Saturday, May 2, 2015

பரிபாடல் - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL


பரிபாடல்
  • இசைப்பாட்டு வகையைச் சார்ந்த நூல்.
  • தமிழின் முதல் இசைப்பாடல் நூல்.
  • பாவகையால் பெயர்பெற்ற நூல்.
  • எட்டுத் தொகையுள் அகத்திற்கும் புறத்திற்கும் உரிய நூல்.
  • பாண்டிய நாட்டைச் சிறப்பிக்கவே பாடப்பட்ட நூல் பரிபாடல்.
  • பரிபாடலைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 13.
  • இதன் சிற்றெல்லை 25 அடி, பேரெல்லை 400 அடி..
  • இது, திருமால்(8), முருகன்(31), கொற்றவை(1), வையை(26), மதுரை நகர்(4) ஆகிய தலைப்புகளில் 70 பாடல்களைக் கொண்டுள்ளது.
                               திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
                               தொருபாட்டு காடுகிழாட் கொன்று – மருவினிய
                               வையை இருபத்தா(று) மாமதுரை நான்கென்ப
                               செய்ய பரிபாடல் திறம்.

  • ஆயினும் இன்று திருமால்(6), முருகன்(8), வையை(8) ஆகிய தலைப்புகளில் அமைந்த 22 பாடல்களே பழைய உரையுடக் கிடைக்கின்றன.
  • வேறுவகையால் இரண்டு பாடல்களும், சிதறிய நிலையில் சில பாடல்களும் கிடைத்திருக்கின்றன.
  • இவற்றுள் திருமாலுக்கு ஏழு பாடலும், முருகனுக்கு எட்டு பாடலும், வையைக்கு ஒன்பது பாடலும், மதுரையைப் பற்றி ஆறு பாடலும் சிதைவுகளாகக் கிடைக்கின்றன.
  • முதல் 22 பாட்டுக்கும் துறை, பாடியோர் பெயர், பாடப்படும் பாணி, பண் வகுத்தோர் ஆகியவை குறிக்கப்பட்டிருக்கின்றன. வேறு வகையால் கிடைக்கப்பெற்றவைகளுக்கு இக்குறிப்புகள் இல்லை.
  • இந்நூல் முழுமையும் கிடைக்கப் பெறாமையால் இதனைத் தொகுத்தோர் பெயரும் பிறவும் அறிய முடியவில்லை.
  • கிடைத்தவை மட்டும் வைத்து நோக்கும்போது நல்லந்துவனார் முதலாக 13 பேர் பாடி இருப்பதாகத் தெரிகிறது.
  • வையைப் பற்றிய பாடல்கள் அகம் சார்ந்தன.
  • கடவுள் வாழ்த்துப் பற்றிய பாடல்கள் புறம் சார்ந்தன.
  • பாடலைத் தொகுத்தவர் பெயர் தெரியவில்லை.
  • பரிபாடலுக்கு பரிமேலழகர் உரை இயற்றியுள்ளார்.
  • இதனை முதன் முதலில் தொகுத்தவர் உ.வே. சாமிநாதையர்.

Popular Feed

Recent Story

Featured News