Thursday, May 5, 2016

அசுத்த ரத்தத்தால் ஏற்படும் விளைவுகள்

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப்பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள்மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதுதவிர, செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும். முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழி முட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாள்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

நாவல் பழம் தினமும் சாப்பிட்டால்கூட இரத்தம் விருத்தியாகிறது. இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால்கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டும் அல்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

இன்றைய காலக்கட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாக தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.

இதற்கடுத்தது இரத்த அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப்பொடி 12 மணி நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும். மேலும் ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீராகும். இது தவிர அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.

இரத்தக்கட்டுகளுக்கு நிவர்த்தியாக மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும். விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

கறிவேப்பிலையை காய்கறிக்கெல்லாம் தாய்ப்பிள்ளை என்கிறது நம்மூர் நாட்டுப்பாடல். கருவேம்பு, கருவேப்பிலை என்கிறது தமிழ்ப் பேரகராதி. உலுவாவிகச் செடி என்று சித்த வைத்திய அகராதியும், கரிய நிம்பம் என்று தைல வருக்கச் சருக்கமும் கறிவேப்பிலையை குறிப்பிடுகின்றன.

மலை யாளத்தில் கறிவேம்பு, கன்னடத்தில் கறிபீவு, தெலுங்கில் கறிபாகு, வடமொழியில் காலசாகம் என ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் உணவாக இந்த மருந்திலை அறிமுகப்பட்டி ருக்கிறது.

தமிழகத்தில் கறிவேப்பிலை இல்லாத காய்கறிக்கடை இருப்பதில்லை. பெட்டிக்கடைகளின் சில்லறை காய்கறி விற்பனைகளிலும் கறிவேப்பிலை அவசியம் இடம்பிடிக் கிறது. தமிழகத்து அத்தனை சந்தைகளுக்கும் லாரிகளில் கறிவேப்பிலை வந்திறங்குகிறது.

அசைவம், சைவம் என அத்தனை சமையலிலும் கறிவேப்பிலை இருப்பதால், மொத்த மக்களும் இந்த இலையை வாங்கிப்போக மறப்பதில்லை.

சிறு அளவுகளில் இனிப்பு, துவர்ப்புச் சுவையில் வாசமிகு நாட்டுக்குலையும், விரிந்த இலைகளாக குறைந்த வாசனையில் கூடுதல் கசப்புடன் காட்டுக்குலை எனும் மலைக்குலையும் என இருவேறு நிலைகளில் இந்த கறிவேப்பிலை மொத்த வியாபாரிகளுக்கு வந்து, சில்லறை வியாபாரிகளைச் சேர்கிறது. இதில் நாட்டுக்குலை வீட்டுச் சமையலுக்கும், காட்டுக்குலை மருந்திற்கும் போகிறது.

கருவேப்பிலையில் இலை, ஈர்க்கு, பட்டை, வேர் என அத்த னையும் பயனாகிறது. உணவை மணக்க வைக்கிற மகத்தான கறிவேப்பிலை, உடல் நலத்தை நிலைக்கச் செய்கிறது. தாளிப்பில் குழம்பைச் சேர்க்கிற கறிவேப்பிலையை உண்ணும் தட்டிலிருந்து எடுத்து ஒதுக்கிப் போடுகிறோம். மோரைப் பருகிவிட்டு முதலில் வெளியில் துப்புவது கறிவேப்பிலையைத்தான்.

ஒவ்வொரு உணவோடும் இந்த உயிர்ச்சத்து மிக்க கறிவேப்பிலையை கலந்துண்பது ஆரோக்கியம். கருவேப்பிலை நமக்குள் நல்ல ருசியுணர் வுடன் பசி, செரிமானம் நிறைக்கிறது. கறிவேப்பிலையை செரிமான உறுப்பின் நண்பன் என்கிறார்கள். தலைமுடி வளர்ச்சி உள்ளிட்ட அநேக மருத்துவ மேன்மைகள் இந்த இலைக்குள் மறைந்து கிடக்கிறது.

இது வயிற்று வாயுவை பிரித்து மலவாயுக் கட்டு ஏற்படாமல் பாதுகாக்கும். கறிவேப்பிலையுடன் சுட்ட புளி, வறுத்த உப்பு, மிளகாய் சேர்த்தரைத்த துவையல் சாப்பிட குடல் பலம் பெறும்.

பித்தத்தை தணித்து உடல் சூட்டை அகற்றும், குமட்டல், சீதபேதியால் வரும் வயிற்று உழைவு, நாட்பட்ட காய்ச்சல் நீக்கும், பித்த மிகுதியால் வந்த பைத்தியத்தையே இந்த கறிவேப்பிலை போக்கும் வலிமை கொண்டிருக்கிறது என சித்தா வாசுட நூல் தெரிவிக்கிறது. இலை, பட்டை, வேரில் செய்த கசாயத்தை குடித்தால் பித்தமும், வாந்தியும் போகுமாம்.

நிழலில் உலர்த்திய, கறிவேப்பிலையுடன், மிளகு, உப்பு, சீரகம், சுக்கு சேர்த்து பொடியாக்கி, சோற்றுடன் நெய் கலந்து சாப்பிட மலக்கட்டு முதல் பேதி, கழிச்சல் வரை அத்தனை வயிற்று உபாதைகளும் சரியாகும் என்கிறது நாட்டு வைத்தியம்.

இன்னும், குடல் கிருமிகளை அழிக்கும் திறன் பெற்றுள்ள இந்த இலைக்கு, கண்பார்வையை தெளிவடையச் செய்யும் வல்லமையும் இருக்கிறது. தலைமுடி நரைக்காது காத்து, நரைத்த முடிகளையும் கருமையாக்கி மயிர்க்கால்களை வலுவூட்டும் சக்தி கறிவேப்பிலைக்குள் இருக்கிறது.

Popular Feed

Recent Story

Featured News