இந்நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் வே. ராசகோபால ஐயங்கார்.
- இந்நூலுக்கு உரை எழுதியவர்கள் நா.மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை.
புறத்திணை நூல்கள்
- எட்டுத்தொகை நூல்களுள் புற இலக்கியங்களாக விளங்குவன இரண்டு. அவை, பதிற்றுப்பத்து, புறநானூறு என்பனாவாகும்.
- மக்களின் புற வாழ்க்கையோடு இயைந்த கல்வி, ஒழுக்கம், அறம், கொடை, வீரம், வெற்றி, ஆட்சிமுறை, புகழ், அறிவு, பண்பாடு, பழக்கவழக்கங்கள் ஆகிய புறப்பொருள் பற்றிப் பாடப்பட் பாடல்கள் ஆகையால் புறப்பாட்டு எனப்பட்டது.
பதிற்றுப்பத்து
- பத்து x பத்து = நூறு
- பத்து+இன்+இற்று+பத்து = பதிற்றுப்பத்து
- இன், இற்று என்பன சாரியைகள்.
- சேர அரசர்கள் பத்துப் பேரை பத்து புலவர்கள் தலா பத்துப் பாடல்கள் வீதம் பாடியதால் இதற்குப் பதிற்றுப்பத்து எனப்பட்டது.
- சேர அரசர்களைப் பற்றிப் பாடும் எட்டுத்தொகை நூல் பதிற்றுப்பத்து.
- இந்நூல், தமிழ் மூவேந்தருள் சேர மன்னர்களின் செயல் நலன்கள் மட்டும் வரைந்து கூறுகிறது.
- இந்நூலில், முதல் பத்துப் பாடல்களும் கடைசிப் பத்துப் பாடல்களும் கிடைக்கப்பெறவில்லை. ஏனைய 80 பாடல்களே இடம்பெற்றுள்ளன.
- இதில் ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் ஒரு பதிகம் காணப்படுகிறது. இந்நூலைத் தொகுத்த ஒருவரால் இப்பதிகம் பாடப்பட்டிருக்கலாம்.
- இந்நூலுக்குப் பழைய உரை ஒன்றும் உள்ளது.
- இந்நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் உ.வே. சாமிநாதையர்.
- உரை இயற்றியவர் சு. துரைசாமிப் பிள்ளை
- இப்போதுள்ள பதிற்றுப்பத்தில் எட்டு சேர மன்னர்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.
- இரண்டாம் பத்து - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.
- மூன்றாம் பத்து – அவர் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன்
- நான்காம் பத்து – இமயவரம்பன் மகன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
- ஐந்தாம் பத்து – அவன் தம்பி கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
- ஆறாம் பத்து – அக்குட்டுவனுக்குப் பின்னவனான ஆடு கோட்பாட்டுச் சேரலாதன். (இவ் ஐவரும் சேர குடியில் உதியஞ்சேரல் என்பவன் வழிவந்தவர்கள்.)
- ஏழாம் பத்து – அந்துவஞ்சேரல் இரும்பொறையின் மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன்
- எட்டாம் பத்து – அவன் மகன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
- ஒன்பதாம் பத்து – அவனுக்குப் பின் தோன்றிய குட்டுவன் இரும்பொறையின் மகன் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை (இம்மூவரும் அந்துவஞ்சேரல் இரும்பொறை என்ற சேரக்குடியில் வந்தவர்கள்.)
- பதிற்றுப்பத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு பத்துப் பாடல்களின் ஈற்றிலும் ஒரு பதிகம் அமைந்துள்ளது.
- இப்பதிகத்தில் பாடப்பட்ட மன்னன் பெயர், அவர் செய்த போர், கொடைத்திறம், பாடிய புலவர் பெயர், அவர் பெற்ற பரிசுப்பொருள் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.
- பதிற்றுப்பத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு பாட்டிற்கும் அப்பாட்டில் வரும் சிறந்த தொடரால் பெயரிடப்பட்டுள்ளது.
