Thursday, May 28, 2015

யாப்பிலக்கணம்


யாப்பிலக்கணம்
Ø  செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம் யாப்பிலக்கணம் எனப்படும்.
Ø  யாப்பு என்பதற்கு யாத்தல், இயற்றுதல், கட்டுதல், என்பது பொருள்.
யாப்பின் வேறு பெயர்கள்
Ø  யாப்பு, செய்யுள், பாட்டு, தூக்கு, கவி, கவிதை, பா, தொடர்பு என்பன யாப்பின் வேறு பெயர்களாகும்.
Ø  செய்யுள் எனப்படுவது பாவும் பாவினமுமாகும்.
உறுப்பியல்
செய்யுள் உறுப்புகள்
Ø  செய்யுள் இயற்றுவதற்குப் பயன்படும் உறுப்புகள் யாப்புறுப்புக்களாகும்.
Ø  இது ஆறுவகைப்படும்.
Ø  அவை எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, என்பனவாகும்.
எழுத்து
Ø  எழுத்திலக்கணத்தில் கூறிய முதல் மற்றும் சார்பு எழுத்துக்கள் யாப்பிலக்கணத்திற்குரிய எழுத்துக்களாகும்.
Ø  அவை உயிர். குறில். நெடில். மெய். வல்லினம். மெல்லினம். இடையினம். ஆய்தம். குற்றியலிகரம். குற்றியலுகரம். ஐகாரக்குறுக்கம். ஔகாரக்குறுக்கம், அளபெடை என்பன.
Ø  இப்பதிமூன்று எழுத்துக்களையும் அசைக்கு உறுப்பாகும் எழுத்துக்கள் என்று கூறுவர்.
Ø  செய்யுளில் எழுத்து எண்ணிப் பாடுங்கள் மெய் எழுத்துகளை எண்ணப்படுவதில்லை.
Ø  சீர், தளை சிதைய வருமிடத்தும் குற்றியலுகரம், குற்றியலிகரம், அளபெடை ஆகியனவும் எண்ணப்படமாட்டாது.

அசை
Ø  எழுத்துக்கள் தனியாகவோ, பல எழுத்துக்கள் சேர்ந்தோ அசைத்து(பிரிந்து) நிற்பது அசை எனப்படும்.
Ø  இவ்வசை நேரசை, நிரையசை என இரண்டு வகைப்படும்
நேரசை
Ø  குறில், நெடில் தனித்து வருவதும் ஒற்றுடன் வருவதும் நேரசை எனப்படும்.
Ø  இது நான்கு வகையில் அமையும்.
Ø  எ.கா.
·         குறில் தனித்து வருதல்          க
·         நெடில் தனித்து வருதல்    கா
·         குறில் ஒற்றுடன் வருதல்   கல்
·         நெடில் ஒன்றுடல் வருதல்  கால்
(மொழி இறுதியில் மட்டுமே குறில் தனித்து வரும். மொழி முதலில் வராது)
நிரையசை
Ø  குறில் இணைந்தும் குறில்நெடில் இணைந்தும் ஒற்றுடனும் வருவது நிரைசை.
Ø  இந்நிரையசையும் நான்கு வகையில் அமையும்
Ø  எ.கா.
·         இருகுறில் இணைந்து வருதல்               பல
·         இருகுறில் இணைந்து வருதல்               பலா
·         குறில் நெடில் இணைந்து வருதல்            பகல்
·         குறில் நெடில் இணைந்து ஒற்றுடன் வருதல்  விளாம்
சீர்
Ø  அசைகள் தனித்தும் இணைந்தும் அடிக்கு உறுப்பாக அமைவது சீர் எனப்படும்.
Ø  இச்சீர் நான்கு வகைப்படும்.
Ø  அவை, ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் என்பன.
ஓரசைச்சீர்
Ø  நேரசையும் நிரையசையும் தனித்து வருவது ஓரசைச் சீராகும்.
Ø  இது நான்கு வகையில் அமையும்
Ø  இவை பெரும்பாலும் வெண்பாவின் ஈற்றுச் சீராய் மட்டுமே அமையும்.
Ø  எ.கா.
அசை         வாய்பாடு  சான்று
நேர்          நாள்       மண்
நிரை         மலர்      மரம்
நேர்பு         காசு       நாடு
நிரைபு       பிறப்பு     சிறப்பு
ஈரசைச்சீர்
Ø  நேர், நிரை என்ற இரண்டு அசைகளும் நேர்நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரை என இரண்டிரண்டாய் விரவி வரும் சீர் நான்கும் ஈரசைச்சீராகும்.
Ø  இவ்வீரசைச்சீர்கள் நான்கும் ஆசிரியப்பாவிற்கு உரியன. ஆகவே இவற்றை இயற்சீர் என்றும் அகவற்சீர்(ஆசிரிய உரிச்சீர்) என்றும் அழைப்பர்.
Ø  எ.கா.
அசை         வாய்பாடு  சான்று
நேர்நேர்      தேமா           வேதப்
நிரைநேர்           புளிமா     பொருளாய்
நிரைநிரை    கருவிளம்  விளங்கிய
நேர்நிரை          கூவிளம்   சங்கரன்
மூவசைச்சீர்
Ø  ஈரசைச்சீர்கள் நான்கின் இறுதியிலும் நேர், நிரை ஆகியன தனித்தனியாகச் சேர்ந்துவரும் எட்டு சீர்களும் மூவசைச்சீர்களாகும்.
Ø  இவற்றை காய்ச்சீர்கள், கனிச்சீர்கள் என இரண்டாகப் பகுப்பர்.
Ø  காய்ச்சீர்கள் நான்கும் வெண்பாவிற்கும், கனிச்சீர்கள் நான்கும் வஞ்சிப்பாவிற்கும் உரியன.
Ø  ஆகவே, இவற்றை வெண்பா உரிச்சீர்(காய்ச்சீர்கள்) என்றும், வஞ்சி உரிச்சீர்(கனிச்சீர்கள்) என்றும் அழைப்பர்.
Ø  எ.கா.
அசை               வாய்பாடு        சான்று
நேர்நேர்நேர்        தேமா     ங்காய்     வானத்தில்
நிரைநேர்     நேர்       புளிமாங்காய்    ஒளிவீசும்
நிரைநிரைநேர்      கருவிளங்காய்   அழகுநிலா
நேர்நிரை     நேர்       கூவிளங்காய்    வெள்ளைநிறம்

