Saturday, May 2, 2015

நாலடியார் - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

நாலடியார்

நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது.
இது சமண முனிவர்களால் இயற்றப்பட்டது.
(இது சமண முனிவர்களால் பாடப்பட்ட நானூறு வெண்பாக்களை உடையது. எண்ணாயிரம் சமண முனிவர்களால் பாடப்பட்ட பாடல்கள் அனைத்தும் வைகையாற்றில் இடப்பட்ட போது அவற்றில் நானூறு பாடல்களே எதிர்த்துக் கரையேறின என்ற செய்திகளும் உண்டு.)
நானூறு தனிப்பாடல்களைக் கொண்டுள்ளது.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் இது ஒரு தொகைநூல்.
இதன்கண் அமைந்த பாடல்கள் நான்கடிளைக் கொண்டதால் `நாலடிஎன்றும் நானூறு பாடல்களைக் கொண்டுள்ளதால்நாலடி நானூறுஎன்றும் வழங்கப்படுகின்றன.
'வேளாண் வேதம்' என்பது இதன் மற்றொரு பெயர்.
திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளைக் கொண்டுள்ளது.
இதனை இயற்றப்பட்ட காலம் கி.பி.250 ஒட்டிய காலமாகும்.
நாலடியார் பாடல்களின் எண்ணிக்கை:
கடவுள் வாழ்த்து           :               1 பாடல்
அறத்துப்பால்                 :               130 பாடல்கள் (13 அதிகாரங்கள்)
பொருட்பால்                   :               240 பாடல்கள் (24 அதிகாரஙள்)
காமத்துப்பால்        :               30 பாடல்கள் (3 அதிகாரம்)
மொத்தம்                          :               400 பாடல்கள் (40 அதிகாரங்கள்)
நாலடியாரில் மொத்தம் 40 அதிகாரங்கள், 12 இயல்கள் அமைந்துள்ளன.
திருக்குறளுக்கு அடுத்த படியாகப் போற்றப்படும் நீதி நூலாகத் திகழ்கிறது.
இந்நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஜி.யு.போப்.
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழியில் வரும் நாலும் என்பது நாலடியாரையும் இரண்டும் என்பது திருக்குறளையும் குறிப்பதாகும்.
‘செல்வம் சகட கால்போல் வரும்’,‘கல்வி கரையில கற்பவர் நாள்சில
‘ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, நீரிஒழியப், பால்உண் குருகின் தெரிந்து’
‘பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும் – வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு.’
குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல…… கல்வி அழகே அழகு.

திருக்குறளும் நாலடியாரும்

திருக்குறளுக்கு அடுத்த நிலையில்வைத்துப் போற்றப்பெறும் சிறப்பு வாய்ந்த அறநூல் நாலடியார்.
நூல் அமைப்பில் திருக்குறள், நாலடியார் இரண்டிற்கும் மிகுந்த ஒற்றுமை உண்டு.
திருக்குறள் சூத்திரம் போன்று இரண்டு அடிகளில் கருதிய பொருளைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது.
Ø  நாலடியாரோ, பொருள்களைத் தக்கஉதாரணம் காட்டி விளக்குவதோடு, கற்போர் உளம் கொளும்வகையில் தெளிவுபடவும் உரைக்கின்றது. இவ்வகையில் நாலடியாரைத் திருக்குறளின் விளக்கம் என்று கூறலாம்.
Ø  நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதிஎன வழங்கும் பழமொழியிலும், ‘பழகு தமிழ்ச்சொல் அருமை நால்இரண்டில்என உரைக்கும் தனிப்பாடல் பகுதியிலும் இந்த இரு அற நூல்களையும் ஒருசேர வைத்து எண்ணுதல் நோக்கத் தக்கது.
Ø  நான்கு அடி வெண்பாக்களால் இந்நூல் செய்யுட்கள் அமைந்திருத்தலின் இதனைநாலடிஎன்றும், ‘ஆர்என்னும் சிறப்பு விகுதியை இறுதியில் இணைத்து, ‘நாலடியார்என்றும் வழங்கி வருகின்றனர்.
Ø  குறள் என்றால்திருக்குறளைகுறிப்பதைப் போல, நாலடி வெண்பாக்களாலாகிய வேறு நூல்கள் பல தமிழில் இருப்பினும், ‘நாலடிஎன்றல் நாலடியாரையே குறிக்கும்.
Ø  நீதிகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன.
Ø  திருக்குறள் இரண்டு அடிகளில் சொல்ல, நாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது.
Ø  திருக்குறள் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்டது.
Ø  நாலடியாரோ சமண முனிவர் நானூறு பேர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும்.
Ø  நாலடியாரைத் தொகுத்து, அதிகாரம் வகுத்தவர் பதுமனார்.
Ø  முப்பாலாகப் பகுத்து, உரை கண்டவர் தருமர்.
Ø  மதிவரர் என்பவர் இந் நூற்கு அரும் பதவுரை இயற்றியுள்ளார்.
Ø  ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’, ‘சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது’, ‘பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்எனவரும் கூற்றுகள் இதன் பெருமையைத் திருக்குறளுக்கு இணையாக எடுத்தியம்புகின்றன.
Ø  பொருட்பாலில் பொது இயல், பல் நெறி இயல் என்பனஓர் அதிகாரமே ஓர் இயலாகக் குறிக்கப்படுபவை.
Ø  தருமர் இறுதி மூன்று அதிகாரங்களையும் காமத்துப்பால் எனக் கொண்டு, ‘பொதுமகளிர்என்னும் ஓர் அதிகாரத்தை (38) ‘இன்ப துன்பஇயல்என்றும், ஏனை இரண்டு அதிகாரங்களையும்(39, 40) ‘இன்ப இயல்என்றும் கொள்வர்.
Ø  வேறு சில உரைகாரர் இறுதி அதிகாரமாகியகாமம் நுதல் இயல்ஒன்றை மட்டுமே காமத்துப் பாலுக்கு உரியதாகக் கொண்டுள்ளனர்.
Ø  காமத்துப் பாலின் இன்ப இயல் பாடல்களுக்குத் துறைக்குறிப்புகளும் உரைகளில் காணப்படுகின்றன.
Ø  இந்நூல் பாடல்களில் ஆடூஉ முன்னிலை(52) அதிகமாகவும், மகடூஉ முன்னிலை (6) மிகக் குறைவாகவும் வந்துள்ளன.
Ø  இந்நூலில் முத்தரையர்கள் பற்றிய குறிப்புகள்(200, 296)உள்ளன. ஆகையால் இதன் காலம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதலாம்.

Ø  இந்நூலினை இளம்பூரணர் முதலிய தொல்காப்பிய உரைகாரரும் பரிமேலழகரும் அடியார்க்கு நல்லாரும் தம்தம்உரைகளில் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News