- இதில் நான்காம் பத்தில் உள்ள பாடல்கள் மட்டும் அந்தாதி முறையில் அமைந்துள்ளது.
- ஒவ்வொரு பாட்டின் ஈற்றிலும் அப்பாடலின் துறை, வண்ணம், தூக்கு, பெயர் என்ற பாட்டியல் கூறுகளைப் பழைய உரையாசிரியர் குறித்துள்ளார்.
- பதிற்றுப்பத்துப் பாடல்களை அநைத்தும் பாடண்திணையைச் சார்ந்தவை.
- பரிபாடலைப் போலவே பதிற்றுப்பத்தும் இசையோடுப் பாடுதற்குரியது.
- வ. எண்நூல்ஆசிரியர்பாடுடைத் தலைவன்1முதல் பத்துகிடைக்கப் பெறவில்லை2இரண்டாம் பத்துகுட்டூர் கண்ணனார்இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்3மூன்றாம் பத்துபாலைக் கௌதமனார்பல்யானைக் செல்கெழுங் குட்டுவன்4நன்காம் பத்துகாப்பியாற்றுக் காப்பியனார்களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்5ஐந்தாம் பத்துபரணர்கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன்6ஆறாம் பத்துகாக்கைபாடினியார்(எ) நச்செள்ளையார்ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்7ஏழாம் பத்துகபிலர்நெல்வக் கடுங்கோ வாழியாதன்8எட்டாம் பத்துஅரிசில் கிழார்கடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை9ஒன்பதாம் பத்துபெருங்குன்றூர் கிழர்குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை10பத்தாம் பத்துகிடைக்கப் பெறவில்லை
புறநானூறு
- புறம்+நான்கு+நூறு = புறநானூறு.
- இதனைப் ‘புறப்பாட்டு’, ‘புறம்’, ‘புறம்பு’, ‘தமிழ்க் கருவூலம்’ எனவும் வழங்குவர்.
- 400 பாடல்களைக் கொண்ட இந்நூல், ஆசிரியப்பாவால் பாடப்பட்டுள்ளது.
- இதனை 158 புலவர்கள் பாடியுள்ளனர்.
- இதற்குக் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடியவர் ‘பாரதம் பாடிய பெருந்தேவனார்’. இக்கடவுள் வாழ்த்து சிவனைப் பற்றியது.
- இந்நூலைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் யாரெனத் தெரியவில்லை.
- புறநானூற்றில் சில பாடல்களை ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
- தமிழ்நாட்டில் பண்டைக் காலத்தில் வாழ்ந்த மூவேந்தர்கள், சிற்றரசர்கள், அமைச்சர்கள், சேனைத் தலைவர்கள், கடையெழு வள்ளல்கள், வீரர்கள், புலவர்கள், சான்றோர்கள் எனப் பலருடைய வரலாற்றுக் குறிப்புகளும், அக்கால மக்களின் வாழ்க்கை, நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் முதலியனவும் இந்நூலின் மூலம் அறிய முடிகிறது.
- புறநானூற்றின் ஒவ்வொரு பாடலும் இன்னின்ன பொருளைப் பற்றிக் கூறுகிறது என்பதைத் திணை, துறை என்னும் பாகுபாடுகள் உணர்த்தும்.
- புறநானூற்றுப் பாடல்கள் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை என வழங்கப்பெறும் புறத்திணைகளுக்குரிய துறைப்பொருள்கள் கொண்டு அமைந்தவையாகும்.
- திணை - ஒழுக்கம், நெறி.
- துறை - திணையின் உட்புரிவு. (அவ்வத்திணையில் கூறப்படும் பொருளைப் பாகுப்படுத்திக் கூறுவது.)
- இந்நூலில் 11 புறத்திணைகளும் 65 துறைகளும் கூறப்பட்டுள்ளன.
