Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, August 2, 2015

கணித மேதை ராமானுஜம்

கணித மேதை ராமானுஜம்

சீனி வாச ஐயங்கார்
      கோமளத் தம்மாள் தம்பதியர்
மணிவ யிற்றில் பிறந்தவரே
      கணித மேதை ராமாநுஜம்

ஏழைக் குடும்பம் அவர்குடும்பம்
      இன்னல் பலவும் கண்டனவே
வாழும் வழிகள் இல்லாமல்
      பலஊர் சென்று வாழ்ந்தனரே.

பள்ளிக் கல்வி கற்றஅவர்
      கல்லூ ரிக்குப் போனதில்லை
பள்ளிப் படிப்பே போதுமேன
      பாதியில் நிறுத்தி விட்டனரே.

பத்து வயது ஆனதுமே
      கணித வல்லமை பெற்றுவிட்டார்.
சித்தர் போல சிறுவயதில்
      சிந்தையில் அறிவைப் பெருக்கிவைத்தார்

அண்டை வீட்டு அண்ணனிடம்
      கணக்குப் புத்தகம் கடன்வாங்கி
பன்னி ரண்டு வயதினிலே
      இளங்கலைப் பாடம் கற்றுவிட்டார்.

சான்றோர் உதவி இல்லாமல்
      கணிதக் கல்வி கற்றதுடன்
பதிமூன்று வயதினிலே
      தேற்றங் கள்பல கண்டிறிந்தார்

சான்றோர் கண்ட கணிதவியல்
      சலைக்கா மல்அவர் கற்றதனால்
எண்கோட் பாட்டைக் கண்டறிந்து
      இயற்பியல் துறைக்கு வலுசேர்த்தார்.

சுழியத் திற்கு மதிப்புஉண்டு
      என்ற உண்மை கண்டறிந்து
சுழியம் ஆகிப் போகாமல்
      எண்க ணிதமவர் காத்துநின்றார்.

முப்பத் துமூன்று வயதுவரை
      வறுமையில் வாடிய ஒருமனிதன்
முப்பத் துமூன்று கோடியுகம்
      அழியாப் புகழைப் பெற்றுவிட்டார்

வறுமை காரணம் காட்டிபலர்
      சாதனை செய்வதை நிறுத்திடுவர்
வறுமை நிழலில் வாழ்ந்தஅவர்
      சாதித்து உலகை வென்றுவிட்டார்.

கடைசி மூச்சு உள்ளவரை
      கணிதம் மட்டும் சுவாசித்த
கணித மேதை ராமாநுஜம்
      காலம் கடந்து சென்றனரே.

நாமும் கணிதத் துறையினிலே
      சாதனை பலவும் கண்டிடுவோம்
நமது பெருமை உலகிற்கு
      நிலைநாட்டிநாம் வாழ்ந்திடுவோம்.

Popular Feed

Recent Story

Featured News