Thursday, October 8, 2015

உடல் எடையைக் குறைக்கும் வழிமுறைகள்

உடல் எடையைக் குறைக்கும் வழிமுறைகள் நீங்கள் உணவில் கொள்ளு, காராமணி, கம்பு, மொச்சை, பயறு போன்ற தானியங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். குப்பை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அதிகப்படியான உடல் எடை குறையும். வராதி என்றொரு கஷாயம் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும். இவை 200 மி .லி அளவில் கிடைக்கும்.

3 ஸ்பூன் மருந்து + 12 ஸ்பூன் (60 மி .லி) கொதித்து ஆறிய தண்ணீர் + கால் ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை 6 மணிக்கு வெறும் வயிற்றில் சாப்பிடவும். காலையில் மருந்தைச் சாப்பிட்டதும் அரை மணி நேரம் இடது பக்கமாகச் சரிந்து படுத்திருக்கவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து வாய் கழுவி, சூடாகத் தண்ணீரைக் குடிக்கவும். உடல் பருமனைக் குறைக்க இது நல்ல கஷாயம். தயிரைத் தவிர்த்து தெளிந்த மோர் அருந்தவும். தேன் கால் ஸ்பூன் சிறிது தண்ணீரில் கலந்து அல்லது திரிபலா எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சூர்ணம் 1 ஸ்பூன் (5 கிராம்) 80 மி .லி தண்ணீரில் சிறிது கொதிக்கவிட்டு வடிகட்டி ஆறிய பிறகு, கால் ஸ்பூன் தேன் கலந்து காலை, இரவு உணவிற்குப் பிறகு உடனே அருந்த வேண்டும். அதன் பிறகு முன் குறிப்பிட்ட மருந்தைச் சாப்பிடலாம்.

உடற்பயிற்சி மிகவும் அவசியம். காலையில் கஷாயம் குடித்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகு 40 முதல் 45 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சியை மேற்கொள்ளவும். நன்கு வியர்வை வரும்படி நடந்தால்தான் எடை, குறையும். பகல் தூக்கம் தவிர்க்கவும்




1. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

2. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.

3. அறுகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

4. ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.

5. பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

6. கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

7. வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளைச் சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.

8. கரிசலாங்கண்ணி இலையை, பாசிப் பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

9. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்க விடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News