நேர்நேர்நிரை       தேமா     ங்கனி          மண்வாசனை
நிரைநேர்     நிரை      புளிமாங்கனி    மழைநீருடன்
நிரைநிரைநிரை     கருவிளங்கனி   கலந்துவருமே
நேர்நிரை     நிரை      கூவிளங்கனி    நம்உறவுபோல்
நாலசைச்சீர்
Ø  மூவசைச்சீர்கள் எட்டின் இறுதியிலும் நேர், நிரை ஆகியன தனித்தனியாகச் சேர்ந்துவரும் பதினாறு சீர்களும் நாலசைச்சீர்களாகும்.
Ø  இவற்றை பூச்சீர்கள், நிழற்சீர்கள் என இரண்டாகப் பகுப்பர்.
Ø  இந்நாலசைச்சீர்கள் வெண்பாவில் வருதல் இல்லை.
Ø  ஆசிரியப்பா, கலிப்பாவினுள் பெரும்பாலும் குற்றியலுகரங்களாக வரும் இடத்தில் மட்டுமே வரும். ஏனைய இடங்களில் வாரா.
Ø  வஞ்சிப்பாவிலும் ஓரிரு இடங்களில் மட்டுமே வரும். ஏனைய இடங்களில் அவை பிரிந்து இரண்டிரண்டு சீர்களாக வரும்.
Ø  எ.கா.
அசை               வாய்பாடு              சான்று
நேர்நேர்நேர்நேர்    தேமா     ந்தண்பூ         கண்ணில்கண்டேன்
நிரைநேர்     நேர்நேர்    புளிமாந்தண்பூ       
நிரைநிரைநேர்நேர்  கருவிளந்தண்பூ      
நேர்நிரை     நேர்நேர்    கூவிளந்தண்பூ       

நேர்நேர்நிரைநேர்   தேமாநறும்பூ        
நிரைநேர்     நிரைநேர்   புளிமாநறும்பூ       
நிரைநிரைநிரைநேர் கருவிளநறும்பூ      
நேர்நிரை     நிரைநேர்   கூவிளநறும்பூ       

நேர்நேர்நேர்நிரை   தேமாந்தண்ணிழல்   
நிரைநேர்     நேர்நிரை   புளிமாந்தண்ணிழல்   
நிரைநிரைநேர்நிரை கருவிளந்தண்ணிழல் 
நேர்நிரை     நேர்நிரை   கூவிளந்தண்ணிழல்  

