Thursday, August 6, 2015

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளறிதல் (ர, ற வேறுபாடு) / TNPSC பொதுத் தமிழ்

, பொருள் வேறுபாடு

அர
பாம்பு
அற
தெளிய, முற்றுமாக
அரவு
பாம்பு
அறவு
அறுதல், தொலைதல்
அரம்
ஒரு கருவி
அறம்
தர்மம், நீதி, கற்பு, புண்ணியம், கடமை, அறநூல், துறவறம்
அரி
திருமால், அரிசி, அழகு, அரிதல், பன்றி, வண்டு, கடல், தகடு, சிவன்
அறி
அறிந்துகொள்
அரிய
கிடைத்தற்கு அரிதான, கஷ்டமான
அறிய
அறிந்துகொள்ள, தெரிந்துகொள்ள
அரன்
சிவன்
அறன்
தர்மம், அறக்கடவுள்
அரிவை
பெண் (7 பருவத்துள் ஒன்று 18 வயதுக்கு மேல் 25 வயதுக் குட்பட்ட பெண்)
அறிவை
அறிவாய்
அருகு
புல்வகை (அருகம்புல்), அண்மை
அறுகு
குறைந்து போதல்
அக்கரை
அந்தக் கரை
அக்கறை
ஈடுபாடு
அரை
பாதி, மேகலை, வயிறு, ஒரு மரம்
அறை
வீட்டின் பகுதி, அடி, பாத்தி, ஒலி, பாசறை, சொல், குகை, வஞ்சனை, மாளிகை
அரைதல்
தேய்தல்
அறைதல்
அடித்தல், சொல்லுதல்
அப்புரம்
அந்தப் பக்கம்
அப்புறம்
பிறகு
அர்ப்பணம்
உரித்தாக்குதல்
அற்பணம்
காணிக்கை செலுத்துதல்
அரு
உருவமற்றது
அறு
துண்டித்துவிடு, அறுத்துவிடு
அருமை
சிறப்பு, அன்பு, இன்மை, சுலபத்தில் கிடைக்காதது
அறுமை
நிலையின்மை, ஆறு
ஆரு
குடம், நண்டு
ஆறு
ஒரு எண், வழி, சமயம், தன்மை, நதி, ஒழுக்கம், பக்கம், நிலை
ஆர
நிறைய, அனுபவிக்க
ஆற
சூடு ஆற (குறைய)
ஆரல்
ஒருவகை மீன்
ஆறல்
சூடு குறைதல்
இரத்தல்
யாசித்தல்
இறத்தல்
இறந்துபோதல், சாதல்
இரகு
சூரியன்
இறகு
சிறகு
இரக்கம்
கருணை
இறக்கம்
சரிவு, மரணம
இரங்கு
கருணைகாட்டு
இறங்கு
கீழிறங்கி வா
இரவம்
இரவு
இறவம்
இறால் மீன்
இரவி
சூரியன், எருக்கு, மலை, வாணிகத்தொழில்
இறவி
இறத்தல்
இரவு
இரவு நேரம், யாசித்தல்
இறவு
மிகுதி, இறால்மீன், இறுதி, தேன்கூடு, சாவு, முடிவு, நீக்கம்
இரை
ஒலி, உணவு
இறை
கடவுள், அணு, அரசன், ரேகை, சந்து, கடமை, தலைமை, விடை, உயரம், மூலை
இரு
இரண்டு, பெரிய, உட்கார், அமர்ந்துகொள்
இறு
ஒடி, கெடு, சொல்லு
இரும்பு
கடிவாளம், கிம்புரி, ஆயுதம், ஓர் உலோகம்
இறும்பு
வண்டு, சிறுமலை
இருப்பு
கையிருப்பு, இருப்பிடம், ஆசனம், நிலை, பொருள், முதல்
இறுப்பு
வடிப்பு
இருத்தல்
அமர்ந்திருத்தல், காத்திருத்தல்
இறுத்தல்
வடித்தல், செலுத்தல், எறிதல், கடன் கொடுத்தல், பதில்கூறல், முடித்தல், முறித்தல்
இருக்கு
மந்திரம், ரிக் வேதம்
இறுக்கு
அழுத்து, இறுக்கிக்கட்டு
இரைத்தல்
ஒலித்தல், மூச்சுவாங்குதல்
இறைத்தல்
சிதறுதல், மிகு செலவு
உரவு
அறிவு, ஒலி, மிகுதி, வலி, ஞானம், விடம்
உறவு
நட்பு, சுற்றம், எறும்பு
உரவோர்
அறிஞர், முனிவர்
உறவோர்
சுற்றத்தார், அடைந்தோர்
உரி
தோல், மரப்பட்டை, அரைப்படியளவு, உரிச்சொல்,கொத்துமல்லி
உறி
உறிவெண்ணெய், தூக்கு
உரு
வடிவம், அழகு, உடல், மரக்கலம், நிறம், அச்சம், பெருமை, மேன்மை
உறு
மிகுதி
உருக்குதல்
இளக்குதல், மெலியச் செய்தல்
உறுக்குதல்
சினத்தல், அதட்டுதல்
உரை
புகழ், விளக்கவுரை, நூல், பொன்மாற்று, அறிவுரை, சொல்
உறை
இடம், பண்டம், பொருள், மருந்து, பாலில் இடும் பிரை, துளி, மழை, ஆடை, துன்பம், பாம்பின் விஷப்பை
உரைப்பு
தங்குதல், தோய்தல்
உறைப்பு
காரம், கொடுமை
உரையல்
சொல்லல்
உறையல்
மாறுபாடு, பிணக்கு
உரிய
உரிமையான
உறிய
உறிஞ்ச
ஊரல்
ஊர்தல், கிளிஞ்சல், ஒருவகைப் பறவை
ஊறல்
தினவு, ஊற்று, சாறு, வருவாய், ஊறுதல், களிப்பு
ஊரு
அச்சம், தொடை
ஊறு
இடையூறு, துன்பம், காயம் உறுதல், தீண்டல், குற்றம், புண், கொலை
எரி
தீ, கார்த்திகை, பிரபை, இடபராசி, நெருப்பு, நரகம், வெம்மை, கந்தகம்
எறி
விடுதல், எறிதல், குறிப்பாகக் கூறுதல்
ஏர
ஓர் உவமஉருபு
ஏற
மிகுதி, உயர (ஏறுதல்)
ஏரி
நீர்நிலை, குளம்
ஏறி
உயர்ந்த, மேலே ஏறி
ஒரு
ஒன்று, ஒப்பற்ற, ஆடு
ஒறு
தண்டி, அழி, இகழ்
ஒருத்தல்
ஆண் விலங்குகளின் பொதுப்பெயர்
ஒறுத்தல்
தண்டித்தல், துன்புறுத்தல், வருத்துதல், வெறுத்தல், கடிதல், இகழ்தல், குறைத்தல்
ஒருவு
நீங்கு
ஒறுவு
வருத்தம், துன்பம்
கரடு
மரக்கணு, மணிக்கட்டு, முருடு, வளர்ச்சியற்றது
கறடு
தரமற்ற முத்து
கரம்
கிரணம், விஷம், செயல், கை, கழுதை
கறம்
கொடுமை, வன்செய்கை


No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News