Friday, October 23, 2015

டான்ஸில் வலி குறைய!

டான்ஸில் வலி குறைய!

குழந்தைகளுக்கு டான்ஸில் இருந்து, அதில் வீக்கம் இருந்தால், பனங்கற்கண்டு 1 கப், உலர்ந்த திராட்சை 1 கப், திப்பிலி 6, மிளகு 5-6, பட்டை - சின்ன துண்டு, அதிமதுரம் - சின்ன துண்டு, நெய் 2 ஸ்பூன், தேன் 1 ஸ்பூன் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். பனங்கற்கண்டைப் பொடி செய்து, திராட்சையை அரைத்து வைத்துக்கொள்ளவும். மேலே சொன்ன மருந்துகளை நெய்யில் வறுத்துப் பொடி செய்யவும். வாணலியில் கொஞ்சம் தண்ணீர் விட்டு, பனங்கற் கண்டைச் சேர்த்துக் கொதி வந்ததும், திராட்சைப் பொடியைச் சேர்த்து 1 ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாகக் கிளறவும். லேகியம் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும். கடைசியில் தேன் சேர்க்கவும்.

தொண்டையில் வலி இருக்கும்போது, சுண்டைக்காயைவிட சிறிய உருண்டையைக் கொடுத்து வந்தால் சரியாகிவிடும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News