Monday, May 15, 2017

எஸ்பிஐ வங்கியின் புதிய கட்டண அறிவிப்புகள்.. ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது.!

சென்னை: கடந்த வாரம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம்-இல் பணம் எடுக்கப்படும் ஒவ்வொரு

முறையில் 25 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதன் பின் அந்த அறிவிப்புக்குக் குறித்து விரிவான விளக்கத்தையும் எஸ்பிஐ வங்கி வெளியிட்டுக் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இந்நிலையில் ஜூன் 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட உள்ள எஸ்பிஐ வங்கியின் புதிய கட்டணங்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.



ஏற்கனவே வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும், இல்லையெனில் அபராத கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான எஸ்பிஐ வங்கி அறிவிப்பின் மூலம் தற்போது புதிய கட்டணங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எந்தக் கணக்கிற்கு..?


ஜூன் 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்படும் புதிய கட்டணம் basic savings banks deposit accounts (BSBDA) எனப்படும் அடிப்படை கணக்கிற்கு மட்டுமானது. இதுவே சாமானியர்கள் அதிகளவில் வைத்திருக்கும் கணக்காகும்.
பண வைப்பு


உங்கள் வங்கி கணக்கு இருக்கும் வங்கிகளில் மாதத்திற்கு 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் 50 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஏடிஎம் பயன்பாடு


இலவச முறைகளுக்கும் அதிகமாக ஏடிஎம்களில் பணத்தை எடுப்பதற்குத் தற்போது புதிய கட்டணத்தை அறிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் எடுத்தால் 10 ரூபாய் மற்றும் சேவை வரி.

பிற வங்கி ஏடிஎம்களில் எடுத்தால் 20 ரூபாய் மற்றும் சேவை வரி கட்டணமாக வசூலிக்கப்படும்.


இலவச முறைகளில் மாற்றமில்லை


நகரங்களில் இருக்கும் வங்கி கணக்குகளுக்கு 5 முறை எஸ்பிஐ ஏடிஎம்களிலும் 3 முறை பிற ஏடிஎம்களிலும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

நகரங்கள் அல்லாத ஏடிஎம்களில் 10 முறை, அதாவது எஸ்பிஐ ஏடிஎம் மற்றும் பிற வங்கி ஏடிஎம்களில் தத்தம் 5 முறை பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.


செக் புக்


ஜூன் 1 முதல் BSBDA கணக்கின் உரிமையாளர் 10 காசோலைகளைக் கொண்ட செக் புக் வாங்க 30 ரூபாயும், 25 காசோலைகளைக் கொண்ட புத்தகத்திற்கு 75 ரூபாயும், 50 இலைகளைக் கொண்ட புத்தகத்திற்கு 150 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

இவை அனைத்திற்கும் சேவை வரித் தனியாக வசூலிக்கப்படும்.


எஸ்பிஐ பட்டி வேலெட்

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது Buddy e-wallet பயனாளர்களுக்கு ஏடிஎம் வித்டிராவல் சேவையை 25 ரூபாய் கட்டணத்துடன் அறிமுகம் செய்துள்ளது.

எஸ்பிஐ பட்டி வேலெட் வாடிக்கையாளர்கள் 2000 ரூபாய் வரையில் 100 ரூபாய் தாள்களில் பணத்தைப் பெற்றால் 2.50 சதவீதம் அல்லது குறைந்தபட்சம் 6 ரூபாய் கட்டணத்தை வசூலிக்கப்படும்.

பணத்தை வைப்பு செய்யும் போது 10,000 ரூபாய் வரை டெப்பாசிட் செய்வோருக்கு 2 ரூபாயில் இருந்து 8 ரூபாய் வரையிலான கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதற்குச் சேவை வரி தனி.


IMPS பணப் பரிமாற்றம்


இண்டர்நெட் பாங்கிங், மொபைல் பாங்கிங், யூபிஐ, யூஎஸ்எஸ்டி முறையில் IMPS பணப் பரிமாற்றம் செய்யப்படும் போது 1 லட்சம் ரூபாய்க்கு 5 ரூபாய் என்ற வீதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

1 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான தொகைக்கு 15 ரூபாயும், 2 லட்சத்திற்கு மேல் 25 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

Popular Feed

Recent Story

Featured News