அகப்புற நூல்
- அகமும் புறமும் கலந்து பாடப்பட்ட எட்டுத் தொகை நூல் பரிபாடல்.
- ‘வேம்பு தலை யாழ்த்த நோன்காழ் எஃகம்’ என்ற குறிப்பே இதனைப் புற இலக்கியமாக்கியது.
பரிபாடல்
- இசைப்பாட்டு வகையைச் சார்ந்த நூல்.
- தமிழின் முதல் இசைப்பாடல் நூல்.
- பாவகையால் பெயர்பெற்ற நூல்.
- எட்டுத் தொகையுள் அகத்திற்கும் புறத்திற்கும் உரிய நூல்.
- பாண்டிய நாட்டைச் சிறப்பிக்கவே பாடப்பட்ட நூல் பரிபாடல்.
- பரிபாடலைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 13.
- இதன் சிற்றெல்லை 25 அடி, பேரெல்லை 400 அடி..
- இது, திருமால்(8), முருகன்(31), கொற்றவை(1), வையை(26), மதுரை நகர்(4) ஆகிய தலைப்புகளில் 70 பாடல்களைக் கொண்டுள்ளது.
தொருபாட்டு காடுகிழாட் கொன்று – மருவினிய
வையை இருபத்தா(று) மாமதுரை நான்கென்ப
செய்ய பரிபாடல் திறம்.
- ஆயினும் இன்று திருமால்(6), முருகன்(8), வையை(8) ஆகிய தலைப்புகளில் அமைந்த 22 பாடல்களே பழைய உரையுடக் கிடைக்கின்றன.
- வேறுவகையால் இரண்டு பாடல்களும், சிதறிய நிலையில் சில பாடல்களும் கிடைத்திருக்கின்றன.
- இவற்றுள் திருமாலுக்கு ஏழு பாடலும், முருகனுக்கு எட்டு பாடலும், வையைக்கு ஒன்பது பாடலும், மதுரையைப் பற்றி ஆறு பாடலும் சிதைவுகளாகக் கிடைக்கின்றன.
- முதல் 22 பாட்டுக்கும் துறை, பாடியோர் பெயர், பாடப்படும் பாணி, பண் வகுத்தோர் ஆகியவை குறிக்கப்பட்டிருக்கின்றன. வேறு வகையால் கிடைக்கப்பெற்றவைகளுக்கு இக்குறிப்புகள் இல்லை.
- இந்நூல் முழுமையும் கிடைக்கப் பெறாமையால் இதனைத் தொகுத்தோர் பெயரும் பிறவும் அறிய முடியவில்லை.
- கிடைத்தவை மட்டும் வைத்து நோக்கும்போது நல்லந்துவனார் முதலாக 13 பேர் பாடி இருப்பதாகத் தெரிகிறது.
- வையைப் பற்றிய பாடல்கள் அகம் சார்ந்தன.
- கடவுள் வாழ்த்துப் பற்றிய பாடல்கள் புறம் சார்ந்தன.
- பாடலைத் தொகுத்தவர் பெயர் தெரியவில்லை.
- பரிபாடலுக்கு பரிமேலழகர் உரை இயற்றியுள்ளார்.
- இதனை முதன் முதலில் தொகுத்தவர் உ.வே. சாமிநாதையர்.