நேர்நேர்நிரைநிரை  தேமா     நறுநிழல்      
நிரைநேர்     நிரைநிரை  புளிமாநறுநிழல்      
நிரைநிரைநிரைநிரை கருவிளநறுநிழல்     
நேர்நிரை     நிரைநிரை  கூவிளநறுநிழல்     

Ø  இப்பதினாறு சீர்களைத் தளை காணுமிடத்து பூச்சீர் காய்ச்சீர் போன்றும் நிழற்சீர் கனிச்சீர் எண்ண வேண்டும்.
தளை
Ø  அசைகள் தளைத்து(சேர்ந்து) நிற்பது தளை எனப்படும்.
Ø  நேர்முன் நேரும், நிரைமுன் நிரையும் வருதல் ஒன்றி வருதலாகும். நேர்முன்நிரையும் நிரைமுன் நேரும் வருதல் ஒன்றாது வருதலாகும்
Ø  இத்தளைகள் நேரொன்றிய ஆசிரியத்தளை, நிரையொன்றிய ஆசிரித்தளை, இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, கலித்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை என ஏழு வகைப்படும்.
Ø  நேர் ஒன்றிய ஆசிரியத்தளையும் நிரை ஒன்றிய ஆசிரியத்தளையும் ஆசிரியப்பாவிற்கு உரியன. ஆகவேதான் இவற்றை ஆசிரியத்தளை என்றனர்
Ø  வெண்டளைகள் வெண்பாவிற்கு உரியன. எனவேதான் இவற்ற வெண்டளைகள் என்றனர்.
Ø  இவைபோலவே, கலிப்பாவிற்கு கலித்தளையும் வஞ்சிப்பாவிற்கு ஒன்றிய, ஒன்றாத வஞ்சித்தளைகளும் உரியன.
நேரொன்றிய ஆசிரியத்தளை
Ø  மாமுன் நேர் வருவதும், நாள் முன் நேர் வருவதும் நேர் ஒன்றிய ஆசிரியத்தளையாகும்.
Ø  எ.கா. கண்கள் காணும், மண் பார்க்கும்
நிரையொன்றிய ஆசிரித்தளை
Ø  விளமுன் நிரை வருவதும் மலர் முன் நிரை வருவதும் நிரை ஒன்றிய ஆசிரியத்தளையாகும்.
Ø  எ.கா. கனிகளை புசித்திடு, மரம் நடுவோம்
இயற்சீர் வெண்டளை
Ø  மாமுன்நிரை விளமுன்நேர் வருவதும் நாள்முன் நிரை, மலர்முன் நேர் வருவதும் இயற்சீர் வெண்டளையாகும்
Ø  எ.கா. முகிலினம் தூவிட, கண்கள் கவர்ந்திடும்
வெண்சீர் வெண்டளை
Ø  காய்முன் நேர் வருவதும் பூமுன் நேர் வருவதும் வெண்சீர் வெண்டளையாகும்.
Ø  எ,கா, காயாத வானம்,
கலித்தளை
Ø  காய்முன் நிரை வருவதும் பூமுன் நிரை வருவதும் கலித்தளையாகும்.
Ø  எ.கா. பூவாத மலர்வனம்
ஒன்றிய வஞ்சித்தளை
Ø  கனிமுன் நிரை வருவதும்  நிழல்முன் நிரை வருவதும்  ஒன்றிய வஞ்சித்தளையாகும்.
Ø  எ.கா. கண்கவர்ந்திடும் மலர்க்காட்சி
ஒன்றாத வஞ்சித்தளை
Ø  கனிமுன் நேர் வருவதும் நிழல்முன் நேர் வருவதும் ஒன்றாத வஞ்சித்தளையாகும்.
Ø  எ.கா. பூவாதது பூக்களோ
அடி
Ø  தளைகள் ஒன்றும் பலவும் தொடர்ந்து வருவது அடி எனப்படும்.
Ø  இது, குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என ஐந்து வகைப்படும்
·         குறளடி         இருசீரடி
·         சிந்தடி          முச்சீரடி
·         அளவடி         நாற்சீரடி
·         நெடிலடி        ஐஞ்சீரடி
·         கழிநெடிலடி          ஐஞ்சீரடிக்கு மேற்பட்டு வருவது
நான்கு பாக்குளுக்கும் அடியின் சிறுமை பெருமை
Ø  வெண்பாவிற்கு இரண்டடி
Ø  அகவல், வஞ்சிப்பாவிற்கு மூன்றடி
Ø  கலிப்பாவிற்கு நான்கடி
தொடை
Ø  அடிகள் தொடுத்து நிற்பது தொடை எனப்படும்.
Ø  இது, பல அடிகளிலேனும் பல சீர்களிலேனும் எழுத்துக்கள் ஒன்றி வருவது
Ø  மொனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை என்ற ஐந்தோடு, அந்தாதித்தொடை, செந்தொடை, இரட்டைத்தொடை சேர்ந்து தொடை எட்டு வகைப்படும்.
·         மொனை      முதல் எழுத்து ஒன்றி வருவது
·         எதுகை              இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது
·         இயைபு       இறுதி எழுத்து ஒன்றி வருவது
·         முரண்        சொல் (அ) பொருள் மாறுபட்டு வருவது.
·         அளபெடை    அளபெடுத்து வருவது
·         அந்தாதி      ஒரு சொல்லின் ஈற்றெழுத்து அடுத்த அடியின் முதலாய் வருதல்.
