Wednesday, May 13, 2015

ஐம்பெருங்காப்பியங்கள்

சிலப்பதிகாரம்

Ø  சிலப்பதிகாரம் சேர நாட்டவரான இளங்கோ அடிகளால்இயற்றப்பட்டது.
Ø  இதன் காலம் கி.பிஇரண்டாம் நூற்றாண்டு.
Ø  சோழ நாட்டின் தலை நகரமான பூம்புகாரைச் சேர்ந்த கோவலன் கண்ணகி ஆகியோரின் கதையைக் கூறும் நூல்.
Ø  கோவலன் ஒரு வணிகன்
Ø  கோவலனுடன் தொடர்பு கொள்கின்ற நடனமாதான மாதவி இன்னொரு முக்கிய கதாபாத்திரம் ஆகும்.
Ø  அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்,
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்,
Ø  ‘நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்’ என்கிற பதிக வரிகளில் முழுக் காப்பியத்தின் முக்கியச் செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Ø  சிலப்பதிகாரம் சிலம்பு- அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது.
Ø  சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்நூல் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில்ஒன்று.
Ø  இந்நூல் பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள் எனவும் வழங்கப்படுகிறது.
Ø  இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றனையும் காணலாம்.
Ø  கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.
Ø  ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர்.
Ø  இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்டது.
Ø  இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார்.
Ø  இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது.
Ø  சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள்.
Ø  நற்றிணைப் பாடல் கண்ணகி வரலாற்றைக் குறிப்பிடுகிறது.
Ø  புகார் நகரத்தில் சிவன்கோயில் இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
Ø  276 ஊர்களிலிருந்த சிவன்கோயில்களைக் குறிப்பிடும் தேவாரம் இதனைக் குறிப்பிடவில்லை.
Ø  எனவே புகார் நகரைக் கடல் கொண்டது தேவாரம் தோன்றிய 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தியது.
Ø  புகார் நகரத்தில் பலராமனுக்கும், கண்ணனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருந்ததைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
Ø  108 திருப்பதிகளைக் காட்டும் நாலாயிர திவ்வியப் பிரபந்தம்நூலில் இந்தக் கோயில் பற்றிய செய்தியே இல்லை. இதனாலும் சிலப்பதிகாரம் 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தியது என்பது உறுதியாகிறது.
Ø  கண்ணகி விழாவுக்குச் சென்றிருந்த இலங்கை மன்னன் கயவாகு தன் நாட்டு இலங்கையில் எழுப்பப்போகும் கோயிலிலும் எழுந்தருளும்படி, கண்ணகி தெய்வத்தை வேண்டிக்கொள்கிறான்.
Ø  இந்தக் கயவாகு காலம் கி.பி. 171-193.
Ø  எனவே இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
Ø  இளங்கோவடிகள்  இளவரசுப் பட்டத்தை விடுத்துத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.
Ø  தன் அண்ணன் செங்குட்டுவனுடன் மலை வளம் காணச் சென்றபோது, கண்ணகியைப் பற்றிய செய்தியை சீத்தலைச் சாத்தனார் எனும் புலவர் மூலமாக அறிந்தார் இளங்கோ.
Ø  கண்ணகியின் கற்பொழுக்கமும், பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் நேர்மையும் அரசியல் நடுநிலைமையும் அவரை மிகவும் கவர,மூவேந்தர்களுக்கும் உரிய தமிழின் உயர் காவியமாக சிலப்பதிகாரத்தை கவிபுனைந்தார் அவர்.
Ø  சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி மற்றும் கோவலனின் துணைவி மாதவி ஆகியோரது வரலாற்றை விவரிக்கின்றது.
Ø  இதன் இரட்டைக் காப்பியமாகத் திகழும் மணிமேகலை, ஆடலரசி மாதவியின் மகள் மணிமேகலையின் வரலாற்றை உரைக்கும் காவியமாகும்.
Ø  இதனை எழுதியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் எனும் புலவர் ஆவார்.
Ø  காப்பியங்களுக்கான இலக்கண அமைப்பு அனைத்தும் பொருந்தி வரும்படி இயற்றப்பட்ட காப்பியமாகும்.
Ø  காவிரி, வைகை முதலான ஆறுகளும் புகார், உறந்தை, மதுரை , வஞ்சி முதலான் நகரங்களும், குரவைக் கூத்து முதலிய கூத்துகளும், திருமால் முதலிய தெய்வங்களும், அடர்ந்து வளர்ந்த பெருங்காடுகளும் இந்நூலில் நன்கு வருணிக்கப்பட்டுள்ளன.
Ø  அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை பற்றிய செய்திகள் இதில் இடம் பெற்றுள்ளன.
Ø  சிலப்பதிகாரப் பதிகம் இதனை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனக் குறிக்கின்றது.
Ø  இடையிடையே உரைகளும் வரிப்பாட்டுகளும் கலந்து வந்துள்ளன.
Ø  பொருட்செறிவு, தெளிவான இனிய எளிய நடையுடன், அணிகள் பல பொதிந்த தமிழின் வளமான நூலாகும்.
Ø  இறையனார் களவியல் உரைகாரர், இளம்பூரனார் போன்ற உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பெருமை உடையது.
Ø  தமிழறிஞர்களால் மிகுதியாக ஆய்வுக்கு உட்பட்ட நூல் இதுவேயாகும்.
Ø  சிலப்பதிகாரம் , நூல் முகத்தில் உரைப் பாட்டினையும், கானல் வரி, வேட்டுவ வரி, ஆற்றுவரி, ஊசல்வரி, கண்புகுவரி என்னும் இசைப்பாட்டுகளும் நிறைந்தது.
Ø  புகார் காண்டம், மதுரைக் காண்டம் மற்றும் வஞ்சிக் காண்டம் எனும் உட்பகுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது.
கண்ணகி
Ø  பாட்டுடைத் தலைவி.
Ø  கோவலனது மனைவி.
Ø  களங்கமற்ற பெண்ணொழுக்கத்தின் எடுத்துக்காட்டாகவும் கற்புநெறியின் அளவுகோலாகவும் படைக்கப்பட்டவள்.
Ø  தெய்வம் தொழாள் கொழுனன் தொழுவாள் என வள்ளுவர் உரைத்த மங்கை.
Ø  கணவன் போற்றா ஒழுக்கம் புரிந்தபோதும் அதை மாற்றா உள்ள வாழ்கையே ஆனவள். கணவனுக்காக மதுரை மாநகரையே எரித்தவள்.
கோவலன்
Ø  பெரும் செல்வந்தர் மாசாத்துவானின் மகன்.
Ø  பிற ஒழுக்கங்கள் அனைத்தும் நிறைந்திருந்தாலும் மோகத்தால் அழிந்தவன்.
Ø  ஊழ்வினை காரணமாக உயிரிழந்தவன்.
மாதவி
Ø  பேரழகி
Ø  ஆடற்கலையின் ஆழமுணர்ந்தவள்.
Ø  கணிகையர் குலத்தோன்றலெனினும் கற்புநெறி வழுவாமல் கோவலனுக்கென்றே வாழ்ந்தவள்.
Ø  மணிமேகலையின் தாய்.

