Monday, July 18, 2016

விரோதவணி

33. விரோதவணி

விரோதவணி அல்லது விரோத அணி என்பது யாப்பிலக்கணத்தில் காணப்படும் முரண் தொடையின் அணியிலக்கண உருப்பாகும். யாப்பிலக்கணமும் அணியிலக்கணமும் ஒன்றிற்கொன்று கலந்திருப்பதனையும் இவ்வுதாரணம் காட்டுகின்றது.


"மாறுபடு சொல், பொருள், மாறுபாட்டு இயற்கை,
'விளைவு தர உரைப்பது விரோதம் ஆகும்." (தண்டியலங்காரம் 82

விளக்கம்
ஒரே செய்யுளுக்குள் மாறுபட்ட சொற்களையோ, பொருளையோ கொண்டிருப்பது

அணியின் வகைகள்
1.                   சொல் விரோதம்
2.                   பொருள் விரோதம்
3.                   சிலேடை விரோதம்

எடுத்துக்காட்டு1
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

மேற்கண்ட குறளில் கெடுப்பதூஉம், எடுப்பதூஉம் என்பது விரோத சொற்கள் என்பதால் இது சொல் விரோத அணியாகும்.

பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.


மேற்கண்ட குறளில் என்பது பொய்ம்மையும் வாய்மை விரோத பொருள்கள் என்பதால் இது பொருள் விரோத அணியாகும்.

Popular Feed

Recent Story

Featured News