·         இரட்டைத்தொடை    அடி முழுவதும் வந்த சொல்லே திரும்பத்திரும்ப வருதல்.
·         செந்தொடை  மொனை முதலாக செல்லப்பட்டவை பொருந்தாது வருதல்
தொடை விகற்பம்
                     1    2    3    4
இணை               X    X
பொழிப்பு             X          X
ஒரூஉ               X               X
கூழை1               X    X    X
மேற்கதுவாய்         X          X    X
கீழ்க்கதுவாய்         X    X          X
முற்று               X    X    X    X
செய்யுளியல்
பா
Ø  இரண்டடி முதலாக அடிகாளால் ஆக்கப்பட்டு வெண்பா முதலான பெயர்களைப் பெற்று வருவது பா வாகும்.
Ø  இப்பா வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா என ஐந்து வகைப்படும்.
பாவினம்
Ø  வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற நால்வகைப் பாக்களோடு தாழிசை, துறை, விருத்தம் என்ற மூன்றும் தனித்தனியே உறழ பாவினம் பன்னிரண்டாகும்.
Ø  இவற்றோடு குறள் வெண்பாவின் இனமான செந்துறை, குறட்டாழிசை என்ற இரண்டையும் சேர்த்து பாவினம் பதினான்காகப் பகுக்கப்பட்டுள்ளது.
பாவும் ஓசையும் சாதியும்
Ø  வெண்பா        செப்பலோசை    அந்தனர்
Ø  ஆசிரியப்பா      அகவலோசை   வேந்தர்
Ø  கலிப்பா         துள்ளலோசை   வணிகர்
Ø  வஞ்சிப்பா       தூங்கலொசை   வேளாளர்
வெண்பாவின் பொது இலக்கணம்
Ø  செப்பலோசையில் அமையும்.
Ø  ஈற்றடி முச்சீராகவும் ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும்.
Ø  காய்ச்சீர், மா, விளச்சீர் ஆகியன பயின்று வரும்
Ø  வெண்டளைகளைப் பெற்று வரும் பிற தளைகள் வாரா.
Ø  ஒரு விகற்பத்தானும் பல விகற்பத்தானும் வரும்.
Ø  ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்ற நான்கில் ஒன்றினைப் பெற்று வரும்.
வெண்பா வகைகள்
Ø  குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா என ஐந்து வகைப்படும்.
Ø  மேற்சொன்ன பாக்களில் சிந்தியல் வெண்பாவை நேரிசைச் சிந்தியல், இன்னிசைச் சிந்தியல் என இரண்டாகப் பிரித்து ஆறு எனக் கூறுவாரும் உளர்.
வெண்பாவும் அடியளவும்
Ø  குறள் வெண்பா       இரண்டடி
Ø  சிந்தியல் வெண்பா    மூன்றடி
Ø  நேரிசை வெண்பா          நான்கடி
Ø  இன்னிசை வெண்பா   நான்கடி
Ø  பஃதொடை வெண்பா   ஐந்தடி முதல் பன்னிரண்டடி வரை
குறள் வெண்பா
Ø  வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று, இரண்டடியாய் பாடப்படுவது.
Ø  எ.கா,
பணமெனும் சேர்ந்தாரைக் கொல்லி இனமான
நட்பையும் கொன்று விடும்.
சிந்தியல் வெண்பா
Ø  வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று, மூன்றடியாய் பாடப்படுவது.
Ø  மூன்றடியாய் இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று வருவது நேரிசை சிந்தியல் வெண்பா என்றும் தனிச்சொல் இன்றி வருவது இன்னிசை சிந்தியல் வெண்பா என்றும் கூறுவர்.
Ø  எ.கா,
இது நேரிசை சிந்தியல் வெண்பா
இது இன்னிசை சிந்தியல் வெண்பா
நேரிசை வெண்பா
Ø  வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று, நான்கடியாய், இரண்டாம் அடி இறுதியில் தனிச்சொல் பெற்று வருவது.
Ø  எ.கா,
முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்
இன்னிசை வெண்பா
Ø  வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று, நான்கடியாய், தனிச்சொல் இன்றி வருவது.
Ø  மேலும் இரண்டாம் அடி இறுதியில் தனிச்சொல் பெற்று மூன்று விகற்பத்தால் வருவதும், மூன்றாம் அடி இறுதியில் தனிச்சொல் பெற்று இரண்டு விகற்பத்தால் வருவதும் இன்னிசை வெண்பா எனப்படும்.

