Saturday, May 2, 2015

பதிற்றுப்பத்து - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

பதிற்றுப்பத்து
  • பத்து x பத்து = நூறு
  • பத்து+இன்+இற்று+பத்து = பதிற்றுப்பத்து
  • இன், இற்று என்பன சாரியைகள்.
  • சேர அரசர்கள் பத்துப் பேரை பத்து புலவர்கள் தலா பத்துப் பாடல்கள் வீதம் பாடியதால் இதற்குப் பதிற்றுப்பத்து எனப்பட்டது.
  • சேர அரசர்களைப் பற்றிப் பாடும் எட்டுத்தொகை நூல் பதிற்றுப்பத்து.
  • இந்நூல், தமிழ் மூவேந்தருள் சேர மன்னர்களின் செயல் நலன்கள் மட்டும் வரைந்து கூறுகிறது.
  • இந்நூலில், முதல் பத்துப் பாடல்களும் கடைசிப் பத்துப் பாடல்களும் கிடைக்கப்பெறவில்லை. ஏனைய 80 பாடல்களே இடம்பெற்றுள்ளன.
  • இதில் ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் ஒரு பதிகம் காணப்படுகிறது.
  • இந்நூலைத் தொகுத்த ஒருவரால் இப்பதிகம் பாடப்பட்டிருக்கலாம்.
  • இந்நூலுக்குப் பழைய உரை ஒன்றும் உள்ளது.
  • இந்நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் உ.வே. சாமிநாதையர்.
  • உரை இயற்றியவர் சு. துரைசாமிப் பிள்ளை
  • இப்போதுள்ள பதிற்றுப்பத்தில் எட்டு சேர மன்னர்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.
  • இரண்டாம் பத்து - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.
  • மூன்றாம் பத்து – அவர் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன்
  • நான்காம் பத்து – இமயவரம்பன் மகன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
  • ஐந்தாம் பத்து – அவன் தம்பி கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
  • ஆறாம் பத்து – அக்குட்டுவனுக்குப் பின்னவனான ஆடு கோட்பாட்டுச் சேரலாதன். (இவ் ஐவரும் சேர குடியில் உதியஞ்சேரல் என்பவன் வழிவந்தவர்கள்.)
  • ஏழாம் பத்து – அந்துவஞ்சேரல் இரும்பொறையின் மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன்
  • எட்டாம் பத்து – அவன் மகன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
  • ஒன்பதாம் பத்து – அவனுக்குப் பின் தோன்றிய குட்டுவன் இரும்பொறையின் மகன் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை (இம்மூவரும் அந்துவஞ்சேரல் இரும்பொறை என்ற சேரக்குடியில் வந்தவர்கள்.)
  • பதிற்றுப்பத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு பத்துப் பாடல்களின் ஈற்றிலும் ஒரு பதிகம் அமைந்துள்ளது.
  • இப்பதிகத்தில் பாடப்பட்ட மன்னன் பெயர், அவர் செய்த போர், கொடைத்திறம், பாடிய புலவர் பெயர், அவர் பெற்ற பரிசுப்பொருள் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.
  • பதிற்றுப்பத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு பாட்டிற்கும் அப்பாட்டில் வரும் சிறந்த தொடரால் பெயரிடப்பட்டுள்ளது.
  • இதில் நான்காம் பத்தில் உள்ள பாடல்கள் மட்டும் அந்தாதி முறையில் அமைந்துள்ளது.
  • ஒவ்வொரு பாட்டின் ஈற்றிலும் அப்பாடலின் துறை, வண்ணம், தூக்கு, பெயர் என்ற பாட்டியல் கூறுகளைப் பழைய உரையாசிரியர் குறித்துள்ளார்.
  • பதிற்றுப்பத்துப் பாடல்களை அனைத்தும் பாடண்திணையைச் சார்ந்தவை.
  • பரிபாடலைப் போலவே பதிற்றுப்பத்தும் இசையோடுப் பாடுதற்குரியது.
. எண்
நூல்
ஆசிரியர்
பாடுடைத் தலைவன்
1
முதல் பத்து
கிடைக்கப் பெறவில்லை
2
இரண்டாம் பத்து
குட்டூர் கண்ணனார்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
3
மூன்றாம் பத்து
பாலைக் கௌதமனார்
பல்யானைக் செல்கெழுங் குட்டுவன்
4
நன்காம் பத்து
காப்பியாற்றுக் காப்பியனார்
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
5
ஐந்தாம் பத்து
பரணர்
கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன்
6
ஆறாம் பத்து
காக்கைபாடினியார்(எ)  நச்செள்ளையார்
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
7
ஏழாம் பத்து
கபிலர்
நெல்வக் கடுங்கோ வாழியாதன்
8
எட்டாம் பத்து
அரிசில் கிழார்
கடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
9
ஒன்பதாம் பத்து
பெருங்குன்றூர் கிழர்
குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை
10
பத்தாம் பத்து
கிடைக்கப் பெறவில்லை


Popular Feed

Recent Story

Featured News