Saturday, May 2, 2015

பழமொழி - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

பழமொழி

  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இந்நூல், மூன்றுறையர் அல்லது மூன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது.
  • இதன் ஒவ்வொரு பாட்டிலும் ஒரு பழமொழி  கூறி,  நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு எனப் பெயர் பெற்றுள்ளது.
  • இதன் பழமொழிகள் அனைத்தும் இலக்கிய பழமொழிகள்.
  • தொல்காப்பியர் பழமொழியை ‘முதுசொல்’ என்றார்.
  • திருக்குறள், நாலடியார் நூல்களோடு ஒருங்கே வைத்து போற்றத்தக்க பெருமையுடையது.
  • இதன் காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டாகும்.
  • சங்ககால மன்னர்கள், புலவர்கள், மூவேந்தர்கள் பற்றிய குறிப்புகளைக் கொண்டுள்ளது.
  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் வரலாற்றுச் செய்திகளை இந்நூல் மிகுதியாகக் கூறுகிறது.
  • பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.
  • இந்நூலில் 34 தலைப்புகளின் கீழ் பாடல்கள் அமைந்துள்ளன.
  • அத் தலைப்புக்களும் அவற்றின் கீழ் வரும் பாடல்களின் எண்ணிக்கைகளும் கீழே தரபட்டுள்ளன.
  • கல்வி (10),     கல்லாதார் (6), அவையறிதல் (9), அறிவுடைமை (8), ஒழுக்கம் (9) இன்னா செய்யாமை (8), வெகுளாமை (9), பெரியாரைப் பிழையாமை (5), புகழ்தலின் கூறுபாடு (4), சான்றோர் இயல்பு (12), சான்றோர் செய்கை (9), கீழ்மக்கள் இயல்பு (17), கீழ்மக்கள் செய்கை (17), நட்பின் இயல்பு (10), நட்பில் விலக்கு (8), பிறர் இயல்பைக் குறிப்பால் உணர்தல் (7), முயற்சி (13), கருமம் முடித்தல் (15), மறை பிறர் அறியாமை (6), தெரிந்து தெளிதல் (13), பொருள் (9), பொருளைப் பெறுதல் (8), நன்றியில் செல்வம் (14), ஊழ் (14), அரசியல்பு (17), அமைச்சர் (8), மன்னரைச் சேர்ந்தொழுகல் (19), பகைத்திறம் தெரிதல் (26), படைவீரர் (16), இல்வாழ்க்கை (21), உறவினர் (9), அறம் செய்தல் (15), ஈகை (15), வீட்டு நெறி (13).
"பாம்பின் கால் பாம்பறியும்", "கண்டதைக் கற்க பண்டியதனாவான்"
‘அணியெல்லாம் ஆடையின் பின்’
‘இறைத்தோறும் ஊறும் கிணறு’
‘கடன் கொண்டும் செய்வார் கடன்’
‘கற்றலின் கேட்டலே நன்று’
குலவிச்சைக் கல்லாமல் பாகம் படும்’
குன்றின்மேல் இட்ட விளக்கு’
‘தனிமரம் காடாதல் இல்’
‘திங்களை நாய்க்குரைத் தற்று’
‘நிறைகுடம் நீர்த் ததும்பல் இல்’
‘நுணலும் தன் வாயால் கெடும்’
‘பாம்பறியும் பாம்பின்கால்’

‘முறைக்கு மூப்பு இளமைஇல்’

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News