Friday, May 6, 2016

ஆறுசுவைகள்

ஆறுசுவைகள் :
  1. இனிப்பு sweet 
  2. புளிப்பு sour
  3. உவர்ப்பு salt
  4. கார்ப்பு pungent
  5. கசப்பு bitter
  6. துவர்ப்பு astringent
சுவைகளும் அதன் பயன்களும் :
  1. இனிப்பு - தசையை வளர்க்கும் 
  2. புளிப்பு - தேவையான கொழுப்பை தரும் 
  3. உவர்ப்பு - தேவையான உமிழ் நீரை சுரக்க செய்யும் 
  4. கார்ப்பு - எலும்புகளை வலுவாக்கும் 
  5. கசப்பு - நரம்புகளை வலுபடுத்தும் 
  6. துவர்ப்பு - இரத்தம் சுத்தம் செய்யும்
உணவுகளும் அதன் சுவைகளும்

  1. இனிப்பு உணவுகள் - கரும்பு , காரட் , பீட்ரூட் , அரிசி , வெல்லம் , கோதுமை பரங்கிகாய்
  2. புளிப்பு உணவுகள் - எலுமிச்சை , தக்காளி ,புளி, மாங்காய் , தயிர் , மோர் , நார்த்தங்காய்
  3. உவர்ப்பு உணவுகள் - வாழைத்தண்டு , பூசணி , முள்ளங்கி , சுரக்காய் , பீக்கங்காய்
  4. கார்ப்பு உணவுகள் -மிளகு, கடுகு , மஞ்சள் , மிளகாய் , வெங்காயம் , பூண்டு
  5. கசப்பு உணவுகள் - பாகற்காய் , சுண்டக்காய் , கத்திரிக்காய், வெந்தியம் , எள் , வேப்பம்பூ
  6. துவர்ப்பு உணவுகள் - மாதுளை , வாழைக்காய் , மாவடு , நெல்லிக்காய் , அத்திக்காய் , அவரை

உணவின் நேரமும் அதன் அளவும் (முறை) :

எப்போதும் உணவை உண்ணும் போது இதை கவணத்தில் கொள்ளவேண்டும்

  • உணவு - அரை வயிறு (பங்கு)
  • நீர் - கால் வயிறு (பங்கு)
  • காலி - கால் வயிறு (பங்கு)

அதை போல ஒரு நாளைக்கு இரு வேலைதான் உண்ண வேண்டும் கீழ் வருமாறு

  •      காலை 9 - 10 am மாலை 7 - 8 pm

முடியாத பட்சத்தில் மூன்று வேலை உண்ணலாம் கீழ் வருமாறு

  • காலை 7 - 8 am
  • மதியம் 12 - 1 pm
  • மாலை 7 - 8 pm

தண்ணீரை மென்று தின்னவேண்டும் (அதாவது மெதுவாக ரசித்து ருசித்து துளி துளியாக பருக வேண்டும்)

உணவை குடிக்க வேண்டும் (அதாவது உணவு வாயில் இருக்கும் போதே கூழாக மென்று பின்பு மெதுவாய் ரசித்து ருசித்து விழுங்க வேண்டும்)

இப்படியெல்லாம் சாப்பிட்டால் நம் பாக்கெட்டில் 100 வயது !

Popular Feed

Recent Story

Featured News