Thursday, July 16, 2015

ஜவ்வரிசியின் மருத்துவ குணங்கள்

உடலுக்கு குளிர்ச்சி தரும் ஜவ்வரிசியின் மருத்துவ குணங்கள்
  • ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட் அதிகளவில் உள்ளது. 100 கிராம் ஜவ்வரிசி, 94 கிராம் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் உள்பட 355 கலோரிகள் வரை கொடுக்கிறது. அரிசியுடன் ஜவ்வரிசியும் சேர்த்துச் சாப்பிட்டால், அது சூடான உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும். 
  • மேலும் அதில் உள்ள கார்போஹைட்ரேட்டும் உடலுக்கு அதிக சத்தைக் கொடுக்கிறது. இந்திய பாரம்பரியமிக்க உணவாகக் கருதப்படும் ஜவ்வரிசி, சில மூலிகை மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஜவ்வரிசி கொண்டு பல வகையான உணவுகளை நாம் தயாரிக்க முடியும். 
  • இதில் புரதம், வைட்டமிகள் குறைவாக இருப்பதால், எந்த வகையான உணவுடனும் அதைச் சேர்த்து சத்தான உணவாக மாற்றலாம். சிலர் இதைக் கிச்சடியாகவும் செய்து சாப்பிடுவார்கள். ஜவ்வரிசியில் செய்யப்பட்ட உணவைக் காலையில் எடுத்துக் கொண்டால், அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். 
  • நோய் வாய்ப்பட்டவர்களுக்கு ஒரு சரியான மாற்று உணவாக ஜவ்வரிசியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News