Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 22, 2016

வாஸ்து சாஸ்திரம் = முக்கிய பலன்கள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
வாஸ்து சாஸ்திரம் = முக்கிய பலன்கள்

மேற்குத் திசை உயரமாகவும், கிழக்குத்திசை பள்ளமாகவும் இருந்தால் செல்வந்தராக்கி விடும்.

கிழக்கு மேடாகவும், மேற்கு பள்ளமாகவும் இருந்தால், ஏழையாக்கி விடும். தரித்திரம் ஏற்படும்.

வடக்கு மேடாகவும், தெற்கு பள்ளமாகவும் இருந்தால், வீட்டுத் தலைவனுக்கு மிகத் தீயதைக் கொடுக்கும். கண்டங்கள் ஏற்படும்.

தெற்கு உயரமாகவும், வடக்கு பள்ளமாகவும் இருந்தால், செல்வ வளர்ச்சியைக் கொடுக்கும்.

ஈசான்யம் உயரமாகவும், கன்னி மூலை பள்ளமாகவும் இருந்தால், பல துயரங்களில் ஆழ்த்தி விடும். சந்ததிகளுக்குக் கண்டங்கள் உண்டாகும்.

அக்னி மூலை மேடாகவும், வாயு மூலை பள்ளமாகவும் இருந்தால், நல்லவை நடக்கும். பெண்களுக்கு ஆரோக்கியம் ஏற்படும்.

வாயு மூலை மேடாகவும், அக்னி மூலை பள்ளமாவும் இருந்தால், அவ்வீட்டில் தீ விபத்து, திருட்டு போன்றவை ஏற்படும்.

கன்னி மூலை உயரமாகவும், ஈசான்யம் பள்ளமாகவும் இருந்தால், மிக்கசெல்வ வளர்ச்சியும், புகழும் உண்டாகும். ஆரோக்கியம் கூடும்.

கிழ்க்கு, அக்னி மூலை ஆகியவை உயரமாகவும், வாயு மூலையும் மேற்கும் பள்ளமாகவும் இருந்தால், துயரத்திலும், சிக்கலிலும் ஆழ்த்தி விடும்.

அக்னி மூலையும், தெற்கும் உயரமாகவும், வாயு மூலையும், வடக்கும் பள்ளாமாகவும் இருந்தால் பல வகை லாபங்கள் ஏற்படும்.

தெற்கும் தென்மேற்கும் உயரமாகவும், வடக்கும், ஈசான்யமும் பள்ளாமாகவும் ஆனால் அவ்வீட்டில் இருப்பவரை லட்சாதிப்துயாக்கி விடும். நீண்டாஆயுள், சந்தாம விருத்தி ஏற்படும்.

தென்மேற்கும் (கன்னி) மேற்கும் உயரமாகவும் இருந்தால் பல வழிகளில் நன்மைகள் உண்டாகும்.

வாயு மூலையும், மேற்கும் உயர்ந்து, அக்னி மூலையும் கிழக்கும் தாழ்ந்து இருந்தாலும், பகைவரையும் துயரத்தையும் ஏற்ப்டுத்தும். தீ அபாயங்களை ஏற்படுத்த்ய்ம்.

வடக்கும், வடமேற்கும் உயர்ந்தும், தெற்கும், அக்னி மூலையும் பள்ளமாகவும் இருந்தால் நோய்கள் வாட்டும். நீண்டகால வியாதிகள் தோன்றும்.

வடக்கும், வடமேற்கும் உயர்ந்தும், தெற்கும் தென்மேற்கும் பள்ளமாகவும் இருந்தால், தீய நடவடிக்கையில் ஈடுபடுத்தி விடும். சிறைத் தண்டனை கிடைக்க நேரிடும்.

கிழக்கும், ஈசான்யமும் உயரமாகவும்,மேற்கும், தென்மேற்கும் பள்ளமாவும் இருந்தால் சந்ததி விருத்தி கிடையாது. இருந்தானும், நோய்களில் ஆழ்த்தி விடும்.

கன்னி மூலை, வாயு மூலை மற்றும் ஈசாக்ய மூலை மூன்றும் உயரமாகவும் அக்னி மூலை பள்ளமாகவும் இருந்தால், தீ விபத்தினால் பல இழப்புகள் ஏற்படும். கொடுமையான பலன்கள் கொடுக்கும்.

மேற்கும், கன்னி மூலை, அக்னி மூலையும் உயரமாகவும், வாயு மூலை பள்ளமாகவும் இருந்தால் தரித்திரராவார். நோய்களை ஏற்படுத்தும்.

ஈசான்யத் திசையும், அக்னி மூலையும், கன்னி மூலையும் உயரமாகவும். மேற்குவாயு மூலை பள்ளமாகவும் இருந்தால் மிகத் தீய பலன் களை ஏற்படுத்தும்.

அக்னி மூலை உயர்ந்தும் மற்ற அனைத்து மூலைகமள், திசைகள் பள்ளமாகவும் இருந்தால்,செல்வ வளர்ச்சியும், குடும்ப அமைதியும் ஏற்படும். பல நன்மைகள் ஏற்படும்.

கன்னி மூலை உயர்ந்து மற்ற அனைத்து மூலைகள், திசைகள் பள்ளமாகவும் இருந்தால், செல்வ வளர்ச்சியும், குடும்ப அமைதுயும் ஏற்படும். பல ந்ன்மௌகள் ஏற்படும்.



Post Comments

Popular Feed

Recent Story

Featured News

Back To Top