Saturday, May 2, 2015

புறநானூறு - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

புறநானூறு

  • புறம்+நான்கு+நூறு = புறநானூறு.
  • இதனைப் ‘புறப்பாட்டு’, ‘புறம்’, ‘புறம்பு’, ‘தமிழ்க் கருவூலம்’ எனவும் வழங்குவர்.
  • 400 பாடல்களைக் கொண்ட இந்நூல், ஆசிரியப்பாவால் பாடப்பட்டுள்ளது.
  • இதனை 158 புலவர்கள் பாடியுள்ளனர்.
  • இதற்குக் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடியவர் ‘பாரதம் பாடிய பெருந்தேவனார்’.
  • இக்கடவுள் வாழ்த்து சிவனைப் பற்றியது.
  • இந்நூலைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் யாரெனத் தெரியவில்லை.
  • புறநானூற்றில் சில பாடல்களை ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
  • தமிழ்நாட்டில் பண்டைக் காலத்தில் வாழ்ந்த மூவேந்தர்கள், சிற்றரசர்கள், அமைச்சர்கள், சேனைத் தலைவர்கள், கடையெழு வள்ளல்கள், வீரர்கள், புலவர்கள், சான்றோர்கள் எனப் பலருடைய வரலாற்றுக் குறிப்புகளும், அக்கால மக்களின் வாழ்க்கை, நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் முதலியனவும் இந்நூலின் மூலம் அறிய முடிகிறது.
  • புறநானூற்றின் ஒவ்வொரு பாடலும் இன்னின்ன பொருளைப் பற்றிக் கூறுகிறது என்பதைத் திணை, துறை என்னும் பாகுபாடுகள் உணர்த்துகின்றன.
  • புறநானூற்றுப் பாடல்கள் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை என வழங்கப்பெறும் புறத்திணைகளுக்குரிய துறைப்பொருள்கள் கொண்டு அமைந்தவையாகும்.
  • திணை - ஒழுக்கம், நெறி.
  • துறை - திணையின் உட்புரிவு. (அவ்வத்திணையில் கூறப்படும் பொருளைப் பாகுப்படுத்திக் கூறுவது.)
  • இந்நூலில் 11 புறத்திணைகளும் 65 துறைகளும் கூறப்பட்டுள்ளன.

Popular Feed

Recent Story

Featured News