எ.கா,
தெள்ளுதமிழ் நூலுள் திருவள் ளுவர்தந்த‌
ஒள்ளியநூ லாங்குறள்போல் உள்ளதுவே றுண்டோசொல்
வையம் புகழ்ந்து மதிக்கும் கருத்துடைத்தால்
செய்யதமிழ்ப் பாவும் சிறந்து.

பஃறொடை வெண்பா
Ø  வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று, ஐந்தடி முதலாய் பன்னிரண்டு அடி ஈறாகப் பாடப்படுவது.
Ø  இது தனிச்சொல் இன்றி பாடப்படுவது.
Ø  எ.கா,
வெண்பா இனம்
குறள் வெண்பாவின் இனம்
Ø  குறள்வெண் செந்துறை, குறட்டாழிசை என்பன குறள்வெண்பாவின் இனமாகும்.
குறள்வெண் செந்துறை
Ø  விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் பெற்று இரண்டடியாய் அளவொத்து வருவது.
Ø  சீர் வரையறை இல்லை. ஓரடியில் எத்தனை சீர்கள் வேண்டுமானும் பயின்று வரலாம். ஆயினும் அளவொத்து வரவேண்டும்.



எ.கா
கண்கள் காணும் காட்சி எல்லாம்
கண்கள் தேடிக் காண்ப தில்லை
கண்கள் மட்டும் ஊமை என்றால்
காணும் இன்பம் ஏது மில்லை         பா.செ.கோ. பா. 1
குறட்டாழிசை
இரண்டடியாய் நாற்சீரின் மிக்கு முதலடியை நோக்க இரண்டாம் அடி சீர் குறைந்து வருவதும். விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் இன்றி வரும் குறள்வெண் செந்துறையும் வேற்றுத்தளை விரவிய குறள்வெண்பாவும் எனக்  குறட்டாழிசை மூன்று வகையில் அமையும்.
பெண்ணியம் என்பது பெண்மையைப் போற்றுதல்
ஆண்களைத் தூற்றுதல் அல்லவே
வெண்டாழிசை
மூன்றடியாய் வேற்றுத்தளை விரவி வரும் சிந்தியல் வெண்பாவும் ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வரும் சிந்தியல் வெண்பாவும் வெண்டாழிசையாகக் கொள்ளப்படும்.
கணுக்களிலே உயிர்வளர்த்திடும் கடித்துண்டால் சுவைகொடுக்கும்
எறும்புமுதல் பலஉயிர்கள் இதைக்கண்டால் விரும்பிஉண்ணும்
பயிர்களிலே பணப்பயிராம் கரும்பு                 பா.செ.கோ. பா. 19

வெண்டுறை
நாத்துநடும் பெண்களைப்போல் ஆசைகளை நட்டுவைத்தேன் என்மனதில்
பூத்தேடி தேன்சேர்க்கும் வண்டுபோல நான்சேர்த்தேன் என்கனவை
ஒத்ரையிலே பூத்திருந்து வாசமிடும் பூப்போல
சொத்துசுகம் இல்லாமல் வாடுகிறேன் உன்நினைவில்
சொத்தாக நீவந்தால் கூடுமடி என்ஆயுள்
பூத்திருக்கும் தாமரையே தேன்சொரியும் பூச்சரமே
முத்தமிட்டு எனைச்சேர மேகமென வாராயோ                   பா.செ.கோ பா. 34

வெளி விருத்தம்
மூன்றடியானும் நான்கடியானும் முற்று பெற்று அடிதோறும் ஒரே தனிச்சொல்லைக் கொண்டு வருவது.
கண்ணில் பூக்கும் காதல் அல்ல - நட்பு
மண்ணில் வேராய் சேர்ந்து வாழும் - நட்பு
கண்ணில் காட்டும் காட்சி யல்ல - நட்பு
உன்னுற் தோன்றும் எண்ணம் தானே - நட்பு                     பா.செ.கோ. பா. 45

