Monday, April 6, 2015

சங்க இலக்கியம் - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

சங்க இலக்கியம்
  • பாண்டியர்கள் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த காலம் சங்க காலம் எனப்படும்.
  • கி.மு. 2 நூற்றாண்டு முதல் கி.பி. 2 நூற்றாண்டுவரை உள்ள இடைப்பட்டக் காலத்தைச் சங்க காலம் என்பர்.



  • சங்க காலத்தில் எழுந்த நூல்கள் சங்க இலக்கியம் எனப்பட்டது.
  • சங்க இலக்கிய செய்யுட்களைச் சான்றோர் செய்யுட்கள் என்று கூறுவார் பேராசிரியர்.
  • சங்க இலக்கிய நூல்களைத் தொகை, பாட்டு என இரண்டாகப் பிரிப்பர்.
  • பல புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பைத் தொகை என்றும் தனி ஒரு புலவர் பாடிய பாடலைப் பாட்டு என்றும் கூறுவர்
  • தொகை என்பது எட்டுத்தொகையையும், பாட்டு என்பது பத்துப்பாட்டையும் குறிக்கும்.
  • எட்டுத்தொகை என்பது எட்டுத் தொகை நூல்களின் தொகுப்பாகும்.
  • சங்க இலக்கியங்களைத் திணை இலக்கியங்கள் என்றும் கூறுவர்.
  • சங்க இலக்கியத்தில் வரும் அகப்பாடல்கள் பாத்திரங்களின் கூற்றிலும் புறப்பாடல்கள் புலவர்கள் கூற்றிலும் அமைந்துள்ளன.
  • இவற்றை பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்றும் கூறுவர்.
  • எட்டுத் தொகையில் எட்டுத் தொகை நூல்கள் உள்ளன. அவை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநாநூறு என்பனவாகும்.
                     நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ
                                 றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
                                 கற்றறிந்தார் ஏத்தும் கலியோ டகம்புறமென்
                                 றித்திறத்த எட்டுத் தொகை.
  • எட்டுத் தொகை நூல்களை அகம், புறம் (அகத்திணை நூல்கள், புறத்திணை நூல்கள்) என இரண்டாகப் பிரிப்பர்.



  • எட்டுத்தொகை நூல்களில் அகத்திணை நூல்கள் ஐந்து. அவை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்பனவாகும்.
  • எட்டுத்தொகை நூல்களுள் புறத்திணை நூல்கள் இரண்டு. அவை, பதிற்றுப்பத்து, புறநானூறு என்பனவாகும்.
  • எட்டுத்தொகை நூல்களுள் அகமா? புறமா? என்ற ஐயம்கொண்ட நூல் பரிபாடல்.
  • பரிபாடலை அகப்புற நூல்கள் என்றும் கூறுவர்.
  • எட்டுத் தொகையுள் பாடப்பட்ட யாப்பினால் பெயர்பெற்ற நூல்கள் இரண்டு. அவை, கலித்தொகை (கலிப்பா), பரிபாடல் (பரிபாட்டு) என்பன.
  • இந்த கலிப்பாவும் பரிபாடலும் அகத்திணைப் பாடுதற்குரிய பாக்களாகத் தொல்காப்பியர் கூறுவார்.
  • எட்டுத் தொகை நூல்களுள் காலத்தால் முந்தைய நூல் புறநானூறு.
  • எட்டுத் தொகை நூல்களுள் காலத்தால் பிந்தைய நூல்கள் இரண்டு. அவை, கலித்தொகை. பரிபாடல் என்பன



