Thursday, May 28, 2015

எழுத்திலக்கணம்

மொழி
நம் கருத்துகளைப் பிறர்க்கு உணர்த்துவதற்காகவும், பிறர் கருத்துகளை நாம் புரிந்து கொள்வதற்காகவும் பயன்படுகிறது மொழி.
இலக்கணம்
நம் மொழியின் அமைப்பை நாம் புரிந்து கொள்வதற்காகவும், பிற
மொழியினர் நம் மொழியை அறிந்து கொள்வதற்காகவும் இலக்கணம்
தேவைப்படுகிறது.
தமிழ் இலக்கணம்
தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை, எழுத்திலக்கணம்,
சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம்
என்பனவாகும்.
எழுத்திலக்கணம்
எழுத்துக்களை நாம் ஒலி வடிவம், வரிவடிவம் என இரண்டாகப் பகுத்துக்
காணலாம். ஒலிவடிவம் என்பது நாவால் உச்சரிக்கப்படும் சொற்களைக்
குறிக்கும். வரிவடிவம் என்பது எழுதப்படும் எழுத்துக்களைக் குறிக்கும். அதாவது
கண்ணால் காணப்படும் வடிவம்.
எழுத்தின் வகை
தமிழ் எழுத்துகளை முதல் எழுத்து, சார்பு எழுத்து என இரண்டாகப்
பிரிக்கப்படுகின்றன.
முதல் எழுத்து
பிற எழுத்துகள் தோன்றுவதற்கும், அவை இயங்குவதற்கும் முதன்மையாக
இருப்பதால் இதனை முதல் எழுத்து என்கிறோம்.
முதல் எழுத்தின் வகைகள்
உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய
முப்பது எழுத்துகள் முதல் எழுத்துகளாகும்.
உயிர் எழுத்துகள்
முதல் ஒள வரை உள்ள பன்னிரண்டு எழுத்துக்களும் உயிர்
எழுத்துகளாகும். அவை, குறில், நெடில் என இரண்டு வகைப்படும்.
குறில் எழுத்துகள்
குறுகி ஒலிப்பதால் அ, இ, உ, எ, ஒ என்ற ஐந்தும் குறில் எழுத்துக்களாகும்.
நெடில் எழுத்துகள்
குறில் எழுத்துகள் நீண்டு ஓலிப்பது நெடிலாகும். , ஈ, ஊ, ஏ, ஐ, ஓ என்ற ஏழும் நெடில் ஏழுத்துகளாகும்
சுட்டெழுத்துகள்
ஒன்றினைச் சுட்டிக் கூறப்பயன்படும் எழுத்துகளைச் சுட்டெழுத்து என்பர்.
அ, இ, உ என்ற மூன்றும் சுட்டெழுத்துகளாகும்.
எ.கா.: அவன், இவன், உவன்
வினா எழுத்துகள்
வினாப்பொருளைத் தரும் எழுத்துகளை வினா எழுத்து என்பர். எ, ஏ,
, ஏ என்ற ஐந்து உயிர் எழுத்துக்களும் யா என்ற உயிர்மெய் எழுத்தும் வினா எழுத்துகளாகும். இவற்றுள், எ, ஏ, யா என்பன மொழி முதலிலும் ஆ, ஓ என்பன மொழி இறுதியிலும் ஏ மொழி முதல், மொழி இறுதி ஆகிய இரண்டு இடங்களிலும் வருகின்றன.
எ.கா.:
மொழி முதல்   :     என்ன? ஏன்? யார்?
மொழி இறுதி    :     அவனா? அவனோ? அவனே?
மெய்யெழுத்துகள்
மெய்யெழுத்துகள் பதினெட்டாகும். அப்பதினெட்டு மெய்
எழுத்துகளையும் அவற்றின் இயல்பிற்கேற்ப வல்லினம், மெல்லினம்,
இடையினம் என மூன்று வகையகப் பகுக்கப்படுகின்றன.
வல்லினம்
வன்மையாக ஒலிக்கின்ற காரணத்தால் , , , , , என்ற ஆறு
எழுத்துகளும் வல்லினம் ஆயிற்று.
மெல்லினம்
மென்மையாக ஒலிக்கின்ற காரணத்தால் , , , , , என்ற ஆறு
எழுத்துகளும் மெல்லினம் ஆயிற்று.
இடையினம்
வன்மையும் இல்லாமல் மென்மையும் இல்லாமல் இடைப்பட்ட நிலையில் ஓலிக்கின்ற காரணத்தால் , , , , , என்ற ஆறு எழுத்துகளும் இடையினம் ஆயிற்று.
சார்பெழுத்துகள்
முதல் எழுத்துகளாகிய உயிர் எழுத்துகளையும் மெய் எழுத்துகளையும்
சார்ந்து வரும் எழுத்துகள் சார்பெழுத்துகளாகும்.
சார்பெழுத்துகளின் வகைகள்
சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். அவை, உயிர்மெய், ஆய்தம்,
உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம்,
ஓளகாரக் குறுக்கம், மகரக்குறுக்கம், ஆயிதக்குறுக்கம் என்பனவாகும்.
உயிர்மெய்
உயிரும் மெய்யும் கூடிப் பிறக்கும் எழுத்துகள் உயிர்மெய் எழுத்துகள்
எனப்படும். பன்னிரண்டு உயிரும் பதினெட்டு மெய்யும் சேர்ந்து வரும் 216
எழுத்துகளே உயிர்மெய் எழுத்துக்களாகும்.
·         உயிர்மெய்க் குறில் எழுத்துகள்          : 90
·         உயிர்மெய் நெடில் எழுத்துகள்                  : 126
·         உயிர்மெய் வல்லின எழுத்துகள்    : 72
·         உயிர்மெய் மெல்லின எழுத்துகள்   : 72
·         உயிர்மெய் ஈடையின எழுத்துகள்         : 72
ஆய்தம்
மூன்று புள்ளிகளை முக்கோண வடிவில் பெற்று வரும் வரிவடிவம் ஆய்தம் எனப்படும். இது தனிக்குற்றெழுத்தை அடுத்தும் வல்லின உயிர்மெய்க்கு முன்பும் வரும்.
.கா.: அஃகு, கஃசு, எஃகு
அளபெடை
ஓர் எழுத்து தனக்குரிய மாத்திரை ஓலி அளவிலிருந்து நீண்டு ஓலிப்பதற்கு
அளபெடை என்று பெயர்.
அளபெடையின் வகைகள்
அளபெடை இரண்டு வகைப்படும். அவை, உயிரளபெடை, ஒற்றளபெடை
என்பனவாகும்.



