Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, February 13, 2016

ஆண்கள் செய்யக் கூடாத செயல்கள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆண்கள் செய்யக் கூடாத செயல்கள்
ஆண்மகன் தன் மனைவி கர்ப்பமாய் இருக்கும்,போது,பிரேதத்தின் பின் போகுதல், முடிவெட்டுதல், மலை ஏறுதல், சமுத்திரத்தில் குளித்தல், வீடுகட்டுதல் தூரதேசயாத்திரை செல்லுதல், வீட்டில் விவாகம் செய்தல், சிரார்த்த வீட்டில் புசித்தல் ஆகிய இந்த எட்டுக் காரியங்களையும் செய்யக் கூடாது.

மேலும்,கணவன்,கர்ப்பிணியாய் இருக்கும் மனைவியை எந்த விதத்திலும் துன்புறுத்தவோ, அசிங்கமான வார்த்தை கூறவோ கூடாது. அப்பொழுதுதான் ஆரோக்கியமாய் சுகப்பிரசவமாகும்.
நமது நடைமுறை வாழ்க்கையில் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன அவை,
  1. கன்றுக்குட்டி,மாடு ஆகிய இவற்றைக் கட்டியிருக்கும் கயிற்றைத் தாண்டக் கூடாது
  2. தண்ணீரில் தன் உருவத்தைப் பார்க்கக்கூடாது
  3. நிலையில் அமரக்கூடாது
  4. மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது
  5. தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது
  6. துணி இல்லாமல் குளிக்கக் கூடாது
  7. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது
  8. நெருப்பை வாயினால் ஊதக்கூடாது
  9. அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது
  10. துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷம் ஆகும்
  11. ஆலயத்தில் இரவுநேரத்தில் குளிக்கக்கூடாது,கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம்.
  12. ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது,உதறக்கூடாது
  13. பெண்கள் மாதவிடாய் ஆன நான்கு நாள்கள்வரை,கோவிலுக்குப் போக்ககூடாது


Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top