ஆசிரியப்பா
Ø  மூன்றடி முதலாகப் பாடப்படுவது.
Ø  நாற்சீர்களைப் பெற்று வருவது.
Ø  .அகவல் ஓசையைப் பெற்று வருவது.
Ø  எல்லை இல்லாமல் பாடப்படுவது
Ø  தன்தளையும் பிறத்தளையும் விரவி வருவது. அதாவது ஆசிரியப்பாவுக்குச் சிறப்பாக உரிய நேரொன்றாசிரியத் தளை (மாமுன்நேர்), நிரையொன்றாசிரியத் தளை (விளமுன் நிரை) மிகுந்து வரும். பிற தளைகளும் கலந்து வரும்.
Ø  ஆசிரிய உரிச்சீர் எனப்படும் ஈரசைச் சீர்கள் மிகுந்துவரும்.பிறசீர்களும் கலந்துவரும்.
Ø  நிரைநடுவாகிய வஞ்சியுரிசீர்கள் (கருவிளங்கனி, கூவிளங்கனி) வராது.
Ø  ஆசிரியப்பாவின் இறுதி அசை , , என், , , ஆய், அய் என்னும் அசைகளுள் ஒன்றாக இருத்தல் வேண்டும்.
ஆசிரியப்பாவின் வகைகள்
ஆசிரியப்பாக்கள், அவற்றில் இடம்பெறும் அடிகளின் தன்மைகளுக்கேற்ப நான்கு வகையாகப் பகுக்கப்படுகின்றன.
Ø  நேரிசை ஆசிரியப்பா
Ø  இணைக்குறள் ஆசிரியப்பா
Ø  நிலைமண்டில ஆசிரியப்பா
Ø  அடிமறிமண்டில ஆசிரியப்பா

நேரிசை ஆசிரியப்பா

Ø  ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று, ஈற்றயலடி (கடைசிக்கு முந்தைய அடி) மூன்று சீர்களையும் ஏனைய அடிகள் நான்கு சீர்களுடனும் வருவது நேரிசை ஆசிரியப்பாவின் இலக்கணமாகும்.
Ø  ஆசிரியப்பாக்களுள் பெரும்பாலானராலும் பாடப்படுவது இவ்வகையே
Ø  எ.கா,
தானே முத்தி தருகுவன் சிவனவன்

அடியன் வாத வூரனைக்

கடிவில் மனத்தால் கட்டவல் லார்க்கே

இணைக்குறள் ஆசிரியப்பா

Ø  முதல் அடியும் இறுதியடியும் நாற்சீராய் வருவது.
Ø  ஏனைய அடிகள் இடையிடையே உள்ள அடிகள் குறைந்து இரண்டு, மூன்று அல்லது நான்கு சீர்களைக் கொண்டு பாடப்படுவது.
Ø  எ.கா,
நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்

சாரச் சார்ந்து

தீரத் தீரும்

சாரல் நாடன் கேண்மை

சாரச் சாரச் சார்ந்து

தீரத் தீரத் தீர்பொல் லாதே

நிலைமண்டில ஆசிரியப்பா 

Ø  எல்லா அடிகளும் நான்கு சீர்களைக் கொண்டு அமைவது நிலைமண்டில ஆசிரியப்பாவாகும்
Ø  எ.கா,
தில்லை மூதூர் ஆடிய திருவடி

பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி

எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி

மண்ணும் விண்ணும் வானோர் உலகும்

துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்

என்னுடை இருளை ஏறத்துரந்தும்

அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்

குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்

மன்னும் மாமலை மகேந்திரம் அதனில்

சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்


அடிமறிமண்டில ஆசிரியப்பா

Ø  எல்லா அடிகளும் நாற்சீர்களைப் பெற்றிருத்தல்.
Ø  எந்த அடிகளை மாற்றிப் பாடினாலும் ஓசையும் பொருளும் மாறாதிருத்தல்.
Ø  எ.கா,
மாறாக் காதலர் மலைமறந் தனரே

யாறாக் கட்பனி வரலா னாவே

ஏறா மென்தோள் வளைநெகி ழும்மே

கூறாய் தோழியான் வாழு மாறே


ஆசிரியப்பா ,இனங்கள்

ஆசிரியத்தாழிசை

எனைத்துச்சீரானும் தம்முள் அளவொத்து மூன்றாடியாய்த் தனித்தும் ஒருபொருள்மேல் மூன்றடுக்கியும் வருவது

