Thursday, May 28, 2015

சொல் இலக்கணம்

சொல் இலக்கணம்
இலக்கண வகைப் பாகுபாடு
1.             பெயர்ச்சொல் - ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல்
.கா.:  மரம், செடி, கொடி, மனிதன், மக்கள்.
2.             வினைச்சொல் - வினையைக் குறிக்கும் சொல்
.கா.:  ஓடினான், ஆடினான், பாடினான்.
3.             இடைச்சொல் - பெயர், வினைச் சொற்களில் வந்து பொருள் உணர்த்தும் சொல் எ.கா.: ஒடு, ஓடு, ஐ, ஆல், மற்று, அத்து.
4.             உரிச்சொல் - பெயர், வினைச் சொற்களுக்கு அடையாக வரும்சொல்
.கா.:  நனிபேதை, கடிநடை, மாமரம்.

இலக்கிய வகைப்பாகுபாடு
1.             இயற்சொல் கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் எளிதில் விளங்கும் சொல்.
.கா.: தெய்வம், மக்கள், விலங்கு, மரம்
2.             திரிசொல் - கற்றவர்க்கு மட்டும் பொருள் விளங்கும் சொல்
.கா.: இழி, மா, ஆ.
3.             திசைச்சொல் - வெவ்வேறு திசையிலிருந்து வந்து தமிழில் கலக்கும்
சொல். அதாவது தமிழ், வடமொழி அல்லாத பிறமொழிச் சொல்
.கா.: பண்டிகை, அச்சன், நைனா,
4.             வடசொல் - வடமொழியில் இருந்து தமிழில் வழங்கும் சொல்
.கா.:  சங்கீதம், மரகதம், கமலம்.
பெயர்ச்சொல்
ஒன்றின் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். இது, ஆறு
வகைப்படும். அவை, பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர்,
குணப்பெயர், தொழிற்பெயர் என்பனவாகும்.
பொருட்பெயர்:     பொருளைக் குறிக்கின்ற பெயர்
.கா.: முருகன், சிங்கம், மரம், வண்டி
இடப்பெயர்:                     இடத்தைக் குறிக்கின்ற பெயர்
.கா.: இரட்டணை, திண்டிவனம்,
காலப்பெயர்:                   காலத்தைக் குறிக்கின்ற பெயர்
.கா.: காலை, மாலை, திங்கள், கார்த்திகை
சினைப்பெயர்:               உறுப்புகளைக் குறிக்கின்ற பெயர்
.கா.: கை, கால், இலை, வேர், பூ
குணப்பெயர்:                 குணத்தைக் குறிக்கின்ற பெயர்
.கா.: பசுமை, நீளம், இனிமை, நன்மை
தொழிற்பெயர்:     தொழிலைக் குறிக்கும் பெயர்
.கா.: படித்தல், உண்ணல், வருதல்
வினையால் அணையும் பெயர்
·         வினையால் அணையும் பெயர், வினையைக் குறிக்காது வினை செய்தவரைக் குறித்து வரும்.
·         இது வினைமுற்றுத் தன்மையைக் கொண்டிருக்கும்.
·         வேற்றுமை உருபை ஐற்றும் ஐற்காதும் வரும்.
·         தன்மை, முன்னிலை, படற்கை இகிய மூன்று இடங்களிலும் வரும்.
·         காலம் உணர்த்தி வரும்.
·         .கா.: அகழ்வார் படித்தவன் வாழ்வான் உடையான் உரவோர்
ஆகுபெயர்
·         ஒன்றன் பெயர் தன்னைக் குறிக்காமல் தன்னோடு தொடர்புடைய பிரிதொன்றிற்கு இகி வருவது இகுபெயராகும்.
·         .கா.: தேசம், கழல்
வினைச்சொல்
·         ஒரு செயல் அல்லது தொழிலைக் குறிக்கும் சொல் வினை எனப்படும்.
·         .கா.: வந்தான், நடந்தான், ஆடினான்
வினைச்சொல் வகைகள்
·         வினைச்சொல் இரண்டு வகைப்படும். அவை, முற்று, எச்சம் என்பனவாகும்
·         .கா.: வந்தான் - முற்று
·         வந்து - எச்சம்
வினைமுற்று
·         பொருள் முற்று பெற்று வரும் வினைசொல் வினைமுற்று எனப்படும்.
·         இது எழுவாய்க்குப் பயனிலையாய் அமையும்.
·         முக்காலங்களில் ஒன்றை உணர்த்தி வரும்.
·         திணை, பால், எண், இடங்களைக் காட்டும்.
·         .கா.: வந்தான் நடந்தான் ஓடினான் வந்தான்
வினைமுற்றின் வகைகள்
·         வினைமுற்று இரண்டு வகைப்படும்
·         அவை, தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என்பனவாகும்.
தெரிநிலை வினைமுற்று
·         காலத்தை வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று தெரிநிலை
·         வினைமுற்று எனப்படும்.
·         இது, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்ற ஆறையும் தெரிவிக்கும்.
·         .கா.: உழுதான்
1.       செய்பவன் - உழவன்
2.       கருவி - கலப்பை
3.       நிலம் - வயல்
4.       செயல் - உழுதல்
5.       காலம் - இறந்தகாலம்
6.       செய்பொருள் - நெல்
குறிப்பு வினைமுற்று
·         பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்ற இறின்
·         அடிப்படையில் தோன்றும்.
·         கருத்தாவை மட்டும் தெரிவிக்கும்.
·         காலத்தைக் குறிப்பாகக் காட்டும்.
·         .கா.:
1.       பொன்னன்          பொன்னை உடையவன் பொருள்
2.       விழுப்புரத்தான்            விழுப்புரத்தில் வாழ்பவன் இடம்
3.       சித்திரையான்      சித்திரையில் பிறந்தவன் காலம்
4.       கண்ணன்                          கண்களை உடையவன் சினை
5.       நல்லன்                              நல்ல குணங்களை உடையவன் குணம்
6.       உழவன்           உழுதலைச் செய்பவன் தொழில்
எச்சம்
·         முற்று பெறாத வினை எச்சம் எனப்படும்
·         .கா.: வந்து, படித்து, சென்று, பாடி, ஓடி என்பன.
எச்சத்தின் வகைகள்
·         எச்சம் இரண்டு வகைப்படும்.
·         அவை, பெயரெச்சம், வினையெச்சம் என்பன.
பெயரெச்சம்
·         பெயரைக் கொண்டு முடியும் எச்சச் சொல் பெயரெச்சம் எனப்படும்.
·         எச்சசொல் + பெயர்ச்சொல் = பெயரெச்சம்
·         .கா.:
1.       இறந்தகாலப் பெயரெச்சம்  படித்த மாணவன்
2.       நிகழ்காலப் பெயரெச்சம்         படிக்கின்ற மாணவன்
3.       எதிர்காலப் பெயரெச்சம்          படிக்கும் மாணவன்
பெயரெச்ச வகைகள்
·         பெயரெச்சம் இரண்டு வகைப்படும்.
·         அவை, தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என்பனவாகும்.
தெரிநிலைப் பெயரெச்சம்
·         காலத்தையும் செயலையும் வெளிப்படையாகக் காட்டும்.
·         செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்ற ஆறும் எஞ்சி நிற்கும்.
·         உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வரும்.
·         .கா.: உண்டான் இளங்கோ
1.       செய்பவன் - இளங்கோ
2.       கருவி - கலம்
3.       நிலம் - வீடு
4.       செயல் - உண்ணுதல்
5.       காலம் - இறந்தகாலம்
6.       செய்பொருள்சோறு

