Saturday, May 2, 2015

ஏலாதி - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

ஏலாதி

  • மருந்தால் பெயர் பெற்ற நூல்
  • `ஏலம் + ஆதிஏலத்தை முதலாக உடையது என்று பொருள்.
  • ஏலத்தை முதலாகக் கொண்ட ஆறு மருத்துவப் பொருட்கள் உடலுக்கு நன்மை தருவது போல, இந்நூலில் கூறப்படும் ஆறு நீதிக் கருத்துகள் மனத்திற்கு நன்மையைத் தருகிறது என்ற நோக்கில் இப்பெயர் பெற்றுள்ளது.
  • இந்நூலிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் `ஆறுநீதிக் கருத்துக்களைக் கூறுகின்றன.
  • ஏலம், இலவங்கம், நாககேசரம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறுவகை மருந்து கலவையே "ஏலாதி" ஆகும்.
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • சமண சமயத்தைச் சேர்ந்தவரான கணிமேதாவியார் என்பரால் எழுதப்பட்டது.
  • `கணிமேதாவிஎன்ற சொல், இவர் சோதிடத்தில் வல்லவர் என்பதை உணர்த்துகிறது.
  • திணைமாலை நூற்றைம்பது என்னும் அகப்பொருள் நூலை இயற்றியவரும் இவரே.
  • ஏலாதியில் 80 பாடல்கள் உள்ளன.
  • இந்நூல் மகடூஉ முன்னிலை அமைப்பைக் கொண்டது.
  • உணவு கொடுத்து ஆதரிப்போர் பெருவாழ்வு பெறுவர் என்பதை 21 பாடல்களில் கூறுகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News