Saturday, May 2, 2015

கலித்தொகை - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

கலித்தொகை
  • இது கலிப்பாவால் ஆனநூல்
  • சங்க நூல்களில் ஓசை நயம் மிக்க பாட்டுகள் அமைந்த நூல்.
  • இது அகப்பொருள் சார்ந்த நூல்.
  • ‘கற்றறிந்தால் ஏத்தும் கலி’ என்ற சிறப்பைப் பெற்ற நூல்.
  • இதனைத் தொகுத்தவர் நல்லந்துவனார்.
  • தொகுப்பித்தவர் யார் எனத் தெரியவில்லை.
  • கலித்தொகைப் பாடல்கள் ‘பாலைக்கலி, குறிஞ்சிக்கலி, மருதக்கலி, முல்லைக்கலி, நெய்தல்கலி’ என்ற வரிசை முறையில் ஐந்துப் பிரிவுகளைக் கொண்டு அமைகிறது.
  • இதனைப் பாடியவர்கள் ஐவர் ஆவார்.
                   திணை         பாடியவர்                       பாடல் எண்ணிக்கை
                      பாலை         பெருங்கடுங்கோன்                                35
                      குறிஞ்சி        கபிலர்                                                       29
                   மருதம்         மருதன் இளநாகனார்                           35
                   முல்லை       சோழன் நல்லுருத்திரன்                      17
                   நெய்தல்        நல்லந்துனார்                                           33

  • இந்நூல் கடவுள் வாழ்த்துப் பாடலோடு சேர்த்து 150 பாடல்களைக் கொண்டுள்ளது.
  • கடவுள் வாழ்த்தைப் பாடியவர் நல்லந்துவனார்.
  • இக்கடவுள் வாழ்த்து சிவனைப் பற்றியது.
  • இனிய ஓசையோடு நாடக முறையில் காதல் நிகழ்ச்சிகள் அமைந்திருப்பதும் இந்நூலின் சிறப்பியல்பாகும்.
  • இதற்கு நச்சினார்க்கினியர் விரிவான உரை எழுதியுள்ளார்.
  • இந்நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் சி.வை. தாமோதரம் பிள்ளை.
  • இந்நூலை நல்லந்துவனால் என்ற புலவர் மட்டுமே பாடியிருக்கக் கூடும் என சி.வை. தாமோதரம் பிள்ளை, எஸ். வையாபுரிப்பிள்ளை, கே.என். சிவராஜப் பிள்ளை ஆகியோர் கருதுகின்றனர்.

Popular Feed

Recent Story

Featured News