Saturday, May 2, 2015

ஐங்குறுநூறு - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

ஐங்குறுநூறு
  • ஐந்து+குறுமை+நூறு = ஐங்குறுநூறு.
  • எட்டுத் தொகையுள் மூன்றாவதாக வைத்துக் கூறப்படும் நூல்.
  • இது அகத்திணை நூல்.
  • மூன்றடி முதல் ஆறடிவரை பாடப்பட்ட நூல்.
  • இந்நூல் ஐநூறு பாடல்களைக் கொண்டுள்ளது.
  • மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்ற வரிசை முறையில் அமைக்கப்பட்டு ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள் வீதம் ஐநூறு பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
  • இவை முறையே ஓரம்போகி, அம்மூவன், கபிலர், ஓதலாந்தை, பேயன் ஆகிய ஐந்து ஆசிரியர்கள் பாடியுள்ளனர்.
                           திணை                பாடலாசிரியர்
                                              மருதம்                 ஓரம்போகி
                                              நெய்தல்                அம்மூவன்
                                              குறிஞ்சி                கபிலர்
                             பாலை                 ஓதலாந்தை
                                              முல்லை               பேயன்
        
                  மருதமோ ரம்போகி நெய்த லம்மூவன்
                               கருதுஞ் குறிஞ்சி கபிலன் – கருதிய
                               பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே
                   நூலையோ தைங்குறு நுறு.

  • இந்நூலைத் தொகுத்தவர் ‘புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்’.
  • தொகுப்பித்தவர் கோச்சேரமான் ‘யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை’.
  • இந்நூலில் ஒவ்வொரு தினையிலும் உள்ள 100 படல்கள் பத்துப்பத்துப் பாடல்களாகப் பிரிக்கப்பட்டுத் தனித்தனித் தலைப்புக்களின் கீழ்ப் பகுக்கப்பட்டுள்ளன.
  • இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இக் கடவுள் வாழ்த்து சிவனைப் பற்றியது.
  • இந்நூல், ஐந்து திணைகளிலும் தனித்தனியே நூறு நூறு பாடல்களால் பாடப்பட்ட, ஐந்து நூறுகளின் தொகுதி என்பதால் இதற்கு ஐங்குறுநூறு எனப்பட்டது.
  • இந்நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் உ.வே. சாமிநாதையர்.

Popular Feed

Recent Story

Featured News