Saturday, May 2, 2015

நான்மணிக்கடிகை - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

நான்மணிக்கடிகை

  • கடிகை என்பதற்கு "துண்டு" எனப் பொருள்படும். கட்டுவடம்(Neckless), ஆபரணம் என்றும் கூறுவர்.
  • நான்கு மணிகளின் துண்டுகள் இணைந்த மாலைபோல ஒவ்வொரு பாடலிலும் மணி போன்று நான்கு கருத்துகளுடன் பாடப்பெற்றுள்ளதால் இதனை ‘நான்மணிக்கடிகைஎன அழைக்கப்படுகிறது.
  • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இது ஒரு நீதி நூல்.
  • விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது.
  • இவ்வாசிரியர் `விளம்பிஎன்ற ஊரில் பிறந்த `நாகனார்ஆவார்.
  • இவர் வைணவர்.
  • நான்காம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.
  • கடவுள் வாழ்த்து நீங்கலாக 101 செய்யுட்கள் உள்ளன.
  • 'மதி என்னும் மாயவன்' என்ற கடவுள் வாழ்த்தும், 'கற்ப, கழிமடம் அஃகும்' (27), 'இனிது உண்பான் என்பான்' (58), என்னும் செய்யுட்களும் பஃறொடை வெண்பாக்களால் ஆனவை. ஏனைய அனைத்தும் நேரிசை, இன்னிசை, வெண்பாக்களால் ஆனவை. 
  • ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது.
  • இந்நூலில் அமைந்த ஒவ்வொரு பாடலிலும் நன்கு நான்கு கருத்துக்களைக் கூறுகின்றன.
  • ஜி.யு. போப் இரண்டு (7, 100) பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
‘இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்
வளமிலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்’
‘ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல்’
‘கொண்டானிற் சிறந்த கேளிர் பிறர்இல்’
‘மனைக்கு விளக்கம் மடபாள்
மடவாளுக்கு விளக்கம் புதல்வர்
புதல்வர்க்கு விளக்கம் கல்வி
கல்விக்கு விளக்கம் புகல்சார் உணர்வு(ஒழுக்கம்)’
‘நிலத்துக்கு அணி நெல்லும் கரும்பும்
குளத்துக்கு அணி தாமரை
பெண்ணுக்கு அணி நாணம்’
‘யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி’
‘இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக
தன்னொடு செல்வது வேண்டின் அறம்செய்க

வெல்வது வேண்டின் வெகுளி விடல்’

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News