- வ. எண்நூல்பாடிய ஆசிரியர்களின் எண்ணிக்கைபாடல் எண்ணிக்கையாப்புஅடியளவுதிணைதொகுத்தவர்தொகுப்பித்தவர்கடவுள் வாழ்த்துப் பாடியவாகடவுள் வாழ்த்தில் பாடப்பட்ட தெய்வம்1நற்றிணை175400ஆசிரியப்பா9-12அகம்தெரியவில்லைபன்னாடு தந்த மாறன் வழுதிபாரதம் பாடிய பெருந்தேவனார்திருமால்2குறுந்தொகை205401ஆசிரியப்பா4-8அகம்பூரிக்கோபாரதம் பாடிய பெருந்தேவனார்முருகன்3ஐங்குறுநூறு5500ஆசிரியப்பா3-6அகம்புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறைபாரதம் பாடிய பெருந்தேவனார்சிவன்4கலித்தொகை5150கலிப்பாஅகம்நல்லந்துவனார்நல்லந்துவனார்சிவன்5அகநானூறு145400ஆசிரியப்பா13-31அகம்உருத்திரசன்மனார்பாண்டியன் உக்கிர பெருவழுதிபாரதம் பாடிய பெருந்தேவனார்சிவன்6பதிற்றுப்பத்து880ஆசிரியப்பாபுறம்தெரியவில்லைதெரியவில்லைகிடைக்கவில்லை7புறநானூறு158400ஆசிரியப்பாபுறம்தெரியவில்லைதெரியவில்லைபாரதம் பாடிய பெருந்தேவனார்சிவன்8பரிபாடல்1322பரிபாட்டு25-400அகப்புறம்தெரியவில்லைதெரியவில்லை
பத்துப்பாட்டு
- எட்டுத் தொகையில் அடி நீண்டு வரும் பாடல்களைத் தனியே தொகுத்து அதற்கு பாட்டு என்று பெயரிட்டுள்ளனர்.
- பாட்டு என்பது பத்துப் பாடல்கள் அடங்கிய பத்துப்பாட்டைக் குறிக்கும்.
பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய
கோல நெடு(நல்)வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
- இப்பத்துப்பாட்டின் சிற்றெல்லை 103 அடிகள், பேரெல்லை 782 அடிகளாகும்.
- 103 அடிகளைக் கொண்ட பத்துப்பாட்டு நூல் முல்லைப்பாட்டு.
- 782 அடிகளைக் கொண்ட பத்துப்பாட்டு நூல் மதுரைக்காஞ்சி.
- இவற்றுள் ஆற்றுப்படைகளாக வருவன ஐந்து நூல்கள். அவை, திருமுருகாற்றுப்படை(புலவராற்றுப்படை), பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை(மலைபடுகடாம்) என்பன.
- ஆற்றுப்படை நூல்கள் அனைத்தும் புறநூல்களாகும்.
- ஏனைய ஐந்து நூல்களும் அகம், புறம் சார்ந்தவைகளாகும்.
- பத்துப்பாட்டில் அகத்திணை நூல்கள் மூன்று. அவை, முல்லைப் பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை என்பன.
- பத்துப்பாட்டில் புறத்திணை நூல்கள் ஆறு. அவை, ஆற்றுப்படை நூல்கள் ஐந்து, மதுரைக் காஞ்சி உடன் சேர்த்து ஆறு நூல்களாகும்.
- பத்துப்பாட்டில் அகப்புற நூல் ஒன்று. அது, நெடுநல்வாடை..
1. திருமுருகாற்றுப்படை
- பத்துப்பாட்டின் முதல் நூலாக அமைவது திருமுருகாற்றுப்படை.
- இது பத்துப்பாட்டின் கடவுள் வாழ்த்துப் பாடலாகவும் அமைகிறது.
- பத்துப்பாட்டில் காலத்தால் பிந்தைய நூல்.
- ஆசிரியப்பாவால் ஆனது.
- திருமுருகாற்றுப்படையைப் புலவராற்றுப்படை என்றும் அழைப்பர்.
- இதனை இயற்றியவர் நக்கீரர்.
- இந்நூல் 317 அடிகளைக் கொண்டது.
- இது முருகப் பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது.
- ஆபத்தில் மாட்டிக் கொண்ட ஒரு புலவன் அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழிவகைகளை இந்நூல் குறிப்பிடுகிறது.
- ஏனைய ஆற்றுப்படை நூல்கள் பரிசில் பெறச் செல்வோரின் பெயரால் அமைய, திருமுருகாற்றுப்படை மட்டும் பரிசில் கொடுப்போன் பெயரால் அமைந்துள்ளது.
