Friday, August 7, 2015

நெகிழியின்(பிளாஸ்டிக்) தீமைகள்

நெகிழியின்(பிளாஸ்டிக்) தீமைகள்
  • நெகிழிப் பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகளில் மறு சுழற்சி செய்யும் போதும், உருகும்போதும் வெளியேறும் வாயுக்கள் நச்சுத் தன்மை உடையதால் ஊழியர்கள், அருகில் வசிக்கும் மக்கள் ஆகியோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
  • தோல்நோய் முதல் புற்று நோய் வரை பல நோய்களுக்குக் காரணமாகின்றது. சிலருக்கு தொட்டால் கூட ஒவ்வாமை என்ற நோய் ஏற்படுகிறது.
  • மூச்சுக் குழாய் பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, நரம்புத்தளர்ச்சி, ரத்த, சிறுநீரகச் செயல் குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு போன்றவை ஏற்படக் கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன.
  • நெகிழி உறைகள்சுற்றப்பட்டு வரும் உணவுப் பொருட்களான சாக்லேட்டு, பால்கோவா போன்றவற்றில் நெகிழி வேதிப் பொருளான பென்சீன் வினைல் குளோரைடு கலந்து விடுகிறது. இதனால் புற்று நோய் ஏற்படக் காரணமாகிறது.
  • எளிதில் மட்காத, சிதையாத நெகிழிப் பொருட்களால் கழிவுக் குழாய்கள், சக்கடைகள் ஆகியவைகளில் அடைப்பு ஏற்பட்டு, தேங்கி துர்நாற்றம், கொசுவளர்ப்பு, நோய்கள் ஆகியவை ஏற்படக் காரணமாகின்றன.
  • கால்வாய்களிலும் அடைத்துக் கொள்வதால் நீர் வழிகள் அடைபட்டு மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன.
  • மனிதர் உண்டுவிட்டு கீழே போடும் நெகிழிப் பொட்டலங்களைத் தின்னும் விலங்குகளின் உணவுக் குழாய்கள் பாதிக்கப்பட்டு அவைகள் இறக்க நேரிடுகின்றன.
  • மட்காத நெகிழிப் பொருள்கள் வேளாண் நிலங்களில் தங்கி அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகிறது. பயிர் வளர்ச்சியையும் பாதிக்கிறது.
  • கடற்கரை ஓரம், கடலில் எரியும் நெகிழிப் பொருள்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கும், வனப்பகுதியில் எறியப்படுபவை வனவாழ் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவித்து அழித்துவிடக் கூடியவை.
  • ரெசின் துண்டுகள் மீன் முட்டைகள் போல் இருப்பதாலும் பாலித்தீன் பைகள் ஜெல்லி மீன்கள் போல இருப்பதாலும் அவற்றை இரையாக நினைத்து, கடல் பறவைகள், சீல்கள், கடல் சிங்கம், கடல் ஆட்டர், டால்பின், கடல் பன்றி, ஆமிகள் போன்றவை அவற்றை விழுங்கி, குடல்களில், மூச்சுக் குழாய்களில் சிக்கி இறந்து விடுகின்றன.
  • நெகிழிப் பொருட்களை எரிப்பதால் டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளிவருகிறது. இது கூடுதல் தீமையை தான் தருகின்றன. மறுசுழற்சி, கழிவு மேலாண்மை போன்றவை பயனற்றவையாகவே கருதப்படுகின்றன. பிளாஸ்டிக் பைகள் மக்குவதற்கு ஆகும் காலமோ 100-1000 ஆண்டுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் – எக்காலத்திலும் அழியாது.
  • எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது. நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்……பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா ???
  • அனைத்துமாற்றங்களும்நம்வீட்டிலிருந்துநம்மிடமிருந்தேதொடங்குகின்றன

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News