1.       உண்ட இளங்கோ         உடன்பாடு
2.       உண்ணாத இளங்கோ      எதிர்மறை
குறிப்புப் பெயரெச்சம்
·         காலத்தையோ செயலையோ வெளிப்படையாக உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சம், குறிப்புப் பெயரெச்சம் எனப்படும். இது உடன்பாடு, எதிர்மறைப் பொருளிலும் வரும்.
·         .கா.:   நல்ல மாணவன் உடன்பாடு
தீய மாணவன் எதிர்மறை
வினையெச்சம்
·         வினைச் சொற்களைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும்.(முற்று பெறாத வினைச்சொல் வேறொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது.)
·         எச்சசொல் + வினைச்சொல் = வினையெச்சம்
·         .கா.: படித்து வந்தான், பாடக் கேட்டான், ஓடிச் சென்றான், போய்ப் பார்த்தான்.
வினையெச்ச வகைகள்
·         வினையெச்சம் இரண்டு வகைப்படும்.
·         அவை, தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என்பனவாகும்.
தெரிநிலை வினையெச்சம்
·         ஓர் எச்சச் சொல், காலத்தையும் செயலையும் வெளிப்படையாக உணர்த்தி, வினைமுற்றைக் கொண்டு முடிவது தெரிநிலை வினையெச்சமாகும்.
·         .கா.:   படிக்கச் சென்றான்        இறந்தகால வினையெச்சம்
படித்து வருகிறான்                      நிகழ்கால வினையெச்சம்
ஓடி வருவான்                                எதிர்கால வினையெச்சம்
குறிப்பு வினையெச்சம்
·         ஓர் எச்சச் சொல், காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பினை உணர்த்தி நின்று, வினைமுற்றைக் கொண்டு முடிவது குறிப்பு வினையெச்சம் எனப்படும்.
·         .கா.: மெல்லப் பேசினான், நோயின்றி வாழ்ந்தான்.
முற்றெச்சம்
·         ஒரு வினைமுற்றுச் சொல், எச்சப் பொருளில் வந்து, மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.

·         .கா.: கண்ணன் படித்தான் தேறினான்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News