உயிரளபெடை
உயிர் எழுத்துக்களுள் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்ற ஏழு நெட்டெழுத்துகளும் தனக்குரிய இரண்டு மாத்திரை ஒலி அளவில் இருந்து நீண்டு ஒலிப்பதற்கு உயிரளபெடை என்று பெயர்.
அவ்வாறு நீண்டு ஒலிக்கும் போது (ஆஅ) என நெட்டெழுத்துக்குப் பக்கத்தில் அதன் இனக்குறில் எழுத்து அடையாளமாக வரும்.

இன எழுத்துகள்
ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ என்பன இன எழுத்துகளாகும்.
உயிரளபெடையின் வகைகள்
உயிரளபெடை மூன்று வகைப்படும். அவை, செய்யுளிசை அளபெடை,
இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை என்பனவாகும்.
செய்யுளிசை அளபெடை
செய்யுளில் ஓசை குறையும்போது அவ்வோசையை நிறைவு செய்யும் பொருட்டு நெட்டெழுத்துகள் ஏழும் அளபெடுத்து நீண்டு ஓலிப்பது செய்யுளிசை அளபெடையாகும். இது மொழி முதல், இடை, கடை அகிய மூன்று இடங்களிலும் அளபெடுக்கும்.
.கா.:                ஓஒதல்    - மொழி முதல் அளபெடுத்தல்
தொழாஅர்    - மொழி இடையில் அளபெடுத்தல்
படாஅ     - மொழி இறுதியில் அளபெடுத்தல்

