Friday, November 14, 2014

முண்டாசுக் கவிஞன் பாரதி



முண்டாசுக் கவிஞன் பாரதி

பாட்டுக்கு ஒருபுலவன் பாரதி - அவன்
பாடிய பாட்டையும் கேளுநீ
எட்டைய புரத்திலே பிறந்தவன்- உலகம்
எட்டிய தூரம்வரை தெரிந்தவன்

வாடிய பறவைகள் துயர்தீர- தனது
வீட்டிலே இருந்ததை இரைத்தவன்
கொடுமைகள் எங்கெங்குக் காணினும் - கோபக்
கனல்பொங்க வெகுண்டதை எதிர்த்தவன்

பலமொழிக் கற்றவன் பாரதி - அவன்
தமிழையே உயர்ந்தது என்றனன்
விலங்குகள் கைகளில் பூட்டியும் - தனது
கொள்கையை நிலைநாட்டத் துனித்தவன்

கவிஞனாய் எழுத்தனாய் வளம்வந்து - சமுக
மாற்றங்கள் கண்டிட உழைத்தவன்
கவிதையில் புதுமைகள் பலகண்டு - புதிய
பரம்பரை உருவாக்கித் தந்தவன்

பெண்ணென்றால் அடிமைகள் என்றென்னும் - பழைய
பொய்களைந்து புதுமைப்பெண் கண்டவன்
கண்ணனைப் புத்தியில் கொண்டவன் - அவனைக்
கண்டதும் கைகூப்பி வணங்குவோம்.

Popular Feed

Recent Story

Featured News