Saturday, May 9, 2015

முதுமொழிக் காஞ்சி - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

முதுமொழிக் காஞ்சி

  • காஞ்சி என்ற புறத்திணையால் பெயர் பெற்ற நூல்.
  • நிலையாமையைப் பாடும் நூல்.
  • ஐந்தாம் நூற்றாண்டைச் சர்ந்த நூல்.
  • மதுரைக் கூடலூர்க் கிழார் என்பவர் இயற்றியது.
  • ஐங்குறு நூற்றைத் தொகுத்தவரும் இவரே.
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் மிகச் சிறிய நூல்.
  • இந்நூலில் மொத்தம் பத்துப் படல்கள் அமைந்துள்ளன
  • அவை ஒவ்வொன்றும் பத்து அடிகளைக் கொண்டுள்ளன.
  • பத்து அடிகளைக் கொண்ட ஒவ்வொரு பாடலுக்கும் சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப் பத்து, துவ்வாப் பத்து, அல்ல பத்து, இல்லைப் பத்து, பொய்ப் பத்து, எளிய பத்து, நல்கூர்ந்த பத்து, தண்டாப் பத்து எனத் தனித்தனிப் பெயர்கள் வழங்கப்படுகின்றன.
  • கல்வியைக் காட்டிலும் ஒழுக்கமே சிறந்தது எனக் கூறுகிறது.
  • இது குறள்வெண் செந்துறை யாப்பால் ஆனது.
  • இந் நூலில் அமைந்துள்ள ஒவ்வொரு பாடலும ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் என்றே தொடங்குகின்றன.
"ஆர்கலியுகத்து மக்கட்கெலாம்,ஒதலில் சிறந்தன்று ஒழுக்கம்"
‘வண்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை’
‘மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை’
‘இளமையிற் சிறந்தன்று மெய்பிணி இன்மை’
‘இசையிற் பெரியதோர் எச்சம் இல்லை’
‘ஈரம் உடைமை ஈகையின் அறிப’
‘நலன் உடைமையின் நாணு சிறந்தன்று’
‘குலன் உடைமையின் கற்பு சிறந்தன்று’
‘அறியாத தேயத்து ஆசாரம் பழியார்’

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News