கற்றதனால் அய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

இன்னிசை அளபெடை
செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் செவிக்கு இனிய ஓசையைத் தரும் பொருட்டு, குற்றெழுத்து நெட்டெழுத்தாக மாறி அளபெடுப்பது இன்னிசை அளபெடையாகும்.
.கா.: எடுப்பதூம் எண்பதூம்
கெடுப்பதூஎம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஎம் எல்லாம் மழை.
இக்குறளில் கெடுப்பதும், எடுப்பதும் என்று இருந்தாலும் செய்யுள் ஓசை
குறைவதில்லை (இலக்கணம் பிழை படுபதில்லை). ஆயினும் இனிய ஓசை
தருவதற்காக கெடுப்பது, எழுப்பது என்பவற்றிலுள்ள  து என்ற குறில் எழுத்து
தூ என்று நெடிலாக மாறி அளபெடுத்து நிற்கிறது. இவ்வாறு அமைவது இன்னிசை அளபெடையாகும்.
சொல்லிசை அளபெடை
செய்யுளில் ஓசை குறையாத போதும், பெயர்ச்சொல் வினையெச்சமாக
மாற்றுவதற்கு அளபெடுப்பது சொல்லிசை அளபெடை எனப்படும்.
.கா.:                 நசை      - பெயர்ச்சொல்
நசைஇ             - வினையெச்சம்
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரன்நசைஇ இன்னும் உளேன்.
ஒற்றளபெடை
செய்யுளில் ஓசை குறையும் பொது அதை நிறைவு செய்யும் பொருட்டு மெய் எழுத்து அளபெடுப்பது ஓற்றளபெடை எனப்படும்.