2. பொருநராற்றுப்படை
- பத்துப்பாட்டின் இரண்டாவது நூலாக அமைவது பொருநராற்றுப்படை.
- இதன் ஆசிரியர் முதடத்தாமைக் கண்ணியார்.
- பாட்டுடைத் தலைவன் கரிகால் பெருவளத்தான்.
- இதில் 248 அடிகள் உள்ளன.
- இது ஆசிரியப்பாவால் ஆன நூல்.
- இவ்வாசிரியப்பாவில் வஞ்சியடிகள் இடையிடையே விரவி வருகின்றன.
- போர்க்களத்தில் பாடுவோன் பொருநன்.
3. சிறுபாணாற்றுப்படை
- பத்துப்பாட்டின் மூன்றாவதாக அமைவது சிறுபாணாற்றுப்படை.
- இதன் ஆசிரியர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்.
- 269 அடிகளைக் கொண்ட இந்நூல் ஆசிரியப்பாவால் ஆனது.
- இதன் பாட்டுடைத் தலைவன் ஓய்மா நாட்டு நல்லிய கோடன்.
- ஓய்மா நாடு என்பது திண்டிவனத்தை ஒட்டிய பகுதிகள்.
- இடைக்கழி நாடு என்பது செங்கற்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் உள்ள கடற்கரைப் பகுதி.
- உப்பங்கழிக்கும் கடலுக்கும் இடைப்பட்டப்பகுதி இடைக்கழிநாடு எனப்படும்.
4. பெரும்பாணாற்றுப்படை
- பத்துப்பாட்டின் நான்காவதாக அமைவது பெரும்பாணாற்றுப்படை.
- இதன் ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்.
- கண்ணன் என்பது இயற்பெயர், உருத்திரன் என்பது தந்தையார் பெயர்.
- 500 அடிகளைக் கொண்ட இந்நூல் ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டுள்ளது.
- இதன் பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன்.
5. முல்லைப்பாட்டு
- பத்துப்பாட்டின் ஐந்தாவதாக அமைவது முல்லைப்பாட்டு.
- இது அகத்திணை நூல்.
- அகவற்பவால் ஆனநூல்.
- 103 அடிகளைக் கொண்டது.
- இதனைப் பாடியவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகன் நப்பூதனார்.
6. மதுரைக்காஞ்சி
- பத்துப்பாட்டின் ஆறாவதாக அமைவது மதுரைக் காஞ்சி
- இது புறத்திணை நூல்
- 782 அடிகளைக் கொண்டது
- இது ஆசிரியப்பாவால் ஆனநூல். இடையிடையே வஞ்சியடிகள் விரவி வருதலால் இதனை வஞ்சிப்பாட்டு என்று கூறுவர்.
- இதனை இயற்றியவர் மதுரைக்காஞ்சி எனப் புகழப்படும் மாங்குடி மருதனார் ஆவார்.
- இதன் பாட்டுடைத் தலைவன் தலையாலங் கானத்து செருவென்ற பாண்டியன் நெருஞ்செழியன்.
7. நெடுநல்வாடை
- பத்துப்பாட்டின் ஏழாவதாக அமைவது நெடுநல்வாடை.
- இது அகப்புற நூல்.
- 188 அடிகளைக்கொண்டது.
- ஆசிரியப்பாவால் ஆனது.
- இது ஒரு அகத்திணை நூல்.
- இதன் ஆசிரியர் நக்கீரர்.
- பாடுடைத்தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன்.
8. குறிஞ்சிப்பாட்டு
- பத்துப்பாட்டின் எட்டாவதாக அமைவது குறிஞ்சிப்பாட்டு.
- இது அகத்திணை நூல்.
- இதற்கு பெருங்குறிஞ்சி என்ற பெயரும் உண்டு.
- இதனை இயற்றியவர் கபிலர்.
- இதில் 261 அடிகள் உள்ளன.