  • ‘நல்’ என்ற அடைமொழிக் கொண்ட நூல் நற்றிணை.
  • ‘நல்ல’ என்ற அடைமொழிக் கொண்ட நூல் குறுந்தொகை.
  • ‘ஒத்த’ என்ற அடைமொழிக் கொண்ட நூல் பதிற்றுப்பத்து.
  • ஓங்கு’ என்ற அடைமொழிக் கொண்ட நூல் பரிபாடல்.
  • ‘கற்றறிந்தார் ஏத்தும்’ என்ற அடைமொழிக் கொண்ட நூல் கலித்தொகை.
  • எட்டுத்தொகை நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, பரிபாடல் ஆகியன தனித்தனிப் பாடல்களாகப் பாடப்பட்டுத் தொகுக்கப்பெற்ற தனிநிலைச் செய்யுட்களாகும்.
  • ஐங்குறுநூறு. கலித்தொகை ஆகியன சொல்லாலும், பொருளாலும் தொடர்ந்து பாடப்பட்ட தொடர்நிலைச் செய்யுட்களாகும்.
அகத்திணை நூல்கள்

  • ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் கொண்ட இன்ப நுகர்ச்சிகளை இவ்வாறு இருந்தன எனப் புறத்தார்க்குக் கூறப்படாது தமக்குள்ளேயே கொண்டு இன்பம் அனுபவிக்கும் இல்லற இன்ப நுகர்ச்சியே அகத்திணை எனப்படும்.
  • அகத்திணை நூல்களாக நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்ற ஐந்து நூல்கள் உள்ளன.



புறத்திணை நூல்கள்
  • எட்டுத்தொகை நூல்களுள் புற இலக்கியங்களாக விளங்குவன இரண்டு. அவை, பதிற்றுப்பத்து, புறநானூறு என்பனாவாகும்.
  • மக்களின் புற வாழ்க்கையோடு இயைந்த கல்வி, ஒழுக்கம், அறம், கொடை, வீரம், வெற்றி, ஆட்சிமுறை, புகழ், அறிவு, பண்பாடு, பழக்கவழக்கங்கள் ஆகிய புறப்பொருள் பற்றிப் பாடப்பட் பாடல்கள் ஆகையால் புறப்பாட்டு எனப்பட்டது.
அகப்புற நூல்
  •  அகமும் புறமும் கலந்து பாடப்பட்ட எட்டுத் தொகை நூல் பரிபாடல்.
  • ‘வேம்பு தலை யாழ்த்த நோன்காழ் எஃகம்’ என்ற குறிப்பே இதனைப் புற இலக்கியமாக்கியது.
. எண்
நூல்
பாடிய ஆசிரியர்களின் எண்ணிக்கை
பாடல் எண்ணிக்கை
யாப்பு
அடியளவு
திணை
தொகுத்தவர்
தொகுப்பித்தவர்
கடவுள் வாழ்த்துப் பாடியவா
கடவுள் வாழ்த்தில் பாடப்பட்ட தெய்வம்
1
நற்றிணை
175
400
ஆசிரியப்பா
9-12
அகம்
தெரியவில்லை
பன்னாடு தந்த மாறன் வழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
திருமால்
2
குறுந்தொகை
205
401
ஆசிரியப்பா
4-8
அகம்
பூரிக்கோ
பாரதம் பாடிய பெருந்தேவனார்
முருகன்
3
ஐங்குறுநூறு
5
500
ஆசிரியப்பா
3-6
அகம்
புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
பாரதம் பாடிய பெருந்தேவனார்
சிவன்
4
கலித்தொகை
5
150
கலிப்பா
அகம்
நல்லந்துவனார்
நல்லந்துவனார்
சிவன்
5
அகநானூறு
145
400
ஆசிரியப்பா
13-31
அகம்
உருத்திரசன்மனார்
பாண்டியன் உக்கிர பெருவழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
சிவன்
6
பதிற்றுப்பத்து
8
80
ஆசிரியப்பா
புறம்
தெரியவில்லை
தெரியவில்லை
கிடைக்கவில்லை
7
புறநானூறு
158
400
ஆசிரியப்பா
புறம்
தெரியவில்லை
தெரியவில்லை
பாரதம் பாடிய பெருந்தேவனார்
சிவன்
8
பரிபாடல்
13
22
பரிபாட்டு
25-400
அகப்புறம்
தெரியவில்லை
தெரியவில்லை





Popular Feed

Recent Story

Featured News