Saturday, May 2, 2015

ஆசாரக் கோவை - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

ஆசாரக் கோவை

  • ஆசாரம் என்பது ஒழுக்கம்.
  • கோவை என்பது அடுக்கிக் கூறுதல்.
  • இதன் ஆசிரியர் பெருவாயில் முள்ளியார்.
  • இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர்.
  • இவர்து காலம் 5ஆம் நூற்றாண்டு.
  • இந்நூல் 100 பாடல்களைக் கொண்டுள்ளது.
  • ஒரு மனிதனின் ஒழுக்க நெறிகள் என்ன என்பது பற்றியும், அவன் நாள்தோறும் செய்ய வேண்டிய கடமைகள் என்ன என்பது பற்றியும் இந்நூல் கூறுகிறது.
  • குறள்வெண்செந்துறை, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா என பல வெண்பாக்கள் கலந்து வந்துள்ளன.
‘விருந்தினர் மூத்தோர் பசு சிறை பிள்ளை, இவர்க்கு ஊண் கொடுத்தலால் உண்ணாரே என்றும் ஒழுக்கம் பிழையா தவர்’
‘பகல்தெற்கு நோக்கார் இராவடக்கு நோக்கார்
பகற்பொய்யார் தீயுனுள் நீர்’
‘உமிழ்வும் உயர்ந்துழி ஏறலும் பாக்கும்
வகையில் உரையும் வளர்ச்சியும் ஐந்தும்

புணரார் பெரியார் அகத்து’

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News