விரிசடை கடவுளைத் தினம்தினம் வழிபட
எரிசுடர் கிதிர்களும் நெருங்கிட பயப்படும்
சரவணன் பெயர்சொல நெருங்குமோ பிறவினை         பா.செ.கோ. பா. 53


ஆசிரியத்துறை
நண்பராய் வாழ்ந்தவர் காதலில் வீழ்வரோ?
கண்டதும் காதலில் வீழ்கிறார்
பின்பவர் நட்பெனும் போர்வையில் வாழ்ந்துதன்
உன்னதக் காதலை நட்புடன் சொல்கிறார்                  பா.செ.கோ. பா. 68

ஆசிரிய விருத்தம்

கழிநெடிலடி நான்காய் அளவொத்து வருவது.

மண்ணில் பூக்கும் ரோசாப் பூவோ?
      மெல்லப் போகும் தென்றல் காற்றோ?
கண்ணில் காணும் தெய்வம் தானோ?
      கால்கள் கொண்ட கன்னிப் பெண்ணோ?
கண்கள் தீண்ட நெஞ்சில் வந்தாள்
      காற்றில் வந்த வாசம் போல
கண்கள் நான்கும் மோதிக் கொள்ள
      காதல் என்று சொல்லிப் போனால்                  பா.செ.கோ. பா. 80

கலிப்பா

Ø  கலிப்பா என்பது தமிழில் உள்ள செய்யுள் வகைகளுள் ஒன்று.
Ø  இன்று கிடைக்கும் பழந்தமிழ் நூல்களுள் கலித்தொகை மட்டுமே கலிப்பாவினால் ஆன நூல் ஆகும்.
Ø  இதைவிடக் கலம்பகம் எனப்படும் நூல் வகையில் முதற் செய்யுளாகவும் கலிப்பாக்கள் காணப்படுகின்றன.
Ø  கலிப்பா துள்ளலோசையை அடிப்படையாகக் கொண்டது.
Ø  கலித்தளை பெற்று வருவது
Ø   இதில் கலித்தளையே அதிகமாக இருப்பினும் பிற வகைத் தளைகளும் வரலாம்.
Ø   கலிப்பா பொதுவாக அளவடி எனப்படும் நான்கு சீர்களைக் கொண்ட அடிகளைக் கொண்டிருக்கும்.
Ø  கலிப்பாவில் காய்ச்சீர் பெறும்பான்மையும் ஏனையவை சிறுபான்மையும் வரும்
Ø  மாச்சீரும் கூவிளங்கனி, கருவிளங்கனி ஆகிய சீர்களும் வாரா.

கலிப்பா உறுப்புகள்

Ø  பிறவகைப் பாக்கள் ஒரே உறுப்பாக அமைவது போல் இல்லாமல், கலிப்பா பல உறுப்புக்களைக் கொண்டு அமைகிறது.
Ø  இவ்வுறுப்புக்கள், 1. தரவு, 2.தாழிசை, 3. அராகம், 4. அம்போதரங்கம், 5. தனிச்சொல், 6. சுரிதகம் எனும் ஆறு ஆகும்.

கலிப்பா வகைகள்

Ø  கலிப்பா ஒத்தாழிசைக் கலிப்பா, வெண் கலிப்பா, கொச்சகக் கலிப்பா என மூன்று வகைப்படும்
Ø  இவற்றுள் வெண் கலிப்பா தவிர்ந்த ஏனைய இரண்டு வகைக் கலிப்பாக்களுக்கும் துணை வகைகள் உண்டு.
Ø  ஒத்தாழிசைக் கலிப்பாக்களுக்கு, நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா, வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா என மூன்று துணைப்பிரிவுகளும்
Ø  கொச்சகக் கலிப்பாவுக்கு, தரவுக் கொச்சகம், தரவிணைக் கொச்சகம், சிஃறாழிசைக் கொச்சகம், பஃறாளிசைக் கொச்சகம், மயங்கிசைக் கொச்சகம், என ஐந்து துணைப்பிரிவுகளும் உள்ளன.

