Saturday, May 9, 2015

சீவக சிந்தாமணி - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL


திருத்தக்க தேவர் என்ற சமணப் புலவர் இயற்றியுள்ள 'சீவக சிந்தாமணி', தமிழ் இலக்கியத்திலுள்ள மகா காவியங்களுள்

ஐம்பெரும் காப்பியங்களுள் தலை சிறந்ததாக மதிக்கப்படுகிறது.

இது வாதீபசிம்ஹனின் க்ஷத்ர சூடாமணியைப் பின்பற்றியது.

அந்த மூல நூலோ, கி.பி. 898 இல் குணபத்திரன் எழுதிய உத்தரபுராணத்தை அடிப்படையாகக் கொண்டது.

சீவக சிந்தாமணி பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்க வேண்டும்.





சிந்தாமணியைத் தந்த ஆசிரியர் சோழ வம்சத்தில் பிறந்தவர் என்று நச்சினார்க்கினியர் சொல்கிறார்.

சமண புராணங்களில் தொன்று தொட்டு நிலவிவரும் கதைகளை ஜனரஞ்சகமாகவும் இனக்கவர்ச்சியுடனும் கற்பனையுடனும் தமிழில் எழுத திருத்தக்க தேவர் விரும்பினார். நமக்கு இப்போது கிடைத்திருக்கும் சீவக சிந்தாமணி செய்யுள்கள் ஒவ்வொன்றும் நான்கு வரிகள் கொண்ட 3,141 செய்யுட்கள் உடையது.

ஆசிரியர் 2,700 செய்யுட்களையே செய்தார் என்று அறியப்படுகிறது.

ஏனைய 445 செய்யுட்களில் சில அவருடைய குருவாலும் வேறு சில வேறு யாரோ ஒருவராலும் எழுதப்பட்டவை.

இரண்டு செய்யுட்களை, இவை குருவால் எழுதப்பட்டவை என்று உரையாசிரியர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.





ஏனைய செய்யுட்களை யார் எழுதியது என்ற விவரம் இல்லை.

பெரிய புராணம் எழுத சீவக சிந்தாமணி தூண்டுகோலாக இருந்திருக்கிறது.

Popular Feed

Recent Story

Featured News