அளபெடுக்கும் ஒற்றெழுத்துகள்
மெய் எழுத்துக்களுள், ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள்,  என்ற பதினொரு எழுத்தும் அளபெடுக்கும். இவை, குறிலை அடுத்தும், குறில் இணை அடுத்தும் மொழி இடை, மொழி கடை அகிய இடங்களில் அளபெடுக்கும்.
. கா.:                குறிலை அடுத்து அளபெடுத்தல்- கண்ண் கருவிளை   - மொழி கடை
குறில் இணைந்து அளபெடுத்தல் - கலங்ங்கு நெஞ்சமிலை- மொழி இடை
குற்றியலுகரம் (குறுகும்+இயல்+உகரம்)
குறுகும் இயல்புடைய எகரம் குற்றியலுகரம். அதாவது, கரம் தனக்குரிய
ஒரு மாத்திரையில் இருந்து அரை மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதற்குக்
குற்றியலுகரம் என்று பெயர். குற்றியலுகரச் சொற்களை ஒலிக்கும் போது உதடு
குவியாது.
குற்றியலுகரத்தின் வகைகள்
குற்றியலுகரம் அறு வகைப்படும். அவை, நெடில் தொடர், அய்தத் தொடர், உயிர்த்தொடர், வன்றொடர், மென்றொடர், இடைத்தொடர் என்பனவாகும்.
.கா.:                                 நெடில் தொடர் குற்றியலுகரம்                  - ஆடு
ஆய்தத்தொடர் குற்றியலுகரம்           - அஃது
உயிர்த்தொடர் குற்றியலுகரம்      - வரகு
வன்றொடர் குற்றியலுகரம்                         - காற்று
மென்றொடர் குற்றியலுகரம்       - பஞ்சு
இடைத்தொடர் குற்றியலுகரம்           - மார்பு
குற்றியலிகரம் (குறுகும்+இயல்+இகரம்)
குறுகும் இயல்புடைய உஇகரம் குற்றியலிகரமாகும். அதாவது, கரம்
தனக்குரிய ஒரு மாத்திரையில் இருந்து குறைந்து அரை  ஒலிப்பதற்குக் குற்றியலிகரம் என்று பெயர்.
நிலைமொழி குற்றியலுகரமாக இருந்து, வருமொழியில் யகரம் வந்தால்,
நிலை மொழியில் எள்ள எகரம் இகரமாகத் திரியும். இவ்வாறு திரிந்து வரும்
இகரமும், மியா என்னும் சொல்லில் எள்ள இகரமும் தனக்குரிய மாத்திரையில்
இருந்து குறைந்து ஒலிக்கின்றன.
.கா.: நாகு + யாது = நாகியாது
மியா
ஐகாரக்குறுக்கம்
என்ற எழுத்து தன்னைச் சுட்டுகின்ற போதும், அளபெடுக்கும் போதும் மட்டுமே இரண்டு மாத்திரையாக ஒலிக்கும். சொல்லின் முதல், இடை, கடை ஆகிய  இடங்களில் ஒலிக்கும்போது தனக்குரிய இரண்டு மாத்திரையில் இருந்து, ஒரு மாத்திரையாகவோ, ஒன்றரை மாத்திரையாகவோ குறைந்து ஒலிக்கும். இதனையே ஐகாரக்குறுக்கம் என்பர்.
.கா.:                 மொழி முதல்    ஐந்து                  ஒன்றரை மாத்திரை
மொழி இடை             வளையல்    ஒருமாத்திரை
மொழி கடை     வலை              ஒருமாத்திரை
ஒளகாரக்குறுக்கம்
ஒளகாரமும் ஐகாரத்தைப் போலவே தன்னைச் சுட்டுகின்ற போதும், அளபெடுக்கும் போதும் மட்டுமே இரண்டு மாத்திரையாக ஒலிக்கும். சொற்களில் வரும் போது தனக்குரிய இரண்டு மாத்திரையில் இருந்து குறைந்து ஒலிக்கும். இதனையே ஒகாரக்குறுக்கம் என்பர். இது மொழி முதலில் மட்டுமே வரும். மொழி இடை, கடை அகிய இடங்களில் வராது.
