Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, August 6, 2015

வழுவுச் சொற்கள் - திருத்தம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
வழுவுச் சொற்கள்                                  திருத்தம்
அங்கிட்டு
அங்கு
அடமழை
அடைமழை
அடமானம்
அடைமானம்
அடிச்சுட்டா
அடித்து விட்டாள்
அத்தினி
அத்தனை
அப்ளம்
அப்பளம்
அம்மாசி
அமாவாசை
அமர்க்களம்
அமர்க்களம்
அவரக்காய்
அவரைக்காய்
அவுங்க
அவர்கள்
அவுந்து
ஆவிழ்ந்து
அவைகள்
ஆவை
அறுவறுப்பு
அருவருப்பு
ஆச்சு
ஆயிற்று
ஆத்தங்கரை
ஆற்றங்கரை
ஆத்திற்கு
ஆற்றிற்கு
ஆத்துக்கு
ஆகத்துக்கு
இங்கிட்டு
இங்கு
இடதுப்பக்கம்
இடப்பக்கம்
இத்தினி
இத்தனை
இம்பாங்க
என்பார;கள்
இரும்பல்
இருமல்
இவையன்று
இவையல்ல
இளனி
இளநீh;
இறச்சி
இறைச்சி
இன்னும்
இன்னம்
உடம்படிக்கை
உடன்படிக்கை
உடமை
உடைமை
உருச்சி
உரித்து
உளுந்து
விழுந்து
ஊர்சுத்து
ஊகிர்சுற்று
எடக்கு
இடக்கு
எண்ணை
எண்ணெய்
எலிமிச்சம்பழம்
எலுமிச்சம்பழம்
ஒயர்வு
எயர்வு
ஓட்டரை
ஓட்டடை
ஓம்;பது
ஓன்பது
ஓருவள்
ஒருத்தி
கட்டிடம்
கட்டடம்
கடப்பாறை
கடப்பாரை
கண்ணாலம்
கல்யாணம்
கத்திரிக்காய்
கத்தரிக்காய்
கருவேப்பிலை
கறிவேப்பிலை
கவுனி
கவனி
கறம்
கரம்
காக்கா
காக்கை
காத்து
காற்று
காவா
கால்வாய்
கெடிகாரம்
கடிகாரம்
கெடைக்காது
கிடைக்காது
கைமாறு
கைம்மாறு
கொரங்கு
குரங்கு
கோர்த்து
கோத்து
கோர்வை
கோவை
சந்தணம்
சந்தனம்
சம்மந்தம்
சம்பந்தம்
சாம்பராணி
சாம்பிராணி
சாம்பிள்ளை
சாண்பிள்ளை
சாயங்காலம்
சாயுங்காலம்
சிகப்பு
சிவப்பு
சிலது
சில
சிலவு
செலவு
சும்மாயிரு
சும்மாவிரு
சுவறு
சுவர்
தங்கச்சி
தங்கை
தமயன்
தமையன்
தவக்களை
தவளை
தாவாரம்
தாழ்வாரம்
திரேகம்
தேகம்
தின்னீர்
திருநீறு
துகை
தொகை
துடங்குதல்
தொடங்குதல்
துவக்கம்
தோடக்கம்
துறவுகோல்
திறவுகோல்
தொந்திரவு
தொந்தரவு
நஞ்சை
நன்செய்
நாகரீகம்
நாகரிகம்
நெனவு
நினைவு
நேத்து
நேற்று
நோம்பு
நோன்பு
பசும்பால்
பசுப்பால்
பதட்டம்
பதற்றம்
பயிறு
பயறு
பாவக்காய்
பாகற்காய்
புட்டு
பிட்டு
புடவை
புடைவை
பேதம்
பேதைமை
பொடைத்தாள்
புடைத்தாள்
போறும்
போதும்
மணத்தக்காளி
மணித்தாக்காளி
மாங்காமரம்
மாமரம்
மானம்
வானம்
முழித்தான்
விழித்தான்
முன்னூறு
முந்நூறு
வண்ணாத்திப் பூச்சி
வண்ணத்துப்பூச்சி
வயசு
வயது
வலது பக்கம்
வலப்பக்கம்
வெங்கலம்
வெண்கலம்
வெட்டிப்பேச்சு
வெற்றுப் பேச்சு
வெண்ணை
வெண்ணெய்
வெளையாட்டு
விளையாட்டு
வேர்வை
வியர்வை

வழுவுச் சொற்களுக்கு எடுத்துக்காட்டுகள்:
அப்பசி மாசம் அடமழை இம்பாங்க - வழுவு
ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள் - திருத்தம்
கோளி முட்டை தாவாரத்தில் உருண்டது - வழுவு
கோழி முட்டை தாழ்வாரத்தில் உருண்டது - திருத்தம்
வெளையாட்டிலேயே கண்ணா இருக்காதே - வழுவு
விளையாட்டிலேயே கண்ணாக இருக்காதே - திருத்தம்
நஞ்செய் எல்லாம் புஞ்சையாய் வறண்டு போச்சு - வழுவு
நன்செய் எல்லாம் புஞ்செய்யாய் வறண்டு போயிற்று - திருத்தம்
சென்னைக்கு அருகாமையில் இருப்பது கன்னியாகுமாரி அல்ல - வழுவு
சென்னைக்கு அருகில் இருப்பது கன்னியாகுமாரி அன்று - திருத்தம்
சிகப்பு மணிகளைக் கயறில் கோர்த்து வை - வழுவு
சிவப்பு மணிகளைக் கயிற்றில் கோத்து வை - திருத்தம்
காத்தாடி வுட்ட மாஞ்சா கவுறு கழுத்தை அறுத்துப் புடிச்சு - வழுவு
காற்றாடி விட்ட மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்துவிட்டது - திருத்தம்
சித்த நாழி உக்காரு, இந்தா வந்துடறேன் - வழுவு
சிறிது நேரம் உட்கார், இதோ வந்து விடுகிறேன் - திருத்தம்
விடிகால ஏந்திருச்சி வௌ;ளாம பாக்க போனேன் - வழுவு
விடியற்காலை எழுந்திருந்து வேளாண்மை பார்க்கப் போனேன் - திருத்தம்
மானம் பாத்த பூமியிலே மழ பெஞ்சு பல வருசமாச்சு - வழுவு
வானம் பார்த்த பூமியிலே மழை பெய்து பல ஆண்டுகளாயின - திருத்தம்
கல்லணை தமிழரின் கட்டடக் கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டு - வழுவு
கல்லணை தமிழரின் பொறியியல் திறனுக்கு எடுத்துக்காட்டு - திருத்தம்
இது பொது வழி அல்ல - வழுவு
இது பொது வழி அன்று - திருத்தம்
எண்ணை விலை அதிகரித்து விட்டது - வழுவு
எண்ணெய் விலை அதிகரித்து விட்டது - திருத்தம்
பெரியவர் தன் கைத்தடியைத் தேடினாh; - வழுவு

பெரியவர் தம் கைத்தடியைத் தேடினாh; - திருத்தம்

Post Comments

1 comment:

  1. தொடக்கம்.. எப்படி தோடக்கம் ஆகும்.

    ReplyDelete

Popular Feed

Recent Story

Featured News

Back To Top