கலிப்பா இனங்கள்
:
கலித்துறை
ஐஞ்சீரடி நான்காய் வருவது

வெள்ளைநிறம் என்றாலும் வெள்ளைசேலை தீண்டாத மல்லிகப்பூ
பிள்ளையான போதிலும் தன்னினத்தைத் சேர்க்காது நாய்இனங்கள்
பிள்ளையினை ஈன்றெடுத்து தான்அதனைத் தின்றுவிடும் பூனையினம்
பிள்ளைசெல்வம் என்றாலும் பெண்மகளைக் கொண்டுவிடும் பெண்ணினங்கள்   பா.செ.கோ. பா. 132

கலித்தாழிசை


உண்மை அன்பு பாசம்
மூன்றும் நட்பில் வீசும்
அண்ணன் தம்பி போல
அண்டி வாழ வைக்கும்
வண்ணம் நூறு ஆயின்
வான வில்லாய் சேர்க்கும்
கண்ணில் பார்வைப் போல
ஒன்றே காட்சி ஆவோம்
இன்னும் என்ன சொல்ல நட்பை.                         பா.செ.கோ. பா. 94

கலிவிருத்தம்

நாற்சீரடி நான்காய் வருவது

சின்னச் சின்ன தோல்வி வேண்டும்
வான்போல் வெற்றி சேர வேண்டும்
மின்னல் போல துன்பம் வேண்டும்
இன்பம் என்னைத் தீண்டி வேண்டடும்

வஞ்சிப்பா
19NOV
Ø  தூங்கலோசை பெற்று வரும்.
Ø  வஞ்சித்தளைகளைப் பெற்றுவரும்.
Ø  இருசீரடி, முச்சீரடியாய் அமையும்.
Ø  இச் சீர்கள் மூன்று அசைகள் கொண்டவையாகவோ அல்லது நான்கு அசைகள் கொண்டவையாகவோ இருக்கலாம்.
Ø  முச்சீராயின் அது வஞ்சிச்சீர் என்று அழைக்கப்படும், நிரையசையை இறுதியில் கொண்ட சீர்களாக இருத்தல் வேண்டும்.
Ø  நான்கு அசைகளைக் கொண்ட சீர்கள் ஆயின் அவையும் நிரை அசையில் முடியும் சீர்களாக இருத்தல் வேண்டும்.

வஞ்சிப்பா குறைந்த அளவாக மூன்று அடிகளைக் கொண்டிருக்கும்.

Ø  தேவையைப் பொறுத்து அடிகளின் எண்ணிக்கை இதற்கு மேல் எத்தனையும் இருக்கலாம்.
Ø  வஞ்சிப்பாக்களின் முடிவில் தனிச்சொல்சுரிதகம் ஆகிய உறுப்புக்களும் அமைந்திருக்கும்.
Ø  சுரிதகம் எப்பொழுதும் ஆசிரியச் சுரிதகமாகவே இருக்கும்.


வஞ்சிப்பாவின் வகைகள்

Ø  குறளடி வஞ்சிப்பா
Ø  சிந்தடி வஞ்சிப்பா

குறளடி வஞ்சிப்பா

குறளடி என்பது இரண்டு சீர்களைக் கொண்ட அடியைக் குறிக்கும்.
எனவே குறளடி வஞ்சிப்பாக்களில் ஒவ்வொரு அடியிலும் இரண்டு சீர்கள் காணப்படும்.


சிந்தடி வஞ்சிப்பா

சிந்தடி என்பது மூன்று சீர்களால் அமைந்த அடியைக் குறிக்கும்.
எனவே மூன்று சீர்களால் அமைந்த அடிகளைக் கொண்ட வஞ்சிப்பா சிந்தடி வஞ்சிப்பா ஆகும்.

வஞ்சிப்பாவினம்

வஞ்சித்தாழிசை

இருசீரடி நான்காய் மூன்றடுக்கி வருவது

அத்தான் என்றால்
முத்தம் தந்தேன்
முத்தம் வாங்கி
பித்தன் ஆனேன்

வீதி வந்தால்
போதை தந்தாள்
போதை பெற்று
பேதை ஆனேன்

பக்கம் வந்தாள்
வெக்கம் கொண்டாள்
வெக்கம் கண்டு
சொக்கிப் போனேன்

வஞ்சித்துறை

இருசீரடி நான்காய் தனித்து வருவது

தனித்தனி மலர்இனம்
இணைவதால் புதுமணம்
தனித்தனி இதயமும்
இணைவதே திருமணம்

வஞ்சி விருத்தம்

முச்சீரடி நான்காய் வருவது

விளையாத நிலம்கூட விலைபோகும்
சிலையான ஒருகல்லும் அழகாகும்
மலராத மலர்கூட மணம்வீசும்

மலைகூட ஒருநாளில் மடுவாகும்

Popular Feed

Recent Story

Featured News