.கா.:                  ஒளவையார், மௌவல்
மகரக்குறுக்கம்
ணகர, னகரங்களை அடுத்து வரும் ம்  என்பதும், வகரத்திற்கு முன் வரும் ம் என்பதும் தன் அரை மாத்திரையில் இருந்து குறைந்து கால் மாத்திரையாக ஒலிக்கும். இதனையே மகரக்குறுக்கம் என்பர்.
.கா.:                 மருண்ம், போன்ம்
வரும் வண்டி
ஆய்தக் குறுக்கம்
நிலைமொழியில் தனிக்குறிலை அடுத்துவரும் லகர, ளகர மெய்கள் நின்று,
வருமொழி முதலில் தகரம்(த்) வந்தால் லகரத்திற்கு முன் வரும் தகரம் றகரமாகவும்(ற்), ளகரத்திற்கு முன் வரும் தகரம் டகரமாகவும்(ட்)திரிந்து புணரும்.
நிலைமொழியில் உள்ள லகர, ளகரங்கள்(ல்,ள்) ஆய்தமாகவும் திரியும். அந்த
ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து குறைந்த கால்மாத்திரையாக
ஒலிக்கும். இதற்கு ஆய்தக்குறுக்கம் என்று பெயர்.
.கா.:                 கல் + தீது = கஅறீது
முள் + தீது = முஅடீது
மாத்திரை
எழுத்துகளின் கால அளவு மாத்திரை எனப்படும். இயல்பாக ஒரு மனிதன்
கண்ணிமைத்தலையும், கை நொடித்தலையும் ஒரு மாத்திரையாகக் கொள்ளப்படும்.
எழுத்துகளுக்குரிய கால அளவு (மாத்திரை)
·         உயிரளபெடை   - 3 மாத்திரை
·         நெடில்          - 2 மாத்திரை
·         குறில்                - 1 மாத்திரை
·         ஐகாரக்குறுக்கம்  - 1 மாத்திரை
·         ஒளகாரக்குறுக்கம் - 1 மாத்திரை
·         ஒற்றளபெடை   - 1 மாத்திரை
·         மெய் எழுத்து    - அரை மாத்திரை
·         குற்றியலுகரம்   - அரை மாத்திரை
·         குற்றியலிகரம்   - அரை மாத்திரை
·         ஆய்தம்         - அரை மாத்திரை
·         மகரக்குறுக்கம்   - கால் மாத்திரை
·         ஆய்தக்குறுக்கம் - கால் மாத்திரை
எழுத்துகளின் பிறப்பு
அடி வயிற்றில் இருந்து எழும் காற்றானது மேல்நோக்கிச் சென்று, மார்பு,
கழுத்து, மூக்கு, தலை ஆகிய இடங்களில் நிலைபெற்று, பல், உதடு, நாக்கு,
மேல்வாய் ஆகிய உறுப்புகளின் உதவியோடு எழுத்துகள் பிறக்கின்றன.
இடப்பிறப்பு
முதல் எழுத்தும் சார்பு எழுத்தும் நான்கு இடங்களில் பிறக்கின்றன. அவை
மார்பு, கழுத்து, மூக்கு, தலை என்பனவாகும்.
·         மார்பு                                 - வல்லினம்                                                                - முதல் எழுத்து
·         கழுத்து            - உயிர் எழுத்து, இடையினம்  - முதல் எழுத்து
·         மூக்கு     - மெல்லினம்               - முதல் எழுத்து
·         தலை           - ஆய்தம்                  - சார்பு எழுத்து


