Saturday, May 2, 2015

திரிகடுகம் - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

திரிகடுகம்

  • திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
  • இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்.
  • இவர் வைணவர்.
  • காலம் 5ஆம் நூற்றாண்டு
  • இது மருந்து பெயரில் அமைந்த நூல்.
  • திரிகடுகம் (திரி + கடுகம்)
  • திரி என்றால் மூன்று, கடுகம் என்றால் காரம்
  • திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி என்ற மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும்.
  • சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல, இந்நூலில் கூறப்படும் கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை தரும் என்பதால் திரிகடுகம் என்றனர்.
  • இந்நூலில் அமைந்த பாடல்கள் ஒவ்வொன்றும் மூன்று மூன்றுகருத்துகளைக் கூறுகின்றன.
  • இந்நூல், கடவுள் வாழ்த்து உட்பட 101(100+1) வெண்பாக்களைக் கொண்டுள்ளது.
  • கடைச்சங்க கலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.
  • இதன் ஒவ்வொரு பாடலிலும் `இம்மூவர்அல்லது `இம்மூன்றும்என்ற சொற்கள் அமைந்துள்ளன.
"காளாளன் என்பவன் கடன்படா வாழ்பவன்"
‘வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்’
‘நெஞ்சம் அடங்குதல் வீடாகும்’
‘நிறை நெஞ்சம் உடையானை நல்குரவு அஞ்சும்’
‘நட்வின் கொழுமுனை பொய் வழங்கின் இல்லாகும்’
‘கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி’
‘நல்விருந்து ஓப்பலின் நட்டாளாம் வைகளும்
இல்லறம் செய்தலின் ஈன்றதாய  - தொல்குடியின்
மக்கள் பெறலின் மனைக்கிழத்தி இம்மூன்றும்

கற்வுடையாள் பூண்ட கடன்’

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News