Saturday, February 13, 2016

திருமண சடங்கு முறை

திருமண சடங்கு முறை

நிச்சயதார்த்தம்: திருமண நாள் உறுதிச் சடங்கு. 

பாதபூஜை: பெற்றோர்களுக்கு மணமக்கள் செய்யும் மரியாதை.

அம்மி மிதித்தல்: குடும்ப கௌரவத்தைக் காப்பாற்ற கற்பில் கருங்கல்லைப் போல உறுதியாக இருப்பேன் என்பதை வலியுறுத்த...

அரசாணி கால்: ஆண் மரம் என கருதப்படும் பூவரசு உறுதி தன்மையாகவும், ஓதியன் மரம் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டதால் குடும்பத்தில் ஆண் உறுதியாகவும், பெண் புகுந்த குடும்பத்தில் வளைந்து கொடுத்து செல்ல வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

அக்னி வளர்த்தல்: ஆணும் பெண்ணும் நெருப்புபோல கற்பைக் காக்க வேண்டும் என்பதற்காக...

மாலை மாற்றுதல்: மணமக்களுக்கு கூச்சம் விலக வேண்டும் என்பதற்காக...

அருந்ததி பார்த்தல்: அருந்ததியைப்போல் கற்போடிருக்க வேண்டும் என்பதற்காக

அக்னி வளர்த்தல்: ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் என்பதற்காக....

மூன்று முடிச்சு: மணமக்கள்க இருவரது மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலும் ஒன்று பட்டு வாழ்ந்திருக்க‍...

மெட்டி அணிதல்: தாம்பத்ய உறவு சிறக்க...

பந்தல் அமைத்தல்: அழகுக்காகவும் திருமணச் சடங்குகள் நடக்கும் இடம் தூய்மையாக இருக்கவும்

வாழைமரம் கட்டுதல்: வாழைமரம் ஒருமுறைதான் குலைபோடும் அதுபோல் எமது வாழ்விலும் திருமணம் ஒருமுறைதான் என்பதை உணர்த்துவதற்காக...

பாக்கு: பாக்கு கொத்துக் கொத்தாகக் காய்ப்பதால் இது தம்பதிகள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்த...

முளைப்பாலிகை போடல்: முளைப்பாலிகை இடுவதன் நோக்கம் திருமணம் செய்து மணமக்களும் அவர்கள் குடும்பமும் முளைவிட்டு பல்கிப் பெருகி வாழ வேண்டும் என்பதற்காக...

அரசாணிக்கல்: அரசனுக்கு ஈடாக வைக்கப்படும் கோல். (அரசு ஆணைக்கோல்)

காப்புக்கட்டுதல்: செயலை(திருமணம்) முடிக்கும் வரை ஓயமாட்டேன் என்பதற்காக...

ஹோமம் வளர்த்தல்: ஹோமப்புகை உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும் அதற்காக....

கும்பம் வைத்தல்: கும்பம் இறைவனின் அடையாளம்

கெட்டிமேளம் கொட்டுதல்: அபச சகுனங்கள் கேட்கக்கூடாது என்பதற்காக...

கைவிளக்கு ஏற்றல்: சகுனத் தடைகள் ஏற்படாமலிருக்க.

நெற்றியில் குங்குமம் வைத்தல்: கூச்சம் நீங்க...

அட்சதை: தீய சக்திகளிடம் இருந்து காப்பதற்கும் வளமான வாழ்க்கை அமைவதற்கும் ஆசீர்வதிப்பதாகும்.

மணமகளின் கையை மணமகன் பிடித்தல்: "நீயும் நானும் முதுமையடைந்து விட்டாலும் கூட ஒருவரை ஒருவர் பிரியாதிருப்போம் என்று கையைப்பிடிகிறேன்" என்பதாகும்.

கணையாழி எடுத்தல்: இருவரும் ஒருவருக்குகொருவர் விட்டுக் கொடுத்து எடுத்தல் வேண்டும். இது தம் வாழ்க்கையிலும் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

ஆரத்தி: கண்திருஷ்டி நீங்கும் பொருட்டும் இவை செய்யப்படுகின்றன.

நிறை நாழி: நித்தமும் குத்து விளக்கு என்று சொல்லக்கூடிய திருவிளக்கருகே வைத்து வழிபட்டால் நற்பேறுகள் பெருகும் என்பது அய்தீகம் ஆகும்.

மறுவீடு: ஒரு பெண்ணிற்கு பிறந்தவீடு வாழ்க்கையும் , புகுந்த வீடு வாழ்க்கையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது . மகளை வாழ்க்கையின் மறுபக்கத்தை காணச் செய்வதற்காவே மறுவீடு.

கன்னிகாதானம்: மணமகளை அவரின் பெற்றோர்தாரை வார்த்துக் கொடுப்பதே ஆகும்.

பால்,பழம் கொடுத்தல்: வாழ்க்கை இனிமையாக இருக்கவேண்டும் என்று உணர்த்தவே இச் சடங்கு நடைபெறுகிறது.

கோ தரிசனம்: மணமக்கள் வாழ்விற்கு வேண்டிய அஷ்ட ஐஸ்வரியங்களையும் வேண்டி பசுவை இலட்சுமிதேவியாக வணங்குவர்.

கைப்பிடித்தல்: ‘நீயும் நானும் முதுமையடைந்து விட்டாலும் கூட ஒருவரை ஒருவர் பிரியாதிருப்போம் என்று கையைப் பிடிக்கிறேன்’

தாரை வார்த்தல்: ” என் மகளை தெய்வங்களின் சாட்சியாக உனக்கு மனைவியாக கொடுக்கின்றேன் “ என மணமகளின் பெற்றோர் , தாரை வார்த்து கொடுக்க மணமகனின் பெற்றோர் உங்கள் மகளை இனி எங்களது மறு - மகள் (மருமகள்) ஆக ஏற்றுக் கொள்கின்றோம் என்பதற்கான உறுதிமொழி .

தாலி கட்டுதல்: தாலி என்பது ஒரு பெண்ணுக்கு அடையாள சின்னமாகும்



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News