முயற்சி பிறப்பு
முயற்சிப் பிறப்பு நான்கு. அவை, நாக்கு, இதழ்(உதடு), பல், அண்ணம் (மேல்வாய்) என்பன.
உயிர் எழுத்துகளின் பிறப்பு முயற்சி
·         , - வாயைத் திறத்தலால் பிறக்கின்றன.
·         , , , , - வாயைத் திறத்தலோடு, கீழ் பல்லின் அடியை நாநுனி பொருந்துவதால் பிறக்கின்றன
·         , , , , ஒள - இதழ் குவிவதால் பிறக்கின்றன.
மெய் எழுத்துகளின் பிறப்பு முயற்சி
·         , - அடி நா, அடி அண்ணத்தைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
·         , - இடை நா, இடை அண்ணத்தைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
·         , - நுனி நா, நுனி அண்ணத்தைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
·         , - மேல் வாய்ப் பல்லின் அடியை நுனி நா பொருந்துவதால் பிறக்கின்றன.
·         , - மேல் உதடும் கீழ் உதடும் பொருந்துவதால் பிறக்கின்றன.
·         - நாவின் அடி, மேல் அண்ணத்தைப் பொருந்துவதால் பிறக்கிறது.
·         , - நாவின் நுனி அண்ணத்தைத் தடவ பிறக்கின்றன.
·         , - நாவின் விளிம்பு தடித்து மேற்பல்லின் அடியை ஒற்ற பிறக்கிகும், வறுட ள பிறக்கும்.
·         - மேல்வாய் பல்லும் கீழ் உதடும் பொருந்துவதால் பிறக்கிறது.
·         , - நாவின் நுனி மேல் சென்று அண்ணத்தைத் தொடுவதால் பிறக்கின்றன.
மொழி முதல் எழுத்துகள்
தமிழில் எள்ள 247 எழுத்துகளும் மொழி முதலில் வருவதல் இல்லை. ஒரு
சில எழுத்துகளே மொழிக்கு முதலில் வருகின்றன. அவ்வகையில் எயிர் எழுத்து
பன்னிரண்டும் மெய் எழுத்துகள் பத்தும் என 22 எழுத்துகள் மட்டுமே மொழி
முதலில் வருகின்றன.
1.       உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மொழி முதலில் வரும்.
2.       க், த், ந், ப், ம் அகிய ஒந்தும் 12 எயிர் எழுத்தோடும் மொழி முதலில் வரும்.
3.       வ், , , , ஆகிய நான்கு எழுத்துகள் நீங்களாக, ஏனைய 8 உயிருடனும் வரும்.
4.       ய், , , , , , ஒள என்ற அறு எயிருடனும் மொழி முதலாகும்.
5.       ஞ், , , , என்ற நான்கு எயிரோடும் கூடி மொழி முதலில் வரும்.
6.       ங், அகர எயிருடன் மொழி முதலாகும்.
மொழி முதல் எழுத்துகளும் இலக்கண நூல்களும்
·         தொல்காப்பியம்                     - 96
·         வீரசோழியம்          - 102
·         நேமிநாதம்           - 98
·         நன்னூல்             - 103
·         இலக்கண விளக்கம்    - 94
·         முத்துவீரியம்         - 102
·         சுவாமிநாதம்          - 106
மொழி முதலில் வாரா எழுத்துகள்
·         மெய் எழுத்துகள் பதினெட்டும் மொழி முதலில் வராது.
·         , , , , , , , அகிய எட்டு எழுத்துகள் எந்த எயிருடனும்
·         சேர்ந்து மொழி முதலில் வராது.
·         மொழி இறுதியில் வரும் எழுத்துகள்
·         பன்னிரண்டு எயிரெழுத்துகளும் மொழி இறுதியில் வரும்.
·         ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் அகிய பதினொரு மெய் எழுத்துகள்
·         இறுதியில் வரும்.
மொழிக்கு இறுதியில் வாரா எழுத்துகள்
க், ச், ட், த், ப், ற், ங் என்ற 7 எழுத்துகளும் மொழி இறுதியில் வருதல் இல்லை.
மொழிக்கு இடையில் வரும் எழுத்துகள்
மெய் எழுத்துகள் பதினெட்டும் மொழிக்கு இடையில் வரும். அவை
தம்மும் தாம் வரல், தம்முன் பிற வரல் என்ற அடிப்படையில், உடனிலை மெய்
மயக்கம், வேற்றுநிலை மெய்மயக்கம் என இரண்டாகப் பகுக்கப்படுகின்றன.
உடநிலை மெய்மயக்கம்
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ல், வ், ள், ற், ன் அகிய 16 எழுத்துகளும்
தம்மொடு தாமே வந்து மயங்கும் இதனையே எடநிலை மெய்மயக்கம் என்பர்.
இவற்றிலும் குறிப்பாக, க், ச், த், ப் அகிய எழுத்துகள் தம்மெய்யோடு தம்மெய் மட்டுமே வந்து மயங்கும். இவை பிற மெய்யோடு மயங்குவதில்லை. ங், ஞ், ட்,
ண், ந், ம், ய், ல், வ், ள், ற், ன் அகிய 12 எழுத்தும் தம்மெய்யொடு மட்டுமல்லாது
பிறமெய்யோடும் வந்து மயங்கும்.
வேற்றுநிலை மெய்மயக்கம்
ர், ழ் அகிய இரண்டு எழுத்துகளும் தம்மெய்யோடு தம்மெய் வந்து
மயங்காது பிற மெய்யொடு மட்டுமே வந்து மயங்கும். இதற்கு வேற்றுநிலை
மெய்மயக்கம் என்று பெயர்.
தம்மெய்யோடு தம் மெய் மட்டும்
மயங்கும் எழுத்துகள் : க், ச், த், ப் 4

தம்மெய்யோடும் பிறமெய்யோடும்
மயங்கும் எழுத்துகள் : ங், ஞ், ட், ண், ந், ம், ய், ல், வ், ள், ற், ன் 12
பிற மெய்யோடு மட்டுமே
மயங்கும் எழுத்துகள் : ர், ழ் 2



Popular Feed

Recent Story

Featured News