- அகவற்பாவால் இயற்றப்பட்டுள்ளது.
- இதனை ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்காகக் கபிலர் பாடினார் என்ற ஒரு வரலாறும் உண்டு.
- இதில் தமிழ் என்பது அகப்பொருள் என்றும் கூறுவர்.
- இப்பாடல் தோழி செவிலித்தாய்க் கூறுவதாக அமைகிறது.
- 99 வகை பூக்களின் பெயர்களை இந்நூல் குறிப்பிடுகிறது.
- 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூ குறிஞ்சி.
9. பட்டினப்பாலை
- பத்துப்பாட்டின் ஒன்பதாவதாக அமைவது பட்டினப்பாலை.
- இது அகத்திணை நூல்.
- 301 அடிகளைக் கொண்டுள்ளது.
- ஆசிரியப்பாவால் ஆனது. எனினும் வஞ்சியடிகள் நிறைய வருதலின் இதனை வஞ்சி நெடும்பாட்டு என்றும் கூறுவர்.
- இதனைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்.
- பாட்டுடைத் தலைவன் சோழன் கரிகால் பெருவளத்தான்.
10. மலைபடுகடாம்
- பத்துப்பாட்டின் பத்தாவதாக அமைவது மலைபடுகடாம்.
- கடாம் என்பது மதம். மதம் பிடித்த பெருயாணை முழக்கம். மதம்பிடித்த யானை பிளிறும் ஓசைபோல் மலையில் ஓசை அமைகிறது என்பதே மலைபடுகடாம் என்பதன் பொருள்.
- இதற்குக் கூத்தராற்றுப்படை என்ற வேறு பெயரும் உண்டு.
- இதனைப் பாடியவர் இரணிய முற்றத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்.
- இது நன்னனைப் புகழ்ந்து பாடும் நூல்.
- 583 அடிகளைக்கொண்ட நூல்.
- ஆசிரியப்பாவால் ஆனது.
- இசைக்கருவிகளின் பெயர்களைக் கூறும் நூல் இது.
- யாழினைப் புகழ்ந்து இந்நூல் தொடங்குகிறது.
- வ. எண்நூல்பாடல் எண்ணிக்கையாப்புநூலின் பண்புஆசிரியர்பாடுடைத் தலைவன்வேறுபெயர்கள்1திருமுருகாற்றுப்படை317ஆசிரியப்பாஆற்றுப்படைநக்கீரர்முருகன்புலவாராற்றுப்படை2பொருநராற்றுப்படை248ஆசிரியப்பாஆற்றுப்படைமுடத்தாமக் கண்ணியார்கரிகால் வளவன்3சிறுபாணாற்றுப்படை269ஆசிரியப்பாஆற்றுப்படைநல்லூர் நத்தத்தனார்நல்லிய கோடன்4பெரும்பாணாற்றுப்படை500ஆசிரியப்பாஆற்றுப்படைகடியலூர் உருத்திரங் கண்ணனார்தொண்டைமான் இளந்திரையன்பாணாற்றுப்படை5முல்லைப்பாட்டு103ஆசிரியப்பாஅகத்திணைநப்பூதன்இல்லை6மதுரைக்காஞ்சி782ஆசிரியப்பாபுறத்திணைமாங்குடி மருதனார்தலையாலங் கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்வஞ்சிப்பாட்டு7நெடுநல்வாடை188ஆசிரியப்பாஅகப்புறத் திணைநக்கீரர்தலையாலங் கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்8குறிஞ்சிப்பாட்டு261ஆசிரியப்பாஅகத்திணைகபிலர்இல்லைபெருங்குறிஞ்சி9பட்டினப்பாலை301ஆசிரியப்பாஅகத்திணைகடியலூர் உருத்திரங் கண்ணனார்இல்லைவஞ்சி நெடும்பாட்டு10மலைபடுகடாம்583ஆசிரியப்பாபுறத்திணைபெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்நன்னன்கூத்தராற்றுப்படை