Saturday, May 2, 2015

இன்னா நாற்பது - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

இன்னா நாற்பது

  • இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • கபிலர் என்னும் புலவர் இயற்றியது.
  • இவரது சமயம் சைவம்.
  • இவர் நான்காம் நூற்றாண்டைச் சார்ந்தவர்
  • இந்நூல் நாற்பது(40) பாடல்களைக் கொண்டுள்ளது.
  • இதனோடு கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்றும் அமைந்துள்ளது.
  • உலகத்தில் செய்யக் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறுகிறது.
  • துன்பம் கொடுக்கும் செயல்களைத் தொகுத்துக் கூறுகிறது.
  • ஒவ்வொரு பாடலிலும் நான்கு நான்கு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
  • ஒவ்வொரு கருத்து முடிவிலும் "இன்னா" என முடிகிறது.
"ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் இன்னா"
"உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பு இன்னா"
‘தீமையுடையார் அருகில் இருத்தல் இன்னா’
‘குழவிகள் உற்றபிணி இன்னா’
‘இன்னா பொருள் இல்லார் வண்மை புரிவு’
  • மொத்தம் 164 இன்னாச் செயல்கள் கூறப்பட்டுள்ளன.
  • நூலுக்குப் புறம்பான கடவுள் வாழ்த்திலும் கூட 'இன்னா', இனிதே என்னும் சொற்கள் அமைந்துள்ளன.
  • ஆசிரியர் தமது கடவுள் வாழ்த்தில் சிவபெருமான், பலராமன், திருமால், முருகன் ஆகியோரைக் குறித்துள்ளார். இதனால் இவர் சமயப் பொது நோக்கு உடையவர் என எண்ண இடமுண்டு.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News