Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 16, 2015

குப்பைமேனியின் மகத்துவங்கள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
குப்பைமேனியின் மகத்துவங்கள்

  • இலைச் சூரணத்தைப் பொடிபோல் மூக்கில் இட தலைவலி நீங்கும்.
  • இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் உடலில் பூசி சற்றுநேரம் கழித்துக் குளிக்கத் தோல் நோய் அனைத்தும் தீரும்.
  • வயற்றில் இருக்கும் குடற்பூச்சிகளை போக்கவல்லது. இதன் வேரை கிராம் 200 மி.லி நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள் அனைத்தும் வெளியேறும்.
  • குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும்.
  • குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.
  • குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும்.
  • குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து, அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும்.
  • குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடிகள் காணாமல் போகும்.
  • குப்பைமேனி இலையை அரைத்து முகத்தில் பூசினால் முகம் அழகு கொடுக்கும்.

குப்பைமேனி துவையல்

முதலில் குப்பைமேனி இலைகளை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு வாணலியில் எண்ணைய் விட்டு கொஞ்சம் கடுகு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

பின்பு நறுக்கிய இலைகளை வாணலியில் போட்டு நன்கு தாளித்து பின்பு சிறிது நீருடன் மிக்சியில் அடித்தால் குப்பைமேனி துவையல் ரெடி.
பயன்கள்

  • இதை சாப்பிட்டு வந்தால் தீராத தலைவலியும், பக்கவாத நோய்களும் பறந்துவிடும்.
  • மூல நோயிற்கு இந்த துவையல் ஒரு சிறந்த மருந்து. மேலும் நாளடைவில் மூலம் குறைய வாய்ப்பு உண்டு.

குப்பைமேனி கஷாயம்

  • வாணலியில் குப்பைமேனி இலைச்சாற்றுடன் சம அளவு உப்பைக் கரைத்து வைத்து, சுண்டக் காய்ச்ச வேண்டும்.
  • இதில் உப்பு 'பூர்த்து' மிகுந்து விடும். இந்த உப்பை தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.
  • இதன் பிறகு குப்பைமேனியில் இருந்து வடிந்த நீருடன் சிறிது மிளகு சேர்த்து கொதிக்க விட்டால் குப்பை மேனி கஷாயம் தயார்.

பயன்கள்

  • இந்த கஷாயத்தை தினசரி இரு வேளை சாப்பிட்டு வந்தால், வாயு மற்றும் அஜீரண கோளாறுகள் நீங்கும்.
  • நெஞ்சுக்கோழையை நீக்கும், இருமலைக் கட்டுப்படுத்தும், மேலும் விஷக்கடி போன்ற நோய்களை குணப்படுத்தும்

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top