Saturday, May 2, 2015

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

Ø  தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க காலத்தை அடுத்து வந்த காலத்தைச்சங்கம் மருவிய காலம்அல்லதுநீதி நூற் காலம்என்பர்.
Ø  சங்கம் மருவிய கால இலக்கியங்களைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், நீதி நூல்கள், அறநூல்கள் என்று அழைக்கப்படுகின்றன.
Ø  கீழ்க்கணக்குஎன்பது அடிகள் குறைந்த செய்யுட்களால் ஆகிய நூல்களைக் குறிக்கும்.
Ø  அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளையும் கொண்டு ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளால் ஆன வெண்பாக்களால் இயன்ற நூற்களைக் கீழ்க்கணக்கு என்பர்.
Ø  இதன் காலம் கி.பி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை உள்ள காலமாகும்.
Ø  இக்காலத்தில் ஆட்சி செய்தவர்கள் களப்பிரர்கள்.
Ø  இக்காலத்தை இருண்ட காலம் என அழைப்பர்.
Ø  தமிழ்நாட்டின் புறச்சமயமான சமணமும், பௌத்தமும் மேலோங்கி இருந்த காலம்.
Ø  இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை வச்சரணந்தியின் திராவிட சங்கத்தில் இயற்றப்பட்டவை என்றும் கூறுவர்.
Ø  பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் வெண்பா யாப்பில் அமைந்துள்ளது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

                நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
                பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
                இன்னிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே
                கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு
               
அறநூல்கள்                                                    -               11
அகநூல்கள்                                                     -               6
புறநூல்                                                              -               1

அறநூல்கள் - 11

நாலடியார்                                                        -               சமணமுனிவர்கள்      
நான்மணிக்கடிகை                                     -               விளம்பிநாகனார்        
இன்னா நாற்பது                                            -               கபிலர்
இனியவை நாற்பது                                     -               பூதஞ்சேந்தனார்          
திரிகடுகம்                                                        -               நல்லாதனார்  
ஆசாரக்கோவை                                           -               பெருவாயின்முள்ளியார்         
பழமொழி                                                         -               முன்றுரையரையனார்              
சிறுபஞ்சமூலம்                                             -               காரியாசன்      
ஏலாதி                                                                -               கணிமேதாவியர்          
திருக்குறள்                                                   -               திருவள்ளுவர்
முதுமொழிக்காஞ்சி                          -               கூடலூர் கிழார்   
          
புறநூல் -1

களவழி நாற்பது                                           -               பொய்கையார்               

அகநூல்கள் - 6

ஐந்திணை ஐம்பது                                       -               மாறன் பொறையனார்
ஐந்திணை எழுபது                                      -               மூவாதையார்
திணைமொழி ஐம்பது                               -               கண்ணன் சேந்தனார்
கார் நாற்பது                                                    -               கண்ணன் கூத்தனார்
திணைமாலை நூற்றைம்பது               -               கணிமேதாவியார்       
ஐந்திணை அறுபது () கைந்நிலை  -               புல்லங்காடனார்

மருந்துப் பெயரில் அமைந்த நூல்கள்- 3

திரிகடுகம்                                                        -               நல்லாதனார்  
சிறுபஞ்சமூலம்                                             -               காரியாசன்      
ஏலாதி                                                                                -               கணிமேதாவியர்

ஒழுக்கம் பற்றிக் கூறும் நூல்-1


ஆசாரக்கோவை                                           -               பெருவாயின்முள்ளியார்

Popular Feed

Recent Story

Featured News