மணிமேகலை

Ø  மணிமேகலை ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று.

Ø  மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Ø  அறமெனப் படுவது யாதெனக்கேட்பின்

Ø  மறவாது இதுகேள் மன்னுயிர்க்கு எல்லாம்

Ø  உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்ட தில்லை.

குண்டலகேசி

Ø  தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று.
Ø  பௌத்தம் சார்ந்த நூல்.
Ø  உரை ஆசிரியர்கள் பலர் குண்டலகேசிப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள். பத்தொன்பது முழுமையான பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
Ø  தன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் பௌத்த துறவியாகி அச் சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணொருத்தியின் கதையே இக் காப்பியத்தின் கருப்பொருளாகும்.
வளையாபதி
Ø  தமிழில் ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று.
Ø  ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும்.
Ø  இது சமண சமயம் சார்ந்த ஒரு நூல்.
Ø  இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை.
Ø  இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை.
Ø  இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப் பட்டுள்ளன.
Ø  திருக்குறள், குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களிலிருந்து, கருத்துக்களை மட்டுமன்றிச் சொற்றொடர்களையும் ஆசிரியர் எடுத்தாண்டுள்ளார்.
சீவக சிந்தாமணி
Ø  திருத்தக்க தேவர் என்ற சமணப் புலவர் இயற்றியுள்ள 'சீவக சிந்தாமணி', தமிழ் இலக்கியத்திலுள்ள மகா காவியங்களுள்
Ø  ஐம்பெரும் காப்பியங்களுள் தலை சிறந்ததாக மதிக்கப்படுகிறது.
Ø  இது வாதீபசிம்ஹனின் க்ஷத்ர சூடாமணியைப் பின்பற்றியது.
Ø  அந்த மூல நூலோ, கி.பி898 இல் குணபத்திரன் எழுதிய உத்தரபுராணத்தை அடிப்படையாகக் கொண்டது.
Ø  சீவக சிந்தாமணிபத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்க வேண்டும்.
Ø  சிந்தாமணியைத் தந்த ஆசிரியர் சோழ வம்சத்தில் பிறந்தவர் என்று நச்சினார்க்கினியர் சொல்கிறார்.
Ø  சமண புராணங்களில் தொன்று தொட்டு நிலவிவரும் கதைகளை ஜனரஞ்சகமாகவும் இனக்கவர்ச்சியுடனும் கற்பனையுடனும் தமிழில் எழுத திருத்தக்க தேவர் விரும்பினார். நமக்கு இப்போது கிடைத்திருக்கும் சீவக சிந்தாமணி செய்யுள்கள் ஒவ்வொன்றும் நான்கு வரிகள் கொண்ட 3,141 செய்யுட்கள் உடையது.
Ø  ஆசிரியர் 2,700 செய்யுட்களையே செய்தார் என்று அறியப்படுகிறது.
Ø  ஏனைய 445 செய்யுட்களில் சில அவருடைய குருவாலும் வேறு சில வேறு யாரோ ஒருவராலும் எழுதப்பட்டவை.
Ø  இரண்டு செய்யுட்களை, இவை குருவால் எழுதப்பட்டவை என்று உரையாசிரியர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
Ø  ஏனைய செய்யுட்களை யார் எழுதியது என்ற விவரம் இல்லை.
Ø  பெரிய புராணம் எழுத சீவக சிந்தாமணி தூண்டுகோலாக இருந்திருக்கிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News