Wednesday, May 13, 2015

காப்பியம்

காப்பியம்
Ø  காப்பியம், ஆங்கிலத்தில் EPIC எனப்படுகிறது.
Ø  இச்சொல் EPOS என்ற கிரேக்கச் சொல்லின் அடிப்படையில் உருவானது. இதற்குச் சொல் அல்லதுபாடல் என்பது பொருள்.
Ø  காவியம் என்னும் வட சொல்லின் தமிழ் வடிவமே காப்பியம்.
Ø  காவியம் என்பது கவியினால் செய்யப்பட்டது எனப் பொருள் தரும்.
Ø  காப்பியம் என்பதைக் காப்பு + இயம் என்றும் பிரித்துப் பொருள் காணலாம்.
Ø  காப்பியத்தைத் தொடர்நிலைச் செய்யுள் எனவும் குறிப்பர்.
Ø  காவியம், காப்பியம் என்னும் இவ்விரு சொற்களும் சில தமிழ்க் காப்பியப் பெயர்களில் அமைந்திருப்பதைக் காணலாம். சான்றுகள்:
Ø  காவியம் என்று பெயர் பெறுபவை
யசோதர காவியம், நாககுமார காவியம், இயேசு காவியம், இராவண காவியம்.
Ø  காப்பியம் என்று பெயர் பெறுவன
கண்ணகி புரட்சிக் காப்பியம், கற்புக் காப்பியம்
Ø  காப்பியம் என்பது இலக்கிய வடிவங்களில் ஒன்று.
Ø  இதனைப் பெருங்காப்பியங்கள் சிறுகாப்பியங்கள் என்று  பகுத்துக் கூறுவர்.
Ø  அறம்,பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஒரு ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது பெருங்காப்பியமாகும்.
Ø  வாய்மொழி இலக்கியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று இது விரிந்து வளர்கிறது.
Ø  அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பொருள்களையும் பாடுவது பெருங்காப்பியம்.
Ø  இவற்றுள் சில பொருள்கள் மட்டும் வைத்துப் பாடுவது சிறுகாப்பியம்.
Ø  தமிழின் பழைய இலக்கியங்கள் தனிப்பாடற்றிரட்டுக்களாகவே உள்ளன.
Ø  மூன்று அடி முதல் 782 அடியுள்ள நீண்ட பாட்டு வரையில் உள்ள தனிப்பாட்டுக்களே சங்க இலக்கியமாக உள்ளன.
Ø  தொடக்கத்தில் நாட்டுப் பாடல்களின் ஓசையமைப்பையும் பொருள் வகையையும் ஒட்டி வளர்க்கப்பட்ட தனிப்பாடல்களே தமிழ் இலக்கியத்தின் தோற்றமாகும்.
Ø  சங்கப் பாட்டுக்களில் நாட்டியக் கலையில் நன்கு தேர்ந்த விறலியர், கூத்தர், பொருநர் என்போர் பற்றிய குறிப்புக்கள் உள்ளன.
Ø  தமிழ்க் காப்பியங்களை ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள் என இரண்டாகப் பகுப்பர்.
Ø  'ஐம்பெருங்காப்பியம்' என்னும் தொடரை 14-ம் நூற்றாண்டு மயிலைநாதர் குறிப்பிடுகிறார்.
Ø  தணிகையுலா நூல் வழங்கியுள்ளதன் அடிப்படையில் இந்தப் பாகுபாடு தோன்றியது.
ஐம்பெருங் காப்பியங்கள்
Ø  சிலப்பதிகாரம், மணிமேகலை,  குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்பன ஐம்பெருங் காப்பியங்களாகும்.
Ø  இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்தில் தோன்றியவை.
Ø  ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.
அணிகலப் பெயர்கள்
காப்பியப் பெயர்கள் அனைத்து அணிகலன்களால் பெயர் பெற்றவை.
Ø  சிலப்பதிகாரம்      - சிலம்பு என்பது மகளிர் அணியும் காலணி
Ø  மணிமேகலை      - ஆடை நழுவாமலிருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி
Ø  குண்டலகேசி       - குண்டலம் என்பது மகளிர் அணியும் காதுவளையம்.
Ø  வளையாபதி       - வளையல் அணிந்த பெண் வளையாபதி

Ø  சீவகசிந்தாமணி    - அரசன் முடியில் (கிரீடத்தில்) பதிக